மஹிந்திரா கார்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்...?!

நம் நாட்டின் பயணிகள் வாகன தயாரிப்பில் மிகச்சிறந்த நிறுவனம் என்ற பெயரை மஹிந்திரா தக்க வைத்து வருகிறது. கட்டுறுதிமிக்க யுட்டிலிட்டி ரக பயணிகள் வாகனங்கள் மூலம் லட்சோப லட்சம் மக்களின் கைகளில் தவழ்வதோடு, மஹிந்திராவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களும் இருக்கின்றனர்.

இந்தநிலையில், மஹிந்திரா கார்கள் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்களின் டிசைனில் சிறிய மாற்றங்களை செய்து அதற்கு மேலும் கம்பீரத்தையும், அழகையும் கூட்டியுள்ளார் எமது ஆங்கில எடிட்டர் சந்தோஷ் ராஜ்குமார். அவரது கைவண்ணத்தில் மஹிந்திரா வாகனங்களில் செய்யப்பட்டிருக்கும் சிறிய மாறுதல்கள் மூலம் மென்மையாகவும், அழகாகவும் மாறியிருக்கும் மஹிந்திராவின் 5 வாகனங்களை ஸ்லைடரில் காணலாம்.


பென்சில் ஸ்கெட்ச்

பென்சில் ஸ்கெட்ச்

பென்சில் ஸ்கெட்ச் முறையில் வரையப்பட்ட படங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

மஹிந்திரா வெரிட்டோ வைப்

மஹிந்திரா வெரிட்டோ வைப்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா வெரிட்டோ வைப் நாட்ச்பேக் காரின் டிசைன் பல வாடிக்கையாளர்களை கவரவில்லை. தற்போது வரும் கார்களில் இருக்கும் நளினம் இல்லாமல், பெட்டி போன்று காட்சி தருகிறது. குறிப்பாக, டெயில்லைட்டுகளின் டிசைன் காரின் அழகை கூட்டவில்லை. சந்தோஷ் ராஜ்குமார் கைவண்ணத்தில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும் வெரிட்டோ வைப் காரை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

வெரிட்டோ வைப் - மாற்றங்கள்

வெரிட்டோ வைப் - மாற்றங்கள்

ஓர் முழுமையான நாட்ச்-பேக் காராக மாற்றப்பட்டிருந்தால், இப்படித்தான் இருந்திருக்கும் வெரிட்டோ வைப். ஏற்கனவே சர்வதேச அளவில் விற்பனையில் இருந்த ஃபோர்டு ஃபோகஸ் மற்றும் ஹோண்டா சிஆர்- வி டெயில் லைட்டுகளை மனதில் வைத்து அவ்வாறு வடிவமைத்துவிட்டனர். ஆனால், அது எடுபடவில்லை. பழைய டிசைன் என்ற தோற்றத்தை கொடுத்துவிட்டது. டெயில் லைட்டுகள் மட்டுமின்றி, பூட் ரூம் டிசைன் நாட்ச்பேக் போன்று மாற்றப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஸ்பாய்லரும் கொடுத்து இந்த காரின் தோற்றத்தில் மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது.

 2.மஹிந்திரா பொலிரோ

2.மஹிந்திரா பொலிரோ

வெரிட்டோ வைப் போன்று கிடையாது மஹிந்திரா பொலிரோ. விற்பனையில் சக்கை போடு போட்டு வருவதோடு, சிறந்த கட்டுமானம் கொண்ட மாடல். விரைவில் இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வர இருக்கிறது. இந்தநிலையில், முகப்பில் சிறிய மாறுதல்களை செய்து அழகை கூட்டியிருக்கிறார் சந்தோஷ். அதனை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

பொலிரோ- மாற்றங்கள்

பொலிரோ- மாற்றங்கள்

இரட்டை கிரில் அமைப்பு, ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டிருப்பதுடன், பெரிய டயர்களுடன் பொலிரோவை மாற்றியிருக்கிறார் சந்தோஷ். 5 ஸ்போக் அலாய் வீல்களுடன் ராலி கார்கள் போன்ற மட் ஃப்ளாப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், முகப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது.

3. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

3. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

முண்டியடித்து முன்பதிவு செய்த இந்த எஸ்யூவி மாடல் மஹிந்திராவின் சர்வதேச அளவிலான வர்த்தக வெகுவாக கைகொடுத்து வருகிறது. மிக கம்பீரமான டிசைன்தான் இந்த எஸ்யூவியின் மிக முக்கிய பலம். ஆனாலும். இதன் முகப்பில் சிறிய மாற்றங்களை செய்தால் இன்னும் அருமையாக இருக்கமே என்ற எண்ணத்தில் சந்தோஷ் செய்திருக்கும் மாற்றங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 எக்ஸ்யூவி 500- டிசைன் மாற்றங்கள்

எக்ஸ்யூவி 500- டிசைன் மாற்றங்கள்

மிக எளிமையான முகப்புக்கு சந்தோஷ் மாற்றியிருக்கிறார். கிரில், ஏர் இன்டேக்குகளில் வலை கொடுத்துள்ளார். மேலும், எல்இடி பகல்நேர விளக்குகளும் மிக எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிறிய மாற்றங்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி 500வை புதிய மாடலாக காட்சி தருவதை காணலாம்.

4 மஹிந்திரா வெரிட்டோ

4 மஹிந்திரா வெரிட்டோ

டாக்ஸி முத்திரை குத்தப்பட்டுவிட்ட மஹிந்திரா வெரிட்டோ காரின் பெட்டி போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதே தனிநபர் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவில்லை. ஆனால், இந்த காரில் சிறிய மாற்றங்களை செய்து ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கலாம் என தெரிவித்த சந்தோஷ், அதனை எப்படி மாற்றியுள்ளார் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

வெரிட்டோ- மாற்றங்கள்

வெரிட்டோ- மாற்றங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட், கிரில் மற்றும் ஏர்டேம் டிசைனில் மாற்றங்களை செய்துள்ளார் சந்தோஷ். கிரில், ஏர்டேமில் வலையை பொருத்தி டிசைனில் மாற்றங்களை செய்துள்ளார். லோ- புரோஃபைல் டயர்கள், பெரிய அலாய் வீல்கள் என சிறிய மாற்றங்கள் மூலம் ஸ்போர்ட்டியான தோற்றத்துக்கு மாற்றியுள்ளார்.

5. மஹிந்திரா குவான்ட்டோ

5. மஹிந்திரா குவான்ட்டோ

குவான்ட்டோவின் டிசைனில் இருக்கும் சில குறைகளை தவிர்த்திருந்தால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கலாம். முகப்பை பொறுத்தவரை குறை இல்லை. ஆனால், டால் பாய் டிசைன் கொண்ட இந்த காருக்கு சிறிய அளவிலான வீல்கள், பெரிய டெயில்கேட் போன்றவை காரின் தோற்றத்தை கெடுப்பதாக அமைந்துவிட்டது. அதனை சரிசெய்தால் எப்படி இருக்கும். அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 குவான்ட்டோ மாற்றங்கள்

குவான்ட்டோ மாற்றங்கள்

ரியர் ஃபென்டரை சிறிது தூக்கலாக மாற்றி பெரிய வீல்கள், ஃப்ளாட் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், டெயில் கேட்டின் உயரம் குறைக்கப்பட்டு சிறிய மாறுதல்கள் மூலம் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். இப்போது குவான்ட்டோவின் தோற்றம் வெகுவாக மாறி போயிருப்பதை காணலாம்.

கருத்து

கருத்து

சந்தோஷ் ராஜ்குமாரின் கைவண்ணத்தில் மஹிந்திரா பயணிகள் வாகனங்கள் எவ்வாறு மாறியிருக்கின்றன? உங்களது மேலான கருத்துகளை எதிர்நோக்குகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 12, 2014, 10:13 [IST]
English summary
After all, despite crores and crores going into automobile research and design, one feels designers have missed a trick or two. While the original cars in question are not downright ugly or anything, the following are some simple ideas that might potentially improve the looks of these products.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+