அமைச்சர் சொல்லும் இந்த விஷயம் மட்டும் நடந்தால், இரண்டு வருடத்தில் பெட்ரோல், டீசல் விலையை பற்றி கவலையே இல்லை
அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்த முழு தகவல்களை காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் வாகனங்களின் பயன்பாடு குறித்த மக்களின் மனம் மெல்ல மெல்ல மாறி வருகிறது. பெட்ரோல் டீசல் வாகனங்களைப் பயன்படுத்த வந்த மக்கள் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகரத் துவங்கிவிட்டனர். பெட்ரோல் டீசல் வாகனங்கள் தான் இன்றும் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகமாகி வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை மிக சுலமான இன்ஜினியரில் முறை தான் பேட்டரியில் இயங்கும் மோட்டார். அந்த மோட்டாரில் இயங்கும் வாகனம் இவ்வளவு தான் விஷயம் வாகனத்தை ஊந்தி தள்ளும் திறன் கொண்ட மோட்டாரும், அந்த மோட்டாருக்கு போதுமான மின் சக்தியை வழங்கும் பேட்டரியும் தான் இந்த வாகனங்களின் முக்கியமான அம்சம்.

பொதுவாக மோட்டார்களுக்கு அதிகமான மின் சக்தி தேவைப்படும் இந்த அளவுக்கான மின் சக்தியை லித்தியம் அயான் பேட்டரிகள் வழங்கும் இந்த பேட்டரிகள் தான் நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டது அதே போல அதிகமான மின் சக்தியைச் சேமித்து வெளிப்படுத்தும் திறனும் இந்த பேட்டரியில் தான் இருக்கிறது.

இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த லித்தியம் அயான் பேட்டரிகளை கொண்டு வாகனங்களைத் தயாரித்து மார்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

இருசக்கர வாகனத்தைப் பொறுத்தவரை மொத்தம் 2 வகை உள்ளன. ஒன்று குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய வாகனம் மற்றொன்று சாதாரண வாகனம் போல இயங்கக்கூடிய வாகனம். இந்த ஸ்கூட்டர்களை ஹீரோ எலெக்ட்ரிக், ஓலா, ஒகினாவா, கோமாகி, ஏத்தர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தயாரித்து மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

இதே போல எலெக்ட்ரிக் கார்களும் தற்போது மார்கெட்டில் விற்பனையாகி வருகின்றன. பல பெரிய நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல இடங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பதாகப் பல செய்திகள் வந்தது. இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த செய்திகள் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான எலெக்டரிக் ஸ்கூட்டர் விற்பனையை பெரியதாகப் பாதிக்கவில்லை. நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் அதிகமாகி வருகிறது. அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான போதுமான விதிமுறைகளைப் புதிதாக வகுத்துக்கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் அறிவியல் தொழிற்நுட்ப பூங்காவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தயாரிப்பைத் துவக்கி வைத்துப் பேசினார். அப்பொழுது அவர் எலெக்டரிக் வாகனங்கள் குறித்த முக்கியமான விஷயங்களைப் பேசியுள்ளார்.

அவர் பேசும் போது தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் 250 ஸ்டார் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதில் பெரும்பாலான நிறுவனங்கள் நல்ல ஸ்கூட்டர்களை தயாரித்து வருகின்றனர். அவைகளை மக்களும் ஆர்வமாக புக் செய்து வாங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது இந்தியாவில் மொத்தம் 12 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் இருப்பதாகவும், அது இந்தாண்டு இறுதிக்குள் 40 லட்சம் வாகனங்களாக மாறும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது 3 கோடி வாகனங்களாக உயர்ந்திருக்கும் என்றும் பேசியுள்ளார். இந்த வளர்ச்சி என்பது இதுவரை யாரும் பெற்றிராத வளர்ச்சியாகும்.

மேலும் அவர் குறிப்பிடும் போது இந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு துறையில் பல புதிய மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல முன்னணி நிறுவனங்களுக்கு வாகன தயாரிப்பில் கடும் போட்டியைக் கொடுக்கின்றன. சிறிய நிறுவனங்கள் கூட தரமான ஸ்கூட்டர்களை மார்கெட்டிற்கு கொண்டு வருகின்றன. எனப் பேசியுள்ளார்.

இந்தியாவில் எலெக்டரிக் வாகனங்கள் மீதான மவுசு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மக்கள் எல்லோரும் தங்கள் வாகனங்களை மாற்றும்போதோ புதிய வாகனங்களை வாங்கும்போதோ எலெக்ட்ரிக் வாகனங்களை ஒரு ஆப்ஷனாக பார்க்கத் துவங்கவிட்டனர். என்பதை அமைச்சர் நிதின்கட்காரின் இந்த தகவல்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிக மோகம் கொள்வதற்கு முக்கியமான காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான் எனக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் சொல்வது மட்டும் நடந்துவிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலையேற்றம் பற்றி கவலையே இருக்காது என அடித்துக் கூறலாம்


Click it and Unblock the Notifications








