அரசு பஸ் டிரைவர்கள் கூடவா... ட்ரங் & டிரைவில் சிக்கிய 26 பஸ் டிரைவர்கள்!! வெறும் சில மணிநேரங்களில்...

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது எந்தவொரு பயண சூழலிலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. வாகனம் ஓட்டும்போது போதிய கவனத்துடன் இல்லையென்றால், அது நமக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதிலிலும் குறிப்பாக பேருந்து ஓட்டுனர்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகம். இப்படிப்பட்ட நிலையில், கேரளாவில் கொச்சியில் ஒரே நாளில் 26 பேருந்து ஓட்டுனர்கள் மருந்து அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக போலீஸாரிடம் பிடிப்பட்டு உள்ளனர். கொச்சியில் ஹில் பேலஸ் என்ற பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் பிடிப்பட்டுள்ள இந்த ஓட்டுனர்கள் அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளை இயக்கக்கூடியவர்கள்.

கேரளாவில் ட்ரங் & டிரைவில் சிக்கிய 26 பஸ் டிரைவர்கள்!!

போலீஸாரின் இந்த சோதனையின் மூலம் சின்னச்சிறு பள்ளி குழந்தைகளின் வாழ்விலும் பேருந்து ஓட்டுனர்கள் கவன குறைவாக செயல்படுவது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட பேருந்து ஓட்டுனர்களை 'இனிமேல் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்' என ஆயிரம் முறை எழுதி கொடுக்கும்படி போலீஸார் ஆணையிட்டுள்ளனர். இதன்படி, பிடிப்பட்ட 26 பேருந்து ஓட்டுனர்களும் வரிசையாக அமர்ந்து காகிதங்களில் இனிமேல் மது அருந்த மாட்டேன் எழுதி கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மது அருந்திவிட்டு டிரைவ் செய்தது உள்பட ஹில் பேலஸ் போலீஸார் நடத்திய சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத 32 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி பரபரப்பான திங்கட்கிழமை காலை வேளையில் திரிப்புணித்துரா ஹில் பேலஸ் போலீஸ் அதிகாரி வி கோபகுமார் தலைமையில் இந்த அதிரடி சோதனை திடீரென நடத்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் சோதனையில், 2 கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுனர்கள், 20 தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் 4 பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டுள்ளது. பெயில் கொடுக்கும் முன்னர் இவர்கள் அனைவரையும் 1,000 முறை 'இனிமேல் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டேன்' என எழுத சொல்லியது மட்டுமின்றி, இவர்கள் அனைவரது ஓட்டுனர் உரிமத்தையும் போலீஸார் ரத்து செய்துள்ளனர்.

கேரள உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனையை போலீஸார் அதிரடியாக மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின் முக்கிய நோக்கமே மது அருந்திவிட்டு எத்தனை பேர் வாகனம் ஓட்டுக்கின்றனர் என்பதை கண்டறிவதாகும். ஆனால் இதில் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் உள்பட 26 பேருந்து ஓட்டுனர்கள் சில மணிநேரத்திலேயே சிக்குவர் என்பது போலீஸாருக்கே சற்று அதிர்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

கேரளாவில் ட்ரங் & டிரைவில் சிக்கிய 26 பஸ் டிரைவர்கள்!!

அதிலிலும், பரபரப்பான வார நாட்கள் துவங்கும் திங்கட்கிழமை காலையிலேயே இத்தனை பேர் மது அருந்துவிட்டு பேருந்தை இயக்கி இருப்பது கொச்சி போலீஸார் இடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு செல்ல வேண்டும் என போலீஸாருக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு பேருந்துகளின் ஓட்டுனர்களே இவ்வாறு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி இருப்பது கே.எஸ்.ஆர்.டி.சி -இல் உள்ள அலட்சிய போக்கை காட்டுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அளவில் சிறிய மாநிலமாக இருப்பினும் இந்தியாவில் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெறக்கூடிய மாநிலங்களுள் ஒன்றாக கேரளா இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 14, 2023, 14:45 [IST]
English summary
In few hours 26 bus drivers caught for drunk driving in kochi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+