இந்தியாவின் முதல் அஸ்டன் மார்டின் வான்டேஜ் காரை வாங்கியவர் யார் தெரியுமா?
இந்தியாவில் முதன்முறையாக அஸ்டன் மார்டின் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவர் வாங்கிய இந்த அஸ்டன் மார்டின் கார் உலகிலேயே மிக லிமிட்டட் எடிஷனாக தயாரிக்கப்படும் ஒரு காராக உள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக அஸ்டன் மார்டின் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவர் வாங்கிய இந்த அஸ்டன் மார்டின் கார் உலகிலேயே மிக லிமிட்டட் எடிஷனாக தயாரிக்கப்படும் ஒரு காராக உள்ளது. இந்த செய்தியில் அந்த கார் குறித்த முழு தகவல்களையும் நாம் காணலாம்.

வெளிநாடுகளில் மிகவும் புகழ் பெற்ற கார் நிறுவனம் அஸ்டன் மார்டின். இந்த காரை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களாகவும், சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ளவர்களாகவும் தான் இருப்பார்கள்.

ஹோலிவுட் படங்களில் குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இந்த நிறுவனத்தின் கார்களை அதிகமாக பார்க்க முடிவும், மக்கள் மத்தியில் மிக பிரச்சித்தி பெற்ற படங்களான ஸ்பெக்டர், க்வாண்டம் ஆப் சோலஸ், ஸ்கை பால், கேஸினோ ராயல்ஸ், டை அனதர் டே ஆகிய படங்களில் அஸ்டன் மார்டின் கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

உலக அளவில் கடும் மவுசு பெருகிய இந்த காரின் விலையும், மிக அதிகம். இதுவரை இந்த நிறுவனத்தின் எந்த காரையும் இந்தியாவில் உள்ள யாரும் வாங்கியதே இல்லை. இந்தியாவில் அஸ்டன் மார்டின் கார் நிரந்தரமாக ஓடியதே இல்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்தியாவில் முதன் முதலாக பெங்களூரை சேர்ந்த ஒருவர் அஸ்டன் மார்ட்டின் காரை வாங்கியுள்ளார். அதுவும் அஸ்டன் மார்டினின் வி 12 வான்டேஜ் ஏஎம்ஆர் என்ற லிமிட்ட் எடிசன் காரை அவர் வாங்கியுள்ளார்.

இந்த வான்டேஜ் ஏஎம்ஆர் காரை மொத்தம் 300 கார்கள் மட்டுமே தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில் 200 கார்கள் வி8 இன்ஜினுடனும் 100 கார்கள் வி12 இன்ஜினுடனும் தயார் செய்யப்படுகிறது. அதில் இவர் வி12 இன்ஜினுடன் தயார் செய்யப்பட்ட அந்த நூற்றில் ஒரு காரை வாங்கியுள்ளார்.

இவர் வாங்கிய கார் நீல நிறத்தில் சிவப்பு நிற கிராபிக் பட்டைகளை கொண்டுள்ளது. இந்த காரை வாங்கியவர் இதற்கு முன்னர் உலகில் உள்ள பல சூப்பர் கார்களை தன் வசம் வைத்துள்ளார். லாம்போர்கினி ஹராக்கேன், போர்ஸை 911 டர்போ எஸ், 911 ஜிடி3, பாக்ஸ்டர் எஸ், கென்னெ டர்போ, ரேஞ்ச் ரோவர் எஸ்விஆர், ஆகிய கார்களை வைத்துள்ளார். தற்போது அவர் புதிதாய் வாங்கி அஸ்டன் மார்டின் கார் குறித்த வீடியோவை கீழே பாருங்கள்.
இந்த அஸ்டன் மார்டின் வான்டேஜ் ஏஎம்ஆர் காரில் 6.0 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 595 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த காரின் இன்ஜின் ஆட்டோமெட்டிக் மேனுவல் பெடல் ஸிப்ட் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கார் 3.6 நொடியில் 0-100 கி.மீ. வேகத்தை பிக்கப் செய்யக்கூடியது. இந்த கார் தான் உலகளவில் ரோட்டில் செல்லக்கூடிய கார்களில் பவர்புல்லாக காராக திகழ்கிறது.

இந்த வான்டேஜ் காரில் ஏஎம்ஆர் ஏரோ கிட் என்ற பகுதி பொருத்தப்பட்டுள்ளது. இதில் காருக்குள் பொருத்தப்பட்டுள்ள கார்பன் பைபர் பொருட்கள், காரின் முகப்பில் உள்ள ஸ்பிட்டர்கள், முகப்பு பக்கவாட்டில் உள்ள டைவ் பிளேன்ஸ், பக்கவாட்டில் உள்ள சைடு சில்ஸ், பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள ரியர் ஸ்பாயிலர்கள், அலுமினியம் வீல்கள், ஏஎம்ஆரின் டைட்டானியம் எக்ஸாட்கள், என இவை அனைத்தும் ஏரோ கிட்டில் அடங்கும்.

இந்த கார் கடந்த 2017ம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த மோட்டார் வாகன கண்காட்சியில் முதன் முறையாக காட்சிபடுத்தப்பட்டது. அஸ்டன் மார்டின் நிறுவனத்தின் பெர்மாமென்ஸ் காராக இந்த கார் தான் முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சொகுசு ரக கார்கள் தான் தயாரிக்கப்பட்டன.

இந்த கார் க்கூப் மற்றும் ரோடுஸ்டர் வெர்ஷன்களில் வி8 மற்றும் வி12 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மொத்தம் 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் லிமிட்ட் எடிசன் காரில் ஒரு கார் இந்தியாவிற்கு வந்துள்ளது என்பது மிகப்பெரிய ஆச்சரிப்படும் விஷயம் தான்.

இந்த மேலே நீங்கள் பார்த்த வீடியோ பெங்களூருவை சேர்ந்த கே.வி.பி என்பவரது கராஜில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காருக்கு சொந்தகாரர் யார் என்பது குறித்த தகவல் இல்லை.

இவர் பெங்களூருவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழ்பவர். இவரது கராஜில் உலகில் உள்ள பல சூப்பர் கார்கள் உள்ளன. தற்போது புதிதாக வந்துள்ள இந்த ஆஸ்டா மார்டின் வான்டேஜ் காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
Source: SupercarsInBangalore
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








