ஃபெர்ராரி காரை விற்றுவிட்டு போலோ காரை வாங்கிய நடிகர்.. காசுக்காக இப்படி பண்ணல.. வேறொரு காரணம் இருக்கு!

பெரும்பாலும் நடிகர்கள் என்றாலே தங்களிடம் இருப்பதைவிட அதிக விலைக் கொண்ட அல்லது அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த வாகனத்தையே வாங்க விரும்புவார்கள். ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த நடிகரோ சற்று வித்தியாசமானவராக இருக்கின்றார். அவர் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த அரிய வகை காரை விற்றுவிட்டு மிகவும் எளிமையான காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் இம்ரான் கான், இவரே விலை உயர்ந்த காரை வேறொருவருக்கு விற்றுவிட்டு மிகவும் எளிமையான காரை வாங்கியவர் ஆவார்.

ஹாலிவுட் மற்றும் இந்தி பட நடிகர் இம்ரான் கான். இவர், தன்னிடம் இருந்த ஃபெர்ராரி சூப்பர் கார் இருந்ததாகவும், அதை விற்றுவிட்டு ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி காரை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஃபெர்ராரி காரை விற்றுவிட்டு தான் ஏன் ஃபோக்ஸ்வகன் போலோ ஜிடி காரை வாங்கினேன் என்பதையும் அவர் தெரிவித்து உள்ளார்.

Imran khan swapped ferrari for vw polo

சமீபத்தில், யுட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் வாயிலாகவே இந்த தகவலை அவர் பகரிந்துக் கொண்டார். நடிகர் இம்ரான் மற்ற நடிகர்களைப் போலவே மிகுந்த ஆட்டோமொபைல் ஆர்வலராக உள்ளார். இத்தகைய நபரே ஃபெராரியை விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி வாங்கி இருக்கின்றார்.

மேலும், இந்த காரை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர் மாற்றியமைத்தும் இருக்கின்றார். போலோ ஜிடி-க்கு மிக பெரிய ஃபேன் பட்டாளமே உண்டு, இந்தியாவிலும்தான். ஆனால், இந்த காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஃபோக்ஸ்வேகன் நிறுத்தி இருக்கின்றது. விரைவில் இதன் புதிய தலைமுறை சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என கூறப்படுகின்றது.

ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் இல்லை. இத்தகைய கார் மாடலையே தற்போது தன்னுடைய பிரதான வாகனமாக இம்ரான் கான் பயன்படுத்தி வருகின்றார். மும்பை போன்ற பரபரப்பான நகரங்களில் ஃபெராரி போன்ற அதி திறன் கொண்ட கார்களை நிர்வகிப்பது மிகுந்த சவாலானது என்று கூறியே நடிகர் அக்காரை விற்றிருக்கின்றார்.

அதற்கு பதிலாக போலோ ஜிடி-யை அவர் வாங்கி இருக்கின்றார். இந்த கார் மாடல் அடக்கமான தோற்றத்தையும், அதேவேளையில், சிறந்த செயல் திறனையும் வெளியேற்றக் கூடியது என்பதாலும் இந்த காரை அவர் தேர்வு செய்திருக்கின்றார். இந்தியாவில் டிஎஸ்ஜி (DSG) டிரான்ஸ்மிஷன் கொண்ட கடைசி 1.2 லிட்டர் மோட்டார் இதுவாகும்.

அதேவேளையில், தன்னால் லிமிடெட் எடிசன் போலோ ஜிடி-யை வாங்க முடியாமல் என வருந்தினார். ஆனால், அதற்கு பதிலாக தன்னுடைய வழக்கமான போலோ ஜிடி-யையே அவர் மிகவும் ஹாட்டான காராக மாற்றி உள்ளார். அந்தவகையில், வாகனத்தை இசியூ (ECU) ட்யூனிங்-கிற்கு உட்படுத்தி இருக்கின்றார்.

மேலும், மேம்படுத்தப்பட்ட கையாளுதலுக்காக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் ஸ்போர்ட்டி எக்சாஸ்ட் குழாய் ஆகியவற்றை அவர் சேர்த்திருக்கின்றார். இதுதவிர, பெரிய சக்கரங்கள், ஓஇஎம் (OEM) பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் உட்புற கேபின் லைட், ஹெட்லைட் சுவிட்சை ஆகியவற்றையும் அவர் மாற்றி இருக்கின்றார்.

இந்த மாற்றங்கள் பெரும்பாலும் இம்ரானால் செய்யப்பட்டவை ஆகும். ஆகையால், இந்த கார் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றது. இதேபோல், திறன் வெளிப்பாட்டிலும் இந்த கார் மிக சிறந்ததாக மாறி இருக்கின்றது. ஆனால், நடிகர் டிராஃபிக் காரணமாக ஃபெர்ராரி காரை விற்றிருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பையில் வசிக்கும் பெரும்பாலான பிரமுகர்கள் மும்பை டிராஃபிக்கைச் சமாளிக்கும் பொருட்டு பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் முன்னணி நடிகர்கள் தொடங்கி தொழிலதிபர்கள் வரை பலர் மும்பை மெட்ரோ ரயிலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே ஓர் நடிகர் டிராஃபிக்கை சமாளிக்க முடியாமல் தன்னுடைய அரிய வகை காரையே விற்றிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, June 28, 2024, 18:08 [IST]
English summary
Imran khan swaps ferrari for vw polo gt here is more details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+