கார், பைக்குல தேசிய கொடி மாட்டுனா ஜெயிலுக்கு தான் போகனும்! ஏன் தெரியுமா?
இந்தியாவில் 79வது சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாடட்டங்களில் ஒரு பகுதியாக நாளை வாகனங்களில் பயணிக்கும் பலர் தங்கள் வாகனங்களில் நமது தேசிய கொடிமாட்டிக்கொண்டு பயணிப்பார்கள். ஆனால் இந்தியாவில் தேசிய மரியாதை அவமதிப்பு சட்டப்படி இது குற்றமாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து கடந்த 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம். அன்று நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்படும். இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் பலர் தங்கள் வாகனங்களில் தேசிய கொடியை அந்த நாளில் பொருத்துவார்கள்.
ஆனால் இந்தியாவில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை கொடுப்பது பற்றி அரசியலமைப்பு சட்டம் தேசிய ஹானரிங் சட்டம் 1971 பிரிவு 3.23 சில விதிமுறைகளை சொல்லுகிறது. அதன்படி வாகனங்களில் தேசியகொடியை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்கள், லெஃப்டனென்ட் கவர்னகள், பிரதமர், கேபினெட் அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மற்றும் மாநில கேபினட் அமைச்சர்கள், சபாநாயர், துணை சபாநாயகர்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா சேர்மன் மற்றும் துறை சேர்மன், இந்திய தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதி மற்றும் மற்ற நீதிபதிகள் மட்டுமே வாகனங்களில் இதை பயன்படுத்த முடியும்.

மற்ற யாரும் வாகனங்களில் நேரடியாக இந்திய தேசிய கொடியை பயன்படுத்க்கூடாது என சட்டம் சொல்கிறது. இந்திய குடிமகன்கள், வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவது, கைகளில் கொடியை ஏந்தி செல்வது எல்லாம் அனுமதிக்கப்டுகிறது. மாறாக வாகங்களின் ஹூட் பகுதியில் தேசிய கொடியை ஸ்டிக்கராக ஒட்டுவது, காரின் ரூஃப்,பக்கவாட்டு பகுதிகள், பின்பகுதி, கண்ணாடி பகுதிகள், ரயில், படகு உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் சொல்கிறது.
இன்று சாலைகளில் வாகனங்களில் பலர் தங்கள் தேசிய பற்றை காட்ட வாகனங்களில் தேசிய கொடியை பல்வேறு விதமாக பயன்படுத்துவார்கள். இது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். இது இந்தியாவின் தேசிய கொடியை அவமதிப்பு செய்தததாக கருதப்படும். இப்படியாக வாகனங்களில் நீங்கள் தேசிய கொடியை பயன்படுத்தினால் நீங்கள் சிறைகக்கு செல்ல கூட வாய்ப்புள்ளது

இந்தியாவின் தேசிய கொடிண் மாண்பு வாயந்தது. இதை பின்பற்றுவதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அதை பின்பற்றி தான் தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் அது சட்ட விதிமுறை மீறலாக மாறி உங்கள் மீது சட்ட நடவடிக்கை கூட பாயலாம். இதனால் நீங்கள் வாகனங்களில் இப்படியாக தேசிய கொடியை பொருத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இது குறித்து அரச தரப்பிலிருந்து விழிப்புணர்வுகள் செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனத்தில் கொண்டு வாகனங்களில் தேசிய கொடியை வைத்து மாடிஃபிகேஷன் செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் நீங்கள் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்குவதை தவிர்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் நமது தேசிய உணர்வை காட்டுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கிறது. நமது வாகனத்தில் தேசிய கொடியை பொருத்தி காட்டுவது சட்ட விரோதம் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இனி இது குறித்து நீங்களும் புரிந்து மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள்.


Click it and Unblock the Notifications









