காசி- வதோதரா இடையே அறிமுகமாகும் மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்!

Written By:

பிரதமர் மோடி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்னர் புதிய பெயர்களில் பல ரயில்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், முற்றிலும் புதிய அம்சங்களுடன் கூடிய 'மஹமணா' எக்ஸ்பிரஸ் ரயில் நாளை காசி- வதோதரா இடையே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!

பிரதமர் மோடி இந்த ரயிலின் முதல் சேவையை நாளை வாரணாசி நகரில் கொடியசைத்து துவக்கி வைக்க இருக்கிறார். பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற வதோதரா மற்றும் வாரணாசி பாராளுமன்றத் தொகுதிகளை இணைக்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

 மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!

சுதந்திர போராட்ட வீரரும், ஹிந்து மகாசபை முன்னாள் தலைவருமான மதன் மோகன் மால்வியா நினைவாக இந்த ரயிலுக்கு மஹமணா எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு டெல்லி- வாரணாசி இடையே முதல் மஹாமண எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது வாரணாசி - வதோதரா இடையே மஹமணா எக்ஸ்பிரஸ் அறிமுகமாகிறது.

 மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!

இந்த ரயிலின் உட்புற அமைப்புகள் பயணிகளுக்கு ஏற்ற வசதிகளுடன் மிகவும் நவீன முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வதோதரா நகரை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஃபைபர் க்ளாஸ் நிறுவனம் இதற்கான மாடி ரயில் பெட்டியை உருவாக்கி தந்தது. இந்திய ரயில்வே பயன்படுத்தும் 7 விதமான ரயில் பெட்டிகளின் உட்புற வடிவமைப்புகளின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!

இந்த ரயிலில் மேல் பெர்த்தில் உள்ளவர்கள் எளிதாக ஏறி இறங்குவதற்கு வசதியாக புதிய படிக்கட்டு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் சொகுசான படுக்கை மற்றும் இன்டீரியர் வண்ணங்கள் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. எல்இடி விளக்குகள், குப்பைத் தொட்டி, நவீன கழிப்பறை வசதிகள் கொண்டதாக வந்துள்ளது.

 மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!

இந்த ரயிலில் நள்ளிரவு நேரத்தில் ஏறும் பயணிகள் பெர்த் எண்ணை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக எல்இடி பலகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எக்ஸ்சாஸ்ட் ஃபேன், ரயில் நிலையங்களில் கழிவுகள் கொட்டாத நுட்பம் உள்ளிட்டவை சிறப்புகளாக இருக்கின்றன.

 மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!

இந்த ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, இரண்டு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொது பெட்டிகள் மற்றும் ஒரு சமையல் வசதி கொண்ட பெட்டியும், இரண்டு கார்டு வேன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் கிடையாது.

 மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!

இந்த ரயிலில் மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, இரண்டு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொது பெட்டிகள் மற்றும் ஒரு சமையல் வசதி கொண்ட பெட்டியும், இரண்டு கார்டு வேன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் கிடையாது.

 மஹமணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்!

வாரணாசி- வதோதரா இடையிலான 1,531 கிமீ தூரத்தை இந்த ரயில் 27 மணி 30 நிமிடங்களில் கடக்கும். சராசரியாக மணிக்கு 55.7 கிமீ வேகத்தில் பயணிக்கும். பாரூச், சூரத், அமல்னேர், புஸ்வால், இட்டர்ஸி, ஜபல்பூர், கத்னி, சத்னா மற்றும் செஹியோக்கி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Important Things About Mahamana Express Train.
Story first published: Thursday, September 21, 2017, 14:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark