டிசம்பர் 12-13 வேற வேலை எதுவும் வச்சிக்காதீங்க! கோவாக்கு போக டைம் வந்துடுச்சு!

2025ம் ஆண்டிற்கான இந்தியா பைக் வீக் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 12-13ம் தேதி கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக டிவிஎஸ் மோட்டோஸோல் நிகழ்ச்சியும் ஒன்றாக நடக்கும் நிலையில் இந்தாண்டு இரண்டு நிகழ்ச்சிகளையும் தனித்தனியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் அடுத்த எடிசன் இந்தாண்டு டிசம்பர் மாதம் வழங்க திட்டமிடப்பறட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பைக் மற்றும் மியூசிக்கை வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதம் 12மற்றும் 13ம் தேதி இந்தியா பைக் வீல் 2025 நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவாவில் உள்ள வேகட்டார் என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

india bike week 2025

இந்த நிகழ்ச்சியில் பைக், மியூசிக் கலாச்சார நிகழ்ச்சி நடக்கும். வழக்கமாக டிவிஎஸ் மோட்டோஸோல் மற்றும் இந்தியா பைக் வீக் நிகழ்ந்து சேர்ந்து நடைபெறும். ஆனால் இந்த முறை டிசம்பர் 5-6ம் தேதி கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி 12-13 ம்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பைக் பிரியர்களை ஒரே குடையில் இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை வெளியிட திட்டமிடுவார்கள். இதனால் மார்கெட்டில் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தும். இதில் கஸ்டம் பைக் டிஸ்பிளே, ஸ்டண்ட் ஷோ, டிரிட் டிராக்குகள், ஃபிளாட் டிராக்குகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

india bike week 2025

முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் பிரிக்ஸ்டன் கிராஸ்ஃபயர் 500 ஸ்டூர் என்ற அட்வெஞ்சர் பைக்கை இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னதாக இதற்கான புக்கிங்கிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகம் இந்த நிகழ்ச்சியில் நடைபெறும்.

இந்தபைக்கில் 486 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ட்வின் சிலிண்டர் இன்ஜின் உடன் வருகிறது. இது 47 பிஎச்பி பவரையும் 43 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஹோண்டா என்எக்ஸ் 500, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450, கேடிஎம் 390 அட்வெஞ்சர் மற்றும் சிஎஃப் மோட்டோ 450 எம்டி ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

india bike week 2025

இந்தாண்டு நடக்கவுள்ள நிகழ்ச்சி 12வது ஆண்டாக நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சி பைக் விரும்பிகளை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாக நடக்கும் இந்தியாவில் நடக்கும் முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இங்கு மியூசிக் உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இங்கு பங்கேற்பவர்கள் உலகம் முழுவதிலிருந்து வரும் பயணிகளிடம் கலந்தாய்வு செய்ய வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா பைக் வீக் மிக முக்கியமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். தற்போது இதின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க நினைப்பவர்கள் உடனடியாக கோவாவிற்கு செல்ல தயாராகுங்கள். இதற்கான முன்பதிவு குறித்த விபரங்கள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 5, 2025, 14:30 [IST]
English summary
India bike week 2025 vagator goa dates december 12 13
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X