கனவு நனவாகிறது... 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் காரின் முக்கிய அம்சங்கள்

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிஏஎல்-வி நிறுவனம் இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆலை அமைத்து பறக்கும் கார் உற்பத்தியை துவங்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

முதலில் ஏற்றுமதி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய பறக்கும் காரை விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. இதுவரை 110 பேர் இந்த பறக்கும் கார் மாடலை வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பறக்கும் காரை வாங்குவதற்கு தேவையான விபரங்கள் மற்றும் இந்த பறக்கும் காரின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

கனவு நனவாகும்...

போக்குவரத்து நெரிசலில் சிக்கி சித்திரவதைக்கு உள்ளாகும் பலரின் கனவாக உள்ள தரையிலும், ஆகாயத்திலும் பயணிக்கும் அரிய வாய்ப்பை இந்த பறக்கும் கார் வழங்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் இந்த பறக்கும் கார் மிகச் சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

அதிர்ஷ்டசாலி நாடுகள்

அடுத்த ஆண்டு இந்த புதிய பறக்கும் கார் இந்தியாவில் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது. முதல்கட்டமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. ஏனெனில், அந்த நாடுகளில் இந்த பறக்கும் காரை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கான அனுமதியை பிஏஎல்-வி நிறுவனம் பெற்றுள்ளது.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

இரட்டை ஓட்டுனர் உரிமம்

இந்த பறக்கும் காரை வாங்குவோர் கார் ஓட்டுனர் லைசென்ஸ் மற்றும் ஆட்டோகைரோ என்ற ஆகாய வாகனத்தை ஓட்டுவதற்கான பிரைவேட் பைலட் வகை உரிமத்தை பெறுவது அவசியம். இதற்காக, இந்த பறக்கும் கார் வாங்க முன்பதிவு செய்துள்ளோருக்கு முதலில் 30 முதல் 40 மணிநேரம் பயிற்சி வழங்கப்படும்.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

டெலிவிரி நிபந்தனை

பயிற்சி முடிந்து ஆட்டோகைரோ உரிமம் பெற்ற பின்னரே இந்த பறக்கும் கார் டெலிவிரி கொடுக்கப்படும். இந்த பறக்கும் கார் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

வேகம்

இந்த பறக்கும் காரில் சாலையில் மணிக்கு 170 கிமீ வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 180 கிமீ வேகத்திலும் பறக்கும் திறன் வாய்ந்தது. ஆகாயத்தில் பாதுகாப்பை மனதில் வைத்து 140 கிமீ வேகத்தில் இயக்கலாம்.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

இருக்கை வசதி

இந்த பறக்கும் காரில் 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 20 கிலோ எடையுடைய உடைமைகளை எடுத்துச் செல்லலாம்.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

எரிபொருள் தரம்

யூரோ 95, யூரோ 98 மற்றும் இ10 ஆகிய தரத்திலான எரிபொருளை பயன்படுத்த முடியும். 100 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. முழுமையாக எரிபொருள் நிரப்பினால் சாலைகளில் பயன்படுத்தும்போது,1,300 கிமீ தூரம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

ரேஞ்ச்

இந்த விமானத்தின் எரிபொருளில் 400 முதல் 500 கிமீ தூரம் வரை பறப்பதற்கான வாய்ப்பை வழங்கும். 3,500 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறனை பெற்றிருக்கிறது.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

ஓடுபாதை அவசியம்

இந்த பறக்கும் கார் டேக் ஆஃப் செய்வதற்கு 180 மீட்டர் நீளமுடைய சமதள பரப்பு அல்லது ஓடுபாதை தேவைப்படும். தரை இறக்குவதற்கு 30 மீட்டர் நீள ஓடுபாதை இருந்தால் போதுமானது.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

கார் சைஸ்தான்

தரையில் செல்லும்போது இறக்கைகள் மடக்கிவைக்கப்பட்ட நிலையில் செல்லும். அப்போது 4 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 1.7 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். அதாவது, ஒரு காருக்கு உரிய அளவிலேயே இருக்கும்.

கனவு நனவாகிறது... விரைவில் தரையில் 170 கிமீ வேகம், ஆகாயத்தில் 180 கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் கார்!

இந்தியாவுக்கு...

இந்த பறக்கும் கார் புதிய வகை வாகனப் பிரிவில் வருவதால், இதனை இயக்குவதற்கான புதிய விதிகள் மற்றும் அனுமதி பெறுவதற்கான சிறிது கால தாமதம் ஏற்படும். எனவே, இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 12, 2020, 12:59 [IST]
English summary
Here are some important and interesting features about PAL-V flying car.
மேலும்... #ஆஃப் பீட் #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+