இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க

விமானத்தின் போர்டிங் பாஸை தப்பி தவறி கூட ஏன் குப்பையில் தூக்கி எறிய கூடாது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

விமானத்தில் பயணம் செய்யும் ஒரு சிலர் தங்களுடைய போர்டிங் பாஸ்களை (Boarding Pass) முறையாக அழிக்காமல், தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த சிறிய அலட்சியம் உங்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில் போர்டிங் பாஸ்களில் உங்களை பற்றிய ஏராளமான தகவல்கள் இருக்கும்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

இந்த தகவல்கள் நிபுணத்துவம் பெற்ற ஹேக்கர்களின் கையில் கிடைத்தால், என்ன நடக்கும் தெரியுமா? இந்த கேள்விக்கு இந்த செய்தியில் பதில் வழங்கியுள்ளோம். செய்திக்குள் நேரடியாக செல்வதற்கு முன்பு முதலில் உங்களுடைய போர்டிங் பாஸில், என்னென்ன தகவல்கள் அடங்கியிருக்கும்? என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

உங்கள் போர்டிங் பாஸில் பின்வரும் தகவல்கள் இருக்கலாம்:

1. பயணியின் பெயர்

2. செல்போன் நம்பர்

3. ஆன்லைன் புக்கிங் என்றால் இ-மெயில் முகவரி

4. அனைத்து கனெக்டிங் விமானங்கள் பற்றிய தகவல்கள்

5. சீட் நம்பர்

6. ஃப்ரீக்வண்ட் ஃப்ளையர் நம்பர் (Frequent Flyer Number)

7. ஃப்ளைட் நம்பர்

8. போர்டிங் கேட் நம்பர்

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

இதுபோன்று இன்னும் பல்வேறு தகவல்கள் போர்டிங் பாஸ்களில் இருக்கலாம். எனவே அவை வெறும் காகிதம் அல்ல. ஹேக்கர்களை பொறுத்தவரையில், போர்டிங் பாஸ்கள் என்பது உங்களை பற்றிய பல்வேறு தகவல்கள் அடங்கிய பொக்கிஷம். எனவேதான் போர்டிங் பாஸ்களை அலட்சியமாக தூக்கி எறிய கூடாது என்று சொல்கிறோம்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

ஒரு சிலர் விமானத்தில் பயணம் செய்ய போகிறோம் என்பதை, சமூக வலை தளங்களில் போர்டிங் பாஸ்களை பதிவிட்டு அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றனர். இதுவும் கூட தவறான விஷயம்தான். இதன் மூலமாகவும் உங்களை பற்றிய தகவல்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே எப்போதும் போர்டிங் பாஸ்கள் விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

போர்டிங் பாஸ் தகவல்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு கிடைத்தால் உங்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம். போர்டிங் பாஸ்கள் மூலம் உங்கள் பயண தேதிகளை ஒருவர் தெரிந்து கொள்ள முடியும். போர்டிங் பாஸ்களில் இருந்து மிக எளிமையாக பெறக்கூடிய தகவல்களில் இது ஒன்று.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

உதாரணத்திற்கு நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் 1 வார காலத்திற்கு சுற்றுலா செல்கிறீர்கள் என வைத்து கொள்வோம். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகளுக்கு இந்த தகவல் கிடைத்தால் என்ன நடக்கும்? உங்கள் வீட்டிற்கு உடனடியாக அவர்கள் படையெடுத்து விடுவார்கள். உங்கள் கார் போன்ற வாகனங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அவர்கள் திருடி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

நீங்கள் திடீரென வீட்டிற்கு வந்து விடுவீர்களோ என்ற அச்சமே அவர்களுக்கு இருக்காது. ஏனெனில் உங்களின் பயண திட்டம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அடுத்தபடியாக போர்டிங் பாஸ்களில் உங்கள் சீட் நம்பர், அதாவது இருக்கை எண் இருக்கும் என்பதால், உங்கள் இருக்கையை யாராவது மாற்றி விடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

விமான நிறுவனத்தை அழைத்து, உங்களை போல் பாசாங்கு செய்து, இருக்கையை மாற்றுவதற்கான அபாயம் உள்ளது. பொதுவாக இது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஏனெனில் இருக்கைகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விடும். ஆனால் அவர்களால் இதனை செய்ய முடிந்தால், கடைசி நேரத்தில் இருக்கை மாற்றப்படலாம்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

இதன் காரணமாக தொலைதூர விமான பயணத்தை கழிவறைக்கு அருகில் அமர்ந்து கொண்டு பயணிக்க வேண்டிய நெருக்கடி கூட உங்களுக்கு ஏற்படலாம். இருக்கைகளை மாற்றுவதை போல், உங்கள் பயண தேதியை யாராவது ஒருவர் மாற்றுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதை செய்வதும் கூட கடினமானதுதான்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

ஏனெனில் இதற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியதிருக்கும். ஆனால் கட்டணம் செலுத்தாமலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையிலோ அவர்கள் இதனை செய்து விட்டால், நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். அத்துடன் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் உங்கள் தகவல்களை கையில் வைத்து கொண்டு, உங்களை பிளாக்மெயில் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

அத்துடன் போர்டிங் பாஸில் இருக்கும் 'ஃப்ரீக்வண்ட் ஃப்ளையர் நம்பர்' மூலமாகவும் ஹேக்கர்கள் உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 'ஃப்ரீக்வண்ட் ஃப்ளையர் நம்பர்' என்பது ஒரு எண் ஆகும். இது குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானங்களில் தொடர்ச்சியாக பயணம் செய்யும் பயணிகளுக்கானது.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

'ஃப்ரீக்வண்ட் ஃப்ளையர் நம்பர்' திட்டத்தில் பதிவு செய்யக்கூடிய பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் இந்த எண்களை ஒதுக்கும். நீங்கள் தொடர்ச்சியாக பயணிக்கும்போது உங்களுக்கு 'பாயிண்ட்கள்' கிடைக்கும். இதனை பின்னர் விமான பயணங்களுக்கோ அல்லது வெகுமதிகளை பெறுவதற்கோ நீங்கள் உங்கள் விருப்பப்படி 'ரீடீம்' (Redeem) செய்து கொள்ள முடியும்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாகி விட்ட இன்றைய சூழலில் இதனை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் உங்கள் போர்டிங் பாஸில் பார்கோடு (Barcode) இருக்கும். இதில், உங்கள் பிறந்த தேதி, பில்லிங் முகவரி போன்ற பல்வேறு தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

பார்கோடில் இருந்து இந்த தகவல்களை ஹேக்கர்கள் பெற்றால், அவற்றை உங்களுக்கு எதிராக தவறான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் இங்கே கூறியுள்ள பல்வேறு விஷயங்கள் சாத்தியமில்லாதவை போன்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அவை நடப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என மறுத்து விட முடியாது.

இது தெரியாம போச்சே... விமானத்தின் போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா? அசால்டா தூக்கி போட்றாதீங்க!

எனவே போர்டிங் பாஸ்களை முறையாக அழித்து விடுங்கள். அவை தவறான நபர்களின் கைகளுக்கு கிடைக்க கூடாது. அல்லது உங்கள் போர்டிங் பாஸ்களை நீங்கள் சேகரித்து வைக்கலாம். இதன் மூலம் பிற்காலத்தில் அவற்றை நீங்கள் திரும்பி பார்க்க முடியும். பழைய நினைவுகள் எப்போதுமே மனதிற்கு இதம் அளிக்க கூடியவை!

Article Published On: Monday, June 13, 2022, 13:42 [IST]
English summary
Important things you should know about flight boarding pass
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+