டிசம்பர் மாதம் இந்த தேதியில் வேற எந்த வேலையும் வச்சுக்காதீங்க! கோவாவிற்கு போக ரெடியாகுங்க!
ஆசியாவின் மிகப்பெரிய பைக் திருவிழாவான இந்தியன் பைக் வீக் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்கிறது. இதற்கான தேதிகள் மற்றும் இடம் குறித்த தகவல் எல்லாம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பைக் விரும்பிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இது மிகப்பெரிய பைக்கின் திருவிழாவாக நடைபெற உள்ளது. என்று இந்த நிகழ்ச்சி நடக்கிறது? எங்கு நடக்கிறது? யாரெல்லாம் இதில் பங்கேற்கிறார்கள்? என்ற விரிவான விபரங்களை பார்ப்போம்.
ஆசியாவின் மிகப்பெரிய பைக்கிங் திருவிழாவான இந்தியா பைக் வீக் இந்த ஆண்டு நடப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2024 இந்தியா பைக் வீக் நிகழ்வு வரும் டிசம்பர் மாதம் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் நடக்கிறது. கோவாவில் உள்ள வாகிட்டார் என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னாடி இதே நிகழ்வு பலமுறை இதே இடத்தில் தான் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதும் உள்ள பைக் ரைடர்கள் பலர் பங்கேற்க உள்ளார்கள். இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் வரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவில்லை. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த நிகழ்வை குறி வைத்து தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவார்கள். அதன்படி இந்த நிகழ்ச்சியில் பல்வேறு புதிய தயாரிப்புகள் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இது போன்ற நிகழ்வுகளில் தான் கேடிஎம் 790 அட்வெஞ்சர், டிரையம்ப் ராக்கெட் 3, கவாஸகி எலிமினேட்டர் ஆகிய பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்தாண்டு அப்ரில்லா ஆர் எஸ் 457 என்ற பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்தாண்டை போல இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விஷயங்கள் நடைபெற உள்ளன. முக்கியமாக கஸ்டம் பில்ட் பைக்குகள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. பலர் தங்கள் பைக் ரைட்டிங் மற்றும் ஓனர்ஷிப் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்கள். வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. மியூசிக் திருவிழாவும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.
இந்த 2024 இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் பல விண்டேஜ் பைக்குகள் ஸ்கூட்டர்கள் கஸ்டமாக பில்டு செய்யப்பட்ட பைக்குகள் பங்கேற்க உள்ளன. மேலும் ரைடர் குரூப்பில் இருந்து பல்வேறு நபர்கள் பங்கேற்க உள்ளார்கள். இதுபோக பைக்கிற்கான ஆக்சஸரீஸ்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.
இதுபோக பைக்கை மாடிஃபிகேஷன் செய்யக்கூடிய கருவிகள் பைக்கின் பெர்ஃபார்மென்ஸ் மேம்படுத்தக்கூடிய கருவிகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. மேலும் இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரைடர்களுக்கு பல்வேறு விதமான தள்ளுபடிகளை வழங்குகிறார்கள். இதன் காரணமாகவே பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளன என்ற விபரங்களும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தற்போதே பலர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பைக்கிலேயே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலந்து கொள்ள ரைடிங் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். டிசம்பர் மாதம் கோவாவில் பைக் ரைடர்கள் மிகப்பெரிய அளவில் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சியை மிகப்பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பைக் ரைடர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாள் கனவில் இருக்கிறார்கள். கோவாவிற்கு சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு உற்சாகம் கிடைக்கிறது. அதே நேரம் பைக்குகள் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது என நினைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு நிலையில் இந்த ஆண்டு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








