மின்சார வாகனத்துக்காக புது தொழிற்சாலை... மத்திய அரசு அதிரடி!
நாட்டில் மின் வாகனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தற்போது ஓர் புதிய யுக்தியை கையாள சர்வதேச நிறுவனம் ஒன்றுடன் கை கோர்த்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் நோக்கில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு சமீபகாலமாக ஊக்குவித்து வருகிறது.

இதற்காக, மின்சார வாகனங்களுக்கு சலுகைகளையும் வழங்க அது திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் குறைக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, பெட்ரோல் இருசக்கர வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில், மாசினை ஏற்படுத்தும் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு பசுமை வரி என்னும் புதிய வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

இதன்மூலம், பெட்ரோல் இருசக்கர வகானங்களின் விலையானது சற்று உயரும். தொடர்ந்து இந்த வாகனங்களின் பயன்பாடு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பெட்ரோல் பைக்குகளின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு மின்சார இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் வகையில், மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், மின்சார வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக செயல்படுவது தான். இத்தகைய மின்சார வாகனங்களின் இதயமாக செயல்படுவது பேட்டரிகள். இவை தற்போது வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு வாங்கப்படும் பேட்டரிகளின் விலை மிக அதிகாமக உள்ளது.

இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தும் லித்தியம்-அயன் பேட்டரிகளை உள் நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பெல் (BHEL) நிறுவனத்தை லிப்காயின் என்னும் சர்வதேச நிறுவனத்துடன், கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை அமைச்சகம் இணைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நாட்டிலே முதல்முறையாக லித்தியம்-அயன் பேட்டரி ஜிகாபேக்டரி உருவாக உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த லிப்காயின் தலைவர் ராஜன் டுக்கல் கூறியதாவது,

"இந்தியாவில் மிகப்பெரிய லித்தியம்-அயன் பேட்டரி தொழிற்சாலையை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் உலகின் பேட்டரிச் சந்தையில் முதலாவது இடத்தைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் இந்திய ஆட்டோமொபைல் துறையே மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

ஆரம்பத்தில் 1 ஜிகாவாட்ஸ் பேட்டரி தயாரிப்பினை துவங்கி, பின்னர் படிபடிப்படியாக 30 ஜிகாவாட் பேட்டரி வரை தயாரிக்க கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை அமைச்சகம் அறிவுருத்தியுள்ளது.

இந்த திட்டமானது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் ஒரு அங்கமாகும்" என தெரிவத்தார்.


Click it and Unblock the Notifications








