இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

காரின் ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

காரின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று ஃப்யூயல் இன்ஜெக்டர் (Fuel Injector). பெயருக்கு ஏற்றபடி, உங்கள் வாகனத்தின் இன்ஜினுக்கு எரிபொருளை வழங்கும் பணியை ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் செய்கின்றன. எனவே வாகனம் இயங்குவதற்கு தேவையான இன்றியமையாத பாகங்களில் ஒன்றாக ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் இருக்கின்றன.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

கடந்த 1990களில் கார்புரேட்டர்களுக்கு (Carburetors) மாற்றாக ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் வந்தன. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே வாகனங்களின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக அவை உருவெடுத்து விட்டன. கார்புரேட்டர்களுடன் கூடிய இன்ஜின்களை காட்டிலும், ஃப்யூயல் இன்ஜெக்டர்களுடன் கூடிய இன்ஜின்களின் பவர் அவுட்புட் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

இன்ஜின் 'ஸ்மூத்' ஆக இயங்க வேண்டுமென்றால், ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் முறையாக இயங்குவது அவசியம். ஒருவேளை ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால், காரில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். காரின் இன்ஜின் 'ஸ்மூத்' ஆக இயங்காது என்பது முதல் பிரச்னை. மேலும் கார் எரிபொருளை வீணடிப்பதும் உங்கள் கவனத்திற்கு வரும். அதாவது காரின் மைலேஜ் குறையும்.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

இன்ஜினுக்கு சரியான நேரத்தில், சரியான அளவு எரிபொருளை வழங்குவதுதான் ஃப்யூயல் இன்ஜெக்டர்களின் முக்கியமான பணி. ஆனால் அவை பழுதாகி விட்டால், காரின் இன்ஜினுக்கு எரிபொருள் சரியான அளவில் செல்லாது. எனவே மைலேஜ் குறையும். அத்துடன் சில சமயங்களில், ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் பழுதானால் உங்கள் கார் சுற்றுச்சூழலை அதிகமாக மாசுபடுத்தவும் செய்யலாம்.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

எனவே சரியான நேரத்தில் ஃப்யூயல் இன்ஜெக்டர்களை மாற்றுவது மிகவும் அவசியம். வாகனத்தின் ஃப்யூயல் இன்ஜெக்டர்களை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை ஒரு சில அறிகுறிகள் மூலமாக உணர்ந்து கொள்ளலாம். காரின் டேஷ்போர்டில் செக் இன்ஜின் லைட் எரிந்தால், அது ஃப்யூயல் இன்ஜெக்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்னையாக இருக்கலாம்.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

அதே போல் வாகனத்தின் மைலேஜ் குறைந்தாலும் கூட, அதற்கு ஃப்யூயல் இன்ஜெக்டர் பிரச்னை காரணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் எரிபொருள் கசிவு இருந்தாலும் கூட, அதற்கு ஃப்யூயல் இன்ஜெக்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக இருக்க கூடும்.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

வாகனத்தில் இருந்து கவனிக்கத்தக்க அளவில் எரிபொருள் வாசனை வந்தாலும் கூட, ஃப்யூயல் இன்ஜெக்டர் பிரச்னை காரணமாக இருக்கலாம். அத்துடன் இன்ஜின் கரடு முரடாக இயங்குகிறது என்றாலும், கார் அதிக மாசுவை உமிழ்ந்தாலும், அதற்கு ஃப்யூயல் இன்ஜெக்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

பொதுவாக ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்க கூடியவை. ஒரு காரின் ஃப்யூயல் இன்ஜெக்டர்கள் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் வரை உழைக்கும். அதற்கு முன்பாகவே மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டாலும் கூட, ஃப்யூயல் இன்ஜெக்டர்களை உடனடியாக மாற்றி விடுவதுதான் உங்களுக்கு நல்லது.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

ஃப்யூயல் இன்ஜெக்டர்களை மாற்றுவதற்கு தோராயமாக ஒரு மணி நேரம் ஆகும். ஒருவேளை நீங்களாக மாற்ற போகிறீர்கள் என்றால், 2 மணி நேரம் வரை கூட ஆகலாம். ஆனால் கவனமாக செய்யுங்கள். புதிய ஃப்யூயல் இன்ஜெக்டர்களை சரியான முறையில் பொருத்துவது மிகவும் அவசியம். இந்த பணிகளை சரியாக செய்யாவிட்டால், இன்ஜினிற்கு பாதிப்புகள் ஏற்படலாம்.

இது ஒன்னை மட்டும் மாத்தி பாருங்க... அப்புறம் நீங்களே கண்ணு வைக்கற அளவுக்கு உங்க கார் மைலேஜ் குடுக்கும்!

எனவே அனுபவம் இல்லாவிட்டால், நிபுணத்துவம் பெற்ற மெக்கானிக்குளை நாடுவது சிறந்தது. முன்னதாக ஃப்யூயல் இன்ஜெக்டர்களை மாற்றுவதற்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகலாம் என கூறியிருந்தோம். ஆனால் எந்த நிறுவனத்தின் கார்? என்ன மாடல்? என்பதை பொறுத்து இந்த நேரம் மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Important details about fuel injectors
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X