வீட்டுக்கு வீடு பைக் வச்சிருப்பதை போல இந்த கிராமத்துல ஆளாளுக்கு விமானம் வச்சிருக்காங்க! அது எந்த கிராமம்?

நம்ம ஊரில் வீட்டுக்கு ஒரு சைக்கிள், பைக் இருப்பதை போலவே குறிப்பிட்ட ஓர் நாட்டின், குறிப்பிட்ட ஓர் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விமானம் (Aircraft) இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த கிராமம்? அந்த கிராமம் எங்கு உள்ளது?..

மேலும், வீட்டுக்கு ஒரு ஏரோபிளேனை வைத்திருக்கும் அளவிற்கு அந்த கிராமத்திற்கு வசதி வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். முதலில் இந்த தகவல் உண்மைதானா? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கான கேள்வியையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Cameron airpark top view

நம்மல்ல ஒரு சிலர் புதிதாக பைக் வாங்கவே திக்கு-முக்காடிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த வாசிகள் வீட்டுக்கு ஒரு விமானத்தை (குட்டி ஏரோபிளேனை)-ப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, வீட்டுக்கு வீடு சைக்கிள், மோட்டார்சைக்கிள் மற்றும் கார் போன்ற வாகனங்களை வைத்திருப்பதைப் போல அந்த கிராமவாசிகள் அசால்டாக வீட்டிற்கு ஓர் சிறிய வகை விமானத்தை வைத்து இருக்கின்றனர்.

இந்த கிராமம் வேறு எங்கும் இல்லைங்க, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலேயே உள்ளது. இங்கு கேமரூன் ஏர்பார்க் எனும் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராம வாசிகளே வீட்டுக்கு ஒன்று என சொந்தமாக விமானத்தை வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த தகவல் ஒட்டுமொத்த உலகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கலாம்.

Cameron airpark street view

ஆனால், அது உண்மையே. கிராம வாசிகள் நீண்ட காலமாக விமானங்களை சொந்தமாக வைத்திருக்கின்றனர். சொந்த பணி, வேலை மற்றும் வணிக நோக்கம் பல்வேறு காரணங்களுக்காக இங்குள்ள மக்கள் ஆடம்பரமான தனிப்பட்டை விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆகையால், இந்த கிராமவாசிகளுக்கு ஃப்ளை-இன் சமூகம் என்றும் பெயரும் உண்டு. வெளியூர் நபர்களால் இந்த கிராமத்தில் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், உள்ளூர் வாசி அனுமதித்தால் மட்டும் வெளியாட்களால் கிராமத்திற்குள் நுழைய முடியும். மேலும், ஒவ்வொருவர் வீட்டிலும் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு என தனி ஏர்கிராஃப்ட் ஹேங்கர்கள் மற்றும் விமான நிறுத்துமிடமும் உள்ளன.

Villagers owning private plane

பலர் தங்களுடைய வீட்டு வாசலிலேயே பைக் மற்றும் காரை நிறுத்தி வைத்திருப்பதைப் போல விமானங்களை நிறுத்தி வைத்திருக்கின்றனர். கிராமத்தில் உள்ள பெரும்பாலானோரிடத்தில் விமானத்தை இயக்குவதற்கான லைசென்ஸும் உள்ளது. இது இல்லாமல் விமானத்தை இயக்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர்.

இதனால்தான் அவர்களால் தடையில்லாமல் விமானங்களை பயன்படுத்தவும், இயக்கிக் கொள்ளவும் முடிகின்றது. மேலும், இந்த கிராமத்தில் ஒட்டுமொத்தமாக 124 வீடுகள் உள்ளன என்றும் இக்கிராமம் 1963 இல் உருவாக்கப்பட்டவை என்றும் கூறப்படுகின்றது. இங்கு உள்ள தெரு பெயர்கள், சாலைகள் பெயர்கள் மற்றும் சில இல்லங்களின் பெயர்கள் கூட விமானத்தின் பெயரைக் குறிக்கும் வகையிலேயே இருக்கின்றன.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் பல விமான ஓடுதளங்கள் முன்னேற்றம் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டன. இத்தகைய விமான நிலையங்களையே ஓய்வு பெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமான பூங்காவாக விமானப் போக்குவரத்து ஆணையம் மாற்றும் நடவடிக்கையில் களமிறங்கியது. இந்த பணிகளை இப்போதும் அது மேற்கொண்டு வருகின்றது.

ஆகையால், கலிஃபோர்னியாவில் உள்ள இந்த கேமரூன் ஏர்பார்க்கை-ப் போலவே அந்நாட்டின் ஃப்ளோரிடாவில் ஸ்ப்ரூஸ் க்ரீக் எனும் ஏர்பார்க் உள்ளது. இந்த கிராமமும் கேமரூன் ஏர்பார்க்கைப் போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பூங்காக்களில் தனியார் ஜெட் விமானங்கள் முதல் வரலாற்று சிறப்பு விமனங்கள் வரை என ஏகப்பட்ட விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 650 விமானங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ப்ரூஸ் க்ரீக்கில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மேலும், 1,300 வீடுகள் இருக்கின்றன. இதுதவிர, 700 விமானங்களும் அங்கு பயன்பாட்டில் உள்ளன. இதுபோல் அமெரிக்காவில் மொத்தமாக 426 குடியிருப்பு விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கிராமங்களில் கிராம வாசிகள் எளிதில் விமானத்தை இயக்கிக் கொள்ளும் விதமாக சாலையும் மிக அகலமானதாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இதைக் கொண்டே அவர்கள் விமானத்தின் ஓடுதளமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காலத்துல, குறிப்பாக, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் பலர் பைக் மற்றும் புதிய காரை வாங்கவே திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் இப்படி ஒரு கிராமமா என்றே நம்மை இந்த தகவல் வாயை பிளக்கச் செய்திருக்கின்றது. அதேவேளையில், இந்த விமானங்களை பார்ப்பதற்காகவே நாமலும் அந்த ஊருக்கு போய்விடலாமா என்றும் நினைக்கச் செய்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 12, 2023, 18:24 [IST]
English summary
In this village every home have atleast one aircraft
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X