சீனா-பாகிஸ்தான் எல்லாம் இனி கடல்ல இறங்கவே பயப்பட போறாங்க! இந்தியா தயாரிக்கப்போகும் வேற லெவல் நீர் மூழ்கி!
இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து கல்வேரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் ஒப்பந்தத்தை செய்துள்ள நிலையில் இரு நாடுகளும் மீண்டும் இணைந்து எஸ்5 ரக நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் பணியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிரதமர் மோடி பாரீஸ் சுற்றுப்பயணம் சென்றபோது இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான ராணுவ பாதுகாப்பு குறித்த பல முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது அதன்படி இந்திய ராணுவத்திற்கு கடற்படையில் பலத்தை மேம்படுத்த போர்க்கப்பலில் பயன்படுத்தப்படும் ரஃபேல் ரக விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை நேரடியாக டஸால்ட் நிறுவனத்துடன் செய்யாமல் பிரான்ஸ் நாட்டுடன் செய்து அந்நாடு இந்தியாவிற்காக இந்த ரஃபேல் ரக விமானத்தை டஸால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் இந்தியாவின் போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படக்கூடிய ரஃபேல் ரக விமானங்கள் வர உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சமாக இந்தியாவில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் வைத்து பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து கல்வேரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி இதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளன.இதற்கான பேப்பர் வேலைகள் நடந்து வருகிறது.
தற்போது இந்த ரபேல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பது குறித்த தொழில்நுட்ப தகவல், அதற்கான விலை, டெலிவரி தேதி உள்ளிட்ட முக்கியமான முடிவுகளை எடுக்கும் பேச்சு வார்த்தை உச்சகட்டத்தில் நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது பிரான்ஸ் நாடு இந்தியாவின் அணு ஆயுத கப்பல் திட்டத்திற்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவிடம் அணு ஆயுதத்தை நீர்மூழ்கி கப்பல் மூலம் எடுத்துச் சென்று பயன்படுத்துவதற்காக ஒரு கப்பலை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. அந்தத் திட்டத்திற்கு எஸ்5 நீர்மூழ்கி கப்பல் என இந்தியா பெயரிட்டுள்ளது. இந்த கப்பலுக்கான டிசைன் மற்றும் இதன் செயல் திறன் உள்ளிட்ட மற்ற அனைத்தும் தயாரான நிலையில் இந்த கப்பலை தயாரிக்கும் பணி தான் தற்போது பாக்கி உள்ளது.
இந்த கப்பலில் உள்ள டிசைனின் படி சில தொழிற்நுட்பங்கள் இந்தியாவிடம் இல்லை. இதை வெளிநாட்டில் தான் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது இதனால் இதன் கட்டுமானத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரான்ஸ் நாடு இந்த கப்பலின் கட்டுமானத்திற்கு உதவுவதாக தெரிவித்துள்ளது.
இந்த எஸ்5 ரக நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை தாங்கி நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை இந்தியாவே தயாரிப்பதில் பம்ப் ஜெட் புரோபல்ஷன் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லாமல் இருக்கிறது.
இந்த பம்ப் ஜெட் புரோபல்ஷன் சிஸ்டம் என்பது குறிப்பிட்ட பொருளை குறைவான நேரத்தில் அதிக வேகத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாகும். இந்தத் திறன் நீர் மூழ்கிகளுக்கு மிகவும் அவசியம். குறிப்பாக நீருக்கு அடியில் பயணம் செய்யும் அனைத்து விதமான பொருள்களுக்கும் இப்படியான ஒரு சிஸ்டம் இருப்பது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
நீருக்கடியில் இருந்து எதிரிகளின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை தாக்குவது மற்றும் எதிரிகள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விதமான தாக்குதல்களுக்கு இந்த சிஸ்டம் பயன்படும். இந்த சிஸ்டத்தை பிரான்ஸ் நாடு இந்தியாவிற்கு தருவதாக தற்போது வாய்மொழியாக பேச்சுவார்த்தையின் ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்த பேச்சுவார்த்தைகள் இதுவரை துவங்கவில்லை. இந்த பேச்சுவார்த்தை துவங்கும்போது தான் இது குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும். பிரான்ஸ் நாட்டிலிருந்து பெறப்படும் இந்த சிஸ்டம் மூலம் நீருக்கடியில் செல்லும் ஏவுகணைகளில் இதை பயன்படுத்தி விரைவாக அணு ஆயுத தாக்குதலை செய்யும் நீர்மூழ்கி கப்பலாக எஸ்5 மாறும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா பிரான்ஸ் போன்ற மிக முக்கியமான நாடுகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் கைகோர்த்து இருப்பது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு மிகப்பெரிய பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பிரான்ஸ் நாடும் இந்தியாவும் தனது ராணுவத்தை சிறப்பாக மேம்படுத்த உதவும்.


Click it and Unblock the Notifications








