வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

காரின் வீல் அலைன்மெண்ட் சரியாக இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

நீங்கள் மெக்கானிக் ஷாப்பிற்கு செல்லும்போதெல்லாம் வீல் அலைன்மெண்ட் (Wheel Alignment) என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருக்க கூடும். ஆனால் வீல் அலைன்மெண்ட் என்றால் என்ன? அது ஏன் மிகவும் முக்கியமானது? என்ற கேள்விகளுக்கு பலருக்கும் பதில் தெரிவதில்லை. உங்களுக்கும் இந்த சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில், இன்று அவை நிவர்த்தியாகி விடும்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

எளிமையாக சொல்வதென்றால், உங்கள் காரின் 4 வீல்கள் மற்றும் டயர்களும் சரியாக ஒரே திசையில் ரோல் ஆவதை உறுதி செய்வதுதான் வீல் அலைன்மெண்ட். சில சமயங்களில் உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் சரியாக இருக்காது. வீல் அலைன்மெண்ட் சிறிய அளவில் சரியாக இல்லாவிட்டாலும் கூட, உங்கள் காரின் செயல்திறன் மற்றும் கையாளுமை பாதிக்கப்படும்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

எனவே எந்தவொரு கார் என்றாலும் வீல் அலைன்மெண்ட் மிகவும் சரியாக இருப்பது அவசியம். வீல் அலைன்மெண்ட் சரியாக இருந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

மைலேஜ் அதிகரிக்கும்

உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் எரிபொருள் சிக்கனத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. சரியாக அலைன்மெண்ட் செய்யப்பட்ட வீல்கள், பவர் மற்றும் டார்க் சரிசமமாக பரவ உதவி செய்கின்றன. எனவே எரிபொருளும், ஆற்றலும் வீண் ஆவது தவிர்க்கப்படும். இதன் மூலமாக மைலேஜ் அதிகரிக்கும்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

வீல் அலைன்மெண்ட் சரியாக இல்லையென்றால், காரின் மைலேஜ் 10 சதவீதம் வரை குறையும் என தெரிவிக்கின்றனர். 10 சதவீதம் என்பது உண்மையிலேயே பெரிய விஷயம். அதுவும் குறிப்பாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கணக்கிடும்போது, உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் சரியாக இருந்தால், நீங்கள் பெரிய தொகையை சேமிக்கலாம்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

டயரின் ஆயுட்காலம் உயரும்

உங்கள் காரில் வீல் அலைன்மெண்ட் பிரச்னை உள்ளதா? என உங்களுக்கு சந்தேகம் இருந்தால், டயர்கள் மூலமாக அதனை எளிமையாக கண்டறியலாம். டயர்கள் சீரற்ற முறையில் சேதம் அடைந்திருந்தால் வீல் அலைன்மெண்ட் சரியாக இல்லை என்பதை கணிக்கலாம். அல்லது மைய பகுதியை காட்டிலும் விளிம்புகள் அதிகம் மெலிந்து போயிருந்தாலும், வீல் அலைன்மெண்ட் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

வீல் அலைன்மெண்ட்டை சரியாக செய்வதுடன், குறிப்பிட்ட இடைவெளிகளில் Tire Rotations-களையும் சரியாக செய்து வந்தால், உங்கள் டயர்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கும். மைலேஜை போல், டயர்களின் ஆயுட்காலமும் உயர்வது மிகவும் சிறப்பானது. இதன் மூலமாக உங்கள் பணம் மிச்சமாகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

பாகங்கள் சேதம் அடைவது குறையும்

வீல் அலைன்மெண்ட் சரியாக இல்லை என்றால், உங்கள் காரின் மற்ற முக்கியமான பாகங்கள் பாதிக்கப்படும். பிரேக்குகள், சஸ்பென்ஸன் மற்றும் டிரான்ஸ்மிஷன் போன்றவை குறித்துதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். வீல் அலைன்மெண்ட் சரியாக இல்லை என்றால், அனைத்து பாகங்களும் மிக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

இதனால் அவை விரைவாகவே சேதம் அடைந்து விடும். ஆனால் வீல் அலைன்மெண்ட் சரியாக இருந்தால், முக்கிய பாகங்கள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் குறையும். அத்துடன் உங்கள் கார் ரிப்பேர் ஆகி உங்களுக்கு பெரிய அளவில் செலவு வைப்பதும் தவிர்க்கப்படும். இதன் மூலமும் நீங்கள் பணத்தை சேமிக்கலாம்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

ஸ்டியரிங் வீல் மேம்படும்

உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் சரியாக இல்லை என்றால், ஸ்டியரிங் வீலை பிடித்து ஓட்டுவதில் நீங்கள் சிரமங்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஸ்டியரிங் வீலின் கண்ட்ரோல் சரியாக இல்லாவிட்டால், சாலை விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

ஆனால் வீல் அலைன்மெண்ட் சரியாக இருந்தால், இதுபோன்ற தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க முடியும். அத்துடன் ஸ்டியரிங் வீலின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பதால், நீங்கள் காரை தெளிவாக ஓட்ட முடியும். மேலும் காரையும் உங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

சிறப்பான கையாளுமை

உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் சரியாக இருந்தால், கையாளுமையும் சிறப்பாக இருக்கும். வளைவுகள் நிறைந்த சாலைகள், மலை சாலைகள் என நீங்கள் எங்கு காரை ஓட்டினாலும், கையாளுமை நன்றாக இருக்கும் என்பது உறுதி. வீல் அலைன்மெண்ட்டை சரியாக மேற்கொண்ட பிறகு, ஒரு டிரைவராக உங்களால் மிக எளிதாக கையாளுமையில் ஏற்படும் வித்தியாசத்தை உணர முடியும்.

வீல் அலைன்மெண்ட்டிற்கும், கார் மைலேஜ், ஆயுளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

பாதுகாப்பு அதிகரிக்கும்

உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் முற்றிலும் சரியாக இருந்தால், கையாளுமை சிறப்பாக இருப்பதுடன், பாதுகாப்பும் அதிகரிக்கும். கார் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியமானது. இது உங்களுக்கும், உங்களுடன் பயணம் மேற்கொள்ளும் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்மை பயக்க கூடிய விஷயம் ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Important benefits of wheel alignment
Story first published: Monday, August 23, 2021, 19:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X