உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய கார்கள்! இதுக்காக நாம எல்லாரும் பெருமைப்படணும்!
இந்தியா தனது சுதந்திர தினத்தை நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் இந்தியா உருவாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க கார்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இங்கே நாங்கள் தொகுத்துள்ள கார்கள், நிச்சயம் உங்களுக்கும் விருப்பமான காராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டாடா இண்டிகா: இது ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்தியாவின் பயணிகள் வாகன செக்மெண்ட்டில், இண்டிகா கார் மூலமாகதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காலடி எடுத்து வைத்தது. அதற்கு முன்பு வரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக வாகனங்களை மட்டுமே தயாரித்து கொண்டிருந்தது.

இறுதியில் பயணிகள் வாகன செக்மெண்ட்டில் நுழைவது என முடிவு செய்து, டாடா மோட்டார்ஸ் களமிறக்கிய கார்தான் இண்டிகா. மாருதி ஜென் போன்ற கார்களுக்கு போட்டியாக டாடா இண்டிகா களமிறக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக டாடா இண்டிகா உயர்ந்தது.
மஹிந்திரா ஸ்கார்பியோ: டாடா இண்டிகாவிற்கும், மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இண்டிகா கார் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்படி பயணிகள் வாகன சந்தையில் நுழைந்ததோ, அதேபோல்தான் ஸ்கார்பியோ கார் மூலமாக மஹிந்திரா நிறுவனமும் பயணிகள் கார் செக்மெண்ட்டில் காலடி எடுத்து வைத்தது.

என்ன, டாடா இண்டிகா ஹேட்ச்பேக். மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி. கடந்த 2002ம் ஆண்டுதான் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சுமார் 21 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்றளவும் கூட மஹிந்திரா ஸ்கார்பியோ கார் அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








