மாடிஃபிகேஷன் செய்வோர்கள் கவனத்திற்கு: உங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் என்பதை அறிவீர்களா?

மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார் ஒன்று போக்குவரத்துத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

சாலையில் செல்லும் கோடிக்கணக்கான வாகனங்கள் மத்தியில் தங்களுடைய வாகனம் தனித்துத் தெரிய வேண்டும் என்ற ஆசையிலும், ஆர்வத்திலும் இன்று பலரும் தங்கள் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 மாடிஃபிகேஷன் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்..!!

ஆனால் மாடிஃபிகேஷன் செய்வதில் சில வரைமுறைகள் உள்ளன என்பதனை மறந்து விட்டு தங்கள் இஷ்டம் போல் மாடிஃபை செய்துவிட்டு பின்னர் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கைக்கு ஆளாகின்றனர். இதைப்போன்று ஒரு சம்பவம் குறித்து தான் நாம் இங்கே காண இருக்கின்றோம்.

 மாடிஃபிகேஷன் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்..!!

விலையுயர்ந்த அமெரிக்கன் லிமோசின் போன்று மாற்றி ரீ-டிசைன் செய்யப்பட்ட நிசான் நிறுவனத்தின் டீனா எக்ஸ்எல் மாடல் கார் ஒன்றினை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மும்பையில் பறிமுதல் செய்துள்ளனர்.

 மாடிஃபிகேஷன் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்..!!

'PB 08 CB 0007' என்ற பஞ்சாப் மாநில பதிவு எண் கொண்ட அந்தக் கார், மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் சினிமா பட ஷூட்டிங்கிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அந்தேரி வட்டார போக்குவத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 மாடிஃபிகேஷன் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்..!!

நிசான் நிறுவனத்தின் டீனா எக்ஸ்எல் என்ற எஸ்யூவி மாடலான இதனை உலகின் மிக நீளம் கொண்ட காராக கருதப்படும் அமெரிக்க லிமோசின் போல் மாற்றியமைத்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 4,885மிமீ நீளம் கொண்ட இந்தக் காரை 7,200 மிமீ நீளம் கொண்டதாக ரீ-டிசைன் செய்துள்ளனர்.

 மாடிஃபிகேஷன் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்..!!

மேலும், இதன் வீல் பேஸ், காரின் எடை உள்ளிட்டவையும் அங்கீகரிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் சோஃபா செட், எல்ஈடி டிவி, எல்ஈடி விளக்குகள், பார் அமைப்பு உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

 மாடிஃபிகேஷன் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்..!!

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி குறிப்பிட்ட அளவுகளில் வாகனங்களை ரீ-டிசைன் செய்து கொள்ளலாம். என்றாலும் அதனை விடவும் கூடுதலாக மாற்றங்களை மேற்கொள்ளும் போது ஆட்டோமோடிவ் ரிசேர்ச் அஸோசியேசன் ஆஃப் இந்தியா மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் இதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறை.

 மாடிஃபிகேஷன் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்..!!

ஆக, லிமோ போன்று ரீ-டிசைன் செய்யப்பட்ட நிசான் டீனா எக்ஸ்எல் கார் பதிவுச் சான்று பெறாததும், அதனை சாலைகளில் ஓட்டுவதும் சட்டவிரோதம் என்பதால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதனை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

 மாடிஃபிகேஷன் செய்ததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்..!!

மாடிஃபிகேஷன் செய்பவர்கள் இதனை மனதில் கொண்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதனை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

via HINDUSTAN TIMES

Most Read Articles
English summary
Read in Tamil about Customisation done nissan teana xl car seized for altering as limousine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X