Just In
- 8 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 12 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 13 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 13 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: கட்டுப்பாடுகள் அமலானதால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாழ்க்கைய செமயா என்ஜாய் பண்றாங்க... வாழ்ந்தா பைலட்கள் மாதிரி வாழணும்... ஏன் தெரியுமா?
விமான பைலட்களாக வேலை செய்வதில் கிடைக்கும் சிறப்பான விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பள்ளி பருவத்தில் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்? என கேட்பவர்களிடம், 'பைலட்' என நம்மில் பலரும் கூறியிருப்போம். பைலட்கள் மீது இருக்கும் ஈர்ப்பே அதற்கு காரணம். உண்மையில் பைலட் வேலையை உலகின் மிகச்சிறந்த பணிகளில் ஒன்றாக கூறலாம். அது ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பயணம் செய்ய யார்தான் விரும்ப மாட்டார்கள்?
பைலட் வேலையில் உள்ள மிகப்பெரிய சுவாரஸ்யமே பயணம் செய்வதுதான். நீங்கள் பைலட்டாக இருந்தால், அதற்கு முன் வாழ்க்கையில் சென்றிருக்காத இடங்களுக்கு எல்லாம் பயணிக்கலாம். விமானம் மீண்டும் புறப்படுவதற்கு முன் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், பைலட்கள் பல்வேறு நகரங்களை சுற்றி பார்க்கலாம். வெவ்வேறு வித்தியாசமான கலாச்சாரங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

பைலட்களை பொறுத்தவரை இரண்டு வேலை நாட்கள் ஒன்று போலவே இருக்காது. பைலட்களின் வேலையில் உள்ள மிகச்சிறந்த சுவாரஸ்யமான பகுதி என இதனை குறிப்பிடலாம். பைலட்களை பொறுத்தவரை ஒரு நாள் டெல்லியிலும், மற்றொரு நாள் லண்டனிலும் இருக்கலாம். வெவ்வேறு பகுதிகளை காணும் வாய்ப்பு கிடைப்பதால், வேலையில் அவர்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

மேகத்தில் அலுவலகம்!
பைலட்கள் உள்பட ஒரு சிலரை தவிர மேகத்தில் எனது அலுவலகம் உள்ளது என உலகின் பெரும்பாலானோரால் சொல்ல முடியாது. விமானத்தில் பறக்கும்போது கிடைக்கும் 'வியூ' பணியை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுவதாக நிறைய பைலட்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது நிச்சயமாக அவர்களை சோர்வடைய செய்யாது.

தொலை தூரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருப்பதை வானில் தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு நம்மில் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. அதேபோல் பரந்த, முடிவில்லாத நீல வானத்தை ரசித்து கொண்டே வேலை செய்வதும் சுகமான அனுபவம்தான். இதுபோன்ற அனுபவங்கள் கிடைப்பதால் பைலட்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்தான்.

இலவச விமான டிக்கெட்!
பைலட்கள் அடிக்கடி பயணம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அனைத்து சமயங்களிலும் தனியாக பயணம் செய்வதை விட நண்பர்கள், குடும்பத்தினருடன் பயணம் செய்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் பைலட்டாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்டை பெறலாம்.

சில சமயங்களில் இலவசமாக பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே விடுமுறை காலங்களை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் நீங்கள் சுற்றுலா சென்று உற்சாகமாக கழிக்க முடியும். அதே சமயம் பைலட்களுக்கு சில ஹோட்டல்கள் தள்ளுபடி விலையில் அறைகளை வழங்குகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய மனிதர்கள் உடனான சந்திப்பு!
நீங்கள் பைலட்டாக இருந்தால், தொடர்ச்சியாக புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே இருக்கும். அதுவும் பல்வேறு நாடுகளை சேர்ந்த, பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மனிதர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கும். விமான ஊழியர்களில் இருந்து, பயணிகள், நீங்கள் செல்லும் நகரங்களின் மக்கள் என பல புதிய முகங்களை சந்தித்து பழகும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.

பணி பாதுகாப்பு!
அதிக பணி பாதுகாப்புடன் கூடிய ஒரு வேலையை நீங்கள் தேடி கொண்டுள்ளீர்களா? அப்படியான பைலட் வேலையும் அதில் ஒன்று. பைலட்களுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பிரச்னையால் வேண்டுமானால் விமான போக்குவரத்து துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை.

இதை தவிர்த்து விட்டு பார்த்தால், விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே பைலட்களுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என விமான போக்குவரத்து துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்திலும் பைலட்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.
Note: Images used are for representational purpose only.