வண்டி நம்பர் பிளேட்ல 9 இருந்தா என்ன நடக்கும் தெரியுமா? ஜோசியக்காரங்க கூட இந்த விஷயத்தை சொல்ல மாட்டாங்க!
புதிய காரை வாங்குவது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய வேலை. தற்போது சந்தையில் ஏராளமான கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதில், நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், மிக சிறந்த ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். எனினும் இணையத்தில் விவரங்களை தேடி பிடித்து, நண்பர்கள்/தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரித்து, ஒரு வழியாக எந்த காரை வாங்குவது? என்ற முடிவுக்கு வந்து விடலாம். புதிய காரை வாங்கிய பிறகு இருக்கும் மிகப்பெரிய வேலை, அதிர்ஷ்டகரமான பதிவு எண்ணை தேர்வு செய்வதுதான். எண்களில் என்ன இருக்கிறது? என ஒரு சிலர் நினைக்கலாம்.
ஆனால் அனைவரும் அப்படி நினைப்பதில்லை. இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான மக்கள், அதிர்ஷ்டகரமான எண்களுக்கு அதிக முக்கியத்தும் வழங்குகின்றனர். குறிப்பாக '9' என்ற எண்ணுக்கு அதிக 'டிமாண்ட்' உள்ளது. ஒரு சிலர் தங்கள் வாகனத்தின் பதிவு எண் '9999' என்று இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இல்லாவிட்டால் அனைத்து எண்களையும் கூட்டினால், '9' என்ற எண் வரும் வகையில் பார்த்து கொள்கின்றனர். 5400, 6300, 8100 போன்ற பதிவு எண்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த எண்களை கூட்டினால், '9' என்ற எண் வரும். சரி, '9' என்ற எண்ணில் அப்படி என்ன இருக்கிறது? என நீங்கள் நினைக்கலாம்.
'9' என்ற எண், அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் வளம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. தங்கள் காரின் நம்பர் பிளேட்டில் '9' என்ற எண் இருந்தால், நல்லது நடக்கும் என பலரும் நினைக்கின்றனர். அதாவது '9' என்ற எண் இருந்தால், வாழ்க்கையில் புதிய உச்சங்களை தொட முடியும் என்பது அவர்களுடைய எண்ணம்.

மேலும் இந்த எண் இருந்தால்தான், பயணங்கள் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் பலர் நினைக்கின்றனர். நியூமராலஜிப்படி பார்த்தால், '9' என்ற எண், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றிகளை தேடி தரும் என நம்பப்படுகிறது. எனவே இந்த எண் இருந்தால், பாஸிட்டிவ்-ஆன விஷயங்கள் நடக்கும் என்பது பலரின் நம்பிக்கை.
அத்துடன் ஒரு சில மதங்களில் '9' என்ற எண் மிகவும் முக்கியமானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் இந்து மதத்தை பொறுத்தவரையில், '9' என்ற எண் மிகவும் புனிதமானது. அத்துடன் இந்து மதத்தின்படி, அது மன நிறைவு மற்றும் தெய்வீக சக்தி ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
இந்து மதத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்து ஜோதிட சாஸ்திரங்களின்படி, நவ கிரகங்கள் (9 கிரகங்கள்), ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஒரு மனிதனின் தலைவிதியை தீர்மானிப்பதே இந்த நவ கிரகங்கள்தான் என்பது நம்பிக்கை.
அத்துடன் '9' என்ற எண், இந்து மதத்தின் ஆக்கும் கடவுளான பிரம்மாவுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. அவர் 9 நாட்களில்தான் பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்பது நம்பிக்கை. இந்து மதத்தில் '9' என்ற எண் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதற்கு இவை எல்லாம் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.
இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணாக இருப்பதால், அம்மதத்தை பின்பற்றுபவர்களின் வாழ்க்கையிலும், '9' என்ற எண் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே புதிய கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு '9' என்ற எண் வரும் வகையிலான பதிவு எண்ணை பெறுவதற்கு எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவழிக்க பலரும் தயாராக உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: '9' என்ற எண்ணுக்கு, இந்திய மக்கள் மனதில், தனி இடம் உள்ளது. இனிமேல் சாலையில் ஏதாவது ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டில் '9' என்ற எண்ணை நீங்கள் பார்த்தால், அதை வெறும் எண்ணாக மட்டும் கருத வேண்டாம். ஏனெனில் அது ஏராளமான அர்த்தங்களை கொண்டதாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








