குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை... வருகிறது புதிய சட்டம்..!!
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறை... வருகிறது புதிய சட்டம்..!!
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரழப்பிற்கு காரணமானால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டை வழங்கும் புதிய சட்ட முன்வரைவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, அதனால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துக்கொண்டே உள்ளன.
குறிப்பாக பல பிரபலமானவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை இந்த குற்றத்தில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.

அதிகரித்து வரும் இந்த குற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இனி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், விபத்து ஏற்படுத்திவிட்டு உயிரழப்பிற்கு காரணமாக அமைந்தால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Trending On Drivespark:
Recommended Video


தற்போதிருக்கும் விதிகளின் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரழப்பு ஏற்படுத்தினால், குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.

சமூக நலன் சார்ந்த வழக்கு ஒன்றில், குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிர்ழப்பிற்கு காரணமாக அமையும் குற்றத்திற்கு இது போதுமான தண்டனையா என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டது.

கடந்த 23ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழுவின் கோரிக்கையில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான 15 முக்கிய அம்சங்களை சேர்த்து, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் மாநிலங்களவையில் புதிய அறிக்கையாக தாக்கல் செய்தது.

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரழப்பிற்கு காரணமாக அமைந்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை என்ற சட்ட முன்வரைவு முக்கிய அம்சமாக அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து மூன்றாவது நபருக்கான காப்பீட்டு உரிமையை பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகளிடம் இருப்பதில்லை. இதனால் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்கள் உாிய இழப்பீடு பெறுவதில் தொடா்ந்து சிக்கல் நிலவுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

தொடர்ந்து போக்குவரத்து விதிகள் தொடர்பான அனைத்து அம்சங்களும் ஒழுங்குபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்குரிய கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








