புனேல நடந்த சம்பவத்த மட்டுமே நாம பேசிட்டு இருக்கோம்.. இன்னும் 2சம்பவம் இந்தியால இந்த ஒரே வாரத்துல நடந்திருக்கு
சக்திவாய்ந்த என்ஜினைக் கொண்ட சூப்பர் கார்கள், இந்திய சாலைகளில் மிகவும் பொதுவான காட்சியாக மாறி வருகின்றன. ஆமாங்க இந்தியர்கள் அதிக திறனை வெளிப்படுத்தும் சூப்பர் கார்களை மிக அதிகளவில் வாங்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவாக முன்பு அரிதாக சாலைகளில் தென்பட்டு வந்த சூப்பர் கார்கள் தற்போது மிக அதிகளவில் தென்பட தொடங்கி இருக்கின்றன.
இதேபோல், அவை சர்ச்சையில் சிக்குவதும் தொடர் கதையாகி இருக்கின்றது. இதற்கு சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அரங்கேறிய போர்ஷே சூப்பர் கார் விபத்து சம்பவமே சான்று. மதுபாதையில் இருந்த 17 வயது சிறுவன் தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான போர்ஷே டேகன் காரை மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினான்.

இந்த விபத்தில் ஐடி ஊழியர்கள் இருவர் பரிதாபமாக பலியாகினர். இத்தகைய சர்ச்சனையான சம்பவத்தை நிகழ்த்திய அந்த சிறுவனுக்கு கட்டுரையை எழுத சொல்லி, மஹாராஷ்டிரா நீதிமன்றம் ஜாமீனை வழங்கி மறுநாளே விடுவித்தது. நீதிமன்றத்தின் இந்த செயல் இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையிலேயே சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார். இந்தியாவில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்தின் உரிமையாளர் தண்டிக்கப்படுவார்கள் என விதிகள் கூறுகின்றன. இந்த நிலையிலேயே சிறுவனின் தந்தையும், பிரம்மா ரியாலிட்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளருமான விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், சிறுவனுக்கு மது பரிமாறியதாகக் கூறி தனியார் மதுபான விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த வாரத்தில் இந்த ஒரே ஒரு போர்ஷே கார் மட்டும் விபத்தை சந்திக்கவில்லை.
இன்னும் இரண்டு போர்ஷே கார்களும் விபத்தைச் சந்தித்து இருக்கின்றன என்கிற தகவலே அதுவாகும். மேலும், மற்ற விபத்துகளுக்கும் அதிக வேகமே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த சம்பவங்களை வைத்து பார்க்கையில் போர்ஷே போன்ற அதிக வேக கார்கள் இந்தியாவிற்கு பொருத்தமற்ற கார்களோ என நினைக்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன.

ஆனால், நாம் இவ்வாறு சொல்லிவிட முடியாது. நாட்டில் விற்கப்படும் பெரும்பாலான கார்கள் அதிக வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன. அதை சரியாக கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர்கள்தான் அந்த காரை ஓட்டுகின்றார்களா என்பதே இங்கு சந்தேகம். பணம் இருக்கின்ற காரணத்தினாலும், சூப்பர் கார்கள் மீது இருக்கின்ற அதீத ஆர்வத்தின் காரணமாகவும் சில செல்வந்தர்கள் சூப்பர் கார்களை வாங்கிப் போட்டுவிடுகின்றனர்.
ஆனால், உண்மையில் அதை ஓட்டுவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள அவர்கள் தவறிவிடுகின்றனர். மேலும், வழக்கமான கார்களை இயக்குவதைப் போலவே சூப்பர் கார்களையும் அவர்கள் ஓட்டி வருகின்றனர். இதன் விளைவாகவே இந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து என மூன்று போர்ஷே கார்கள் சூன்யம் வைத்ததைப் போல விபத்தில் சிக்கி இருக்கின்றன.

புனேவில் அரங்கேறிய போர்ஷே கார் விபத்தைத் தொடர்ந்து இன்னும் இரண்டு போர்ஷே கார்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. புனேவைத் தொடர்ந்து அதே மஹாராஷ்டிரா மஹாராஷ்டிரா மாநிலத்தின் கோந்தலி எனும் பகுதியிலேயே மற்றுமொரு போர்ஷே கார் விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
இந்த விபத்தில் சம்பவத்தில் போர்ஷே 911 கர்ரேரா டி மாடல் ஆகும். அதிக வேகத்தில் வந்த போர்ஷே கர்ரேரா டி சூப்பர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
இதன் காரணத்தினாலேயே இந்த சம்பவம் பெரிய அளவில் பேசு பொருளாக மாறவில்லை. இதற்கு அடுத்தபடியாக, அதாவது, மூன்றாவது போர்ஷே கார் விபத்து சம்பவம் கேரளா மாநிலத்தில் அரங்கேறி இருக்கின்றது. இந்த விபத்து சம்பவத்திலும் போர்ஷே கார் இரண்டு சக்கர வாகனத்துடனேயே மோதிய இருக்கின்றது. மேலும், இதிலும் உயிரிழப்புகள் அரங்கேறி இருக்கினறன. ஆனால், இந்த நிகழ்வு பற்றிய தகவல்கள் மிகப் பெரிய அளவில் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவங்களை வைத்து பார்க்கையில் விலை உயர்ந்த கார்கள் விபத்தில் சிக்கினால் பெரிய அளவில் தகவலும் வராது, நடவடிக்கையும் இருக்காதோ என்றே நம்மை சந்தேகிக்கச் செய்திருக்கின்றது. அதுதவிர, இந்தியாவிற்கு அதிக வேகம் என்பது எப்போதுமே செட் ஆகாது என்பதும் உறுதியாகி இருக்கின்றது. ஆகையால், அரசு அதிக வேக பயணம் மற்றும் சூப்பர் கார்களுக்கு எதிராக இன்னும் கடுமையான விதிகளைக் கையாள வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









