வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

வானில் பறக்கும் விமானங்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் விமானங்கள் வானில் பறந்து வருகின்றன. சாதாரணமாக சாலையில் ஓடும் கார் மற்றும் பைக்குகள் போன்ற வாகனங்களை போலவே விமானங்களிலும் லைட்கள் இருக்கும். அவை எதற்காக பயன்படுகின்றன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

விமானங்கள் முன் பகுதி மற்றும் மற்ற பகுதிகளில் இருக்கும் லைட்கள் உண்மையில் ஹெட்லைட்கள் கிடையாது. அவை லேண்டிங் லைட்கள் (Landing Lights) என அறியப்படுகின்றன. பெயருக்கு ஏற்றபடியே விமானங்கள் தரையிறங்கும் பணிக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன. இதற்கென இந்த லைட்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

பொதுவாக விமானங்களை தரையிறக்குவது என்பது மிகவும் சவாலான காரியங்களில் ஒன்று. விமான பயணத்தில் மிகவும் ஆபத்து நிறைந்த ஒரு கட்டமாக லேண்டிங் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் விமானங்களை தரையிறக்குவது என்பது பைலட்களுக்கு இன்னும் சவாலான விஷயமாக இருக்கும்.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

இரவு நேரங்களில் விமானங்களை தரையிறக்கும்போது ஓடுபாதையில் மனிதர்களோ, வாகனங்களோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களோ இருந்தால், பைலட்களால் அவற்றை சரியாக பார்க்க முடியாது. பொதுவாக ஏர்போர்ட் நிர்வாகங்கள் லைட்கள் மூலம் ஓடுபாதையை ஒளிர செய்யும். இருப்பினும் விமானங்களில் உள்ள லைட்கள் பைலட்கள் ஓடுபாதையை இன்னும் நன்றாக பார்க்க உதவி செய்கின்றன.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த லைட்கள், ஓடுபாதையின் சுற்றளவை கோடிட்டு காட்டுகின்றன. ஓடுபாதையில் மனிதர்களோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களோ இருந்தால் தரையிறங்கும்போது விமானம் கவனக்குறைவாக மோதி விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஆனால் லேண்டிங் லைட்கள் இருப்பதால் அந்த பிரச்னை கிடையாது.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

ஏனெனில் அவை ஓடுபாதையை பைலட்கள் இன்னும் சிறப்பாக பார்ப்பதற்கு காரணமாகின்றன. லேண்டிங் லைட்களை 'ஆன்' செய்தவுடன் கீழே உள்ள ஓடுபாதையை அவை ஒளிர செய்கின்றன. இதன் மூலம் ஓடுபாதையில் மக்களோ, வாகனங்களோ அல்லது பொருட்களோ இருந்தால், மாற்று நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அவை பைலட்களை அனுமதிக்கின்றன.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

ஓடுபாதையை ஒளிர செய்வதுடன், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட விமானங்கள் மோதி கொள்வதற்கான அபாயத்தையும் கூட லேண்டிங் லைட்கள் குறைக்கின்றன. தரையிறங்கும் விமானங்களை ஓடுபாதையில் வழிநடத்தும் பொறுப்பு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்கு இருக்கிறது.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

இருப்பினும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரே நேரத்தில் ஓடுபாதையின் ஒரே பகுதியில் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஒருவேளை இரவு நேரங்களில் தவறுதலாக இது நடந்து விட்டால், விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுவதையும் லேண்டிங் லைட்கள் மூலம் குறைக்கலாம்.

வானத்தில் பறக்கும் ஏரோப்ளேன்களில் எதற்காக ஹெட்லைட்கள் இருக்கின்றன தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!

ஏனெனில் லேண்டிங் லைட்கள் விமானங்களையும் ஒளிர செய்யும். அதாவது மற்றவர்களின் பார்வைக்கு விமானம் இருப்பது எளிதாக புலப்படும். எனவே விமானங்களுக்கு இடையேயான மோதல்களையும் கூட லேண்டிங் லைட்கள் குறைக்கின்றன. விமானங்களில் உள்ள லேண்டிங் லைட்கள் இப்படி பல வழிகளில் நமக்கு பயன்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Important details about airplane landing lights
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X