முறைகேடான பைக் ஸ்டன்டால் தீபாவளி அன்று 7 வயது சிறுமி உயிரழப்பு..!!
முறைகேடான பைக் ஸ்டன்டால் தீபாவளி அன்று 7 வயது சிறுமி உயிரழப்பு..!!
தீபாவளியை உலகமே உற்சாகமாக கொண்டாடி கொண்டு இருக்க, அந்த நாள் ஒரு குடும்பத்தினருக்கு சோக தினமாக அமைந்தந்து.

பெங்களூரில் தீபாவளி அன்று ஒரு இளைஞரின் முறைகேடான பைக் ஸ்டன்டால், 7 வயது சிறுமி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தாயாடைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
பெங்களூரில் உள்ள சிக்காஜலாவில் பகுதியில் சிறுமி சஹானா பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடிக்கொண்டு இருந்தாள்.

அப்போது அதே பகுதியில் வசிப்பதாக சொல்லப்படும் ராஜூ என்ற இளைஞர் பைக் ஒன்றில் வீலிங் போன்ற ஸ்டண்ட் செய்ய முற்பட்டுள்ளார்.

வீலிங்கிற்காக பைக்கை மேல தூக்கும்போது, அது எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் இயங்கி பட்டாசுகளை வெடித்துக்கொண்டு இருந்த சிறுமி சஹானா மீது மோதியது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், ரத்தகாயங்களுடன் காணப்பட்ட சஹானாவை பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர் ராஜூ, சம்பவ இடத்தில் அப்போது காணப்படவில்லை. படுகாயங்கள் அடைந்த சஹானாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதே நேரத்தில் விபத்தை குறித்து அறிந்த போலீசார், குற்றவாளியான ராஜூவை தேடி கண்டுபிடித்தனர்.
பிறகு அவனது வயதை உறுதிப்படுத்திக்கொள்ள மருத்துவ பரிசோதனையை போலீசார் மேற்கொண்டனர்.

அதீத காயங்கள் மற்றும் அதிகளவில் ரத்தம் வெளியேறிய காரணத்தால் சிறுமி சஹானா மரணமடைந்தாள். இளைஞர் ராஜூ போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

தேசியளவில் முறைகேடாக நடைபெறும் இதுபோன்ற பைக் ஸ்டண்டுகளை தடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ஆனால் அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படாமல், முறைகேடான ஸ்டன்டுகளால் உயிரழப்புகள் தான் அதிகரிக்கின்றன.

இந்த செய்தியை படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் பைக் ரைடிங்க் மீதும், பைக் ஸ்டென்டுகள் மீது ஆர்வம் கொண்டவாராக இருந்தால்.

டிரைவ்ஸ்பார்க் உங்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, போக்குவரத்து விதிகளை பின்பற்றி, முழு பாதுகாப்பு மற்றும் மேற்பார்வைஉடன் பைக் ஸ்டென்டுகளில் ஈடுபடுங்கள்.

முறைகேடான பைக் ஸ்டென்டுகளில் ஈடுபடுபவர்களை பார்த்தால், அவர்களை கண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். பாதுகாப்பான பைக் ரைடிங்கை குறித்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications