கடலுக்கு அடியில் சீறிச் செல்லப்போகும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்!

Written By:

இந்தியாவின் முதல் புல்லட் ரயில், கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் சிறிது தூரம் பயணிக்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பை- ஆமதாபாத் இடையிலான வழித்தடத்தில் புல்லட் ரயில் குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரம் கடலுக்கு அடியில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது புல்லட் ரயில் பயணத்தை எதிர்நோக்கி காத்திருப்போரிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கிறது.

முதல் புல்லட் ரயில்

முதல் புல்லட் ரயில்

மும்பை- ஆமதாபாத் நகரங்களுக்கு இடையிலான 508 கிமீ தூரம் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

 கடலுக்கு அடியில்...

கடலுக்கு அடியில்...

இந்த வழித்தடத்தில் தாணே க்ரீக் முதல் விரார் பகுதி இடையிலான 21 கிமீ தூரம் கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் புல்லட் ரயில் செல்லும் என்று ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பணிகள்

பணிகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் புல்லட் ரயிலுக்கு கடன் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. வரும் 2018ம் ஆண்டு இறுதியில் பணிகள் துவங்கப்பட உள்ளது. 2023ம் ஆண்டிலிருந்து புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகத்திலும், சராசரியாக மணிக்கு 320 கிமீ வேகத்திலும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதலீடு

முதலீடு

ரூ.97,636 கோடி செலவில் இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான 81 சதவீத நிதியை ஜப்பான் அரசு கடனாக வழங்க உள்ளது.

 கருவிகள்

கருவிகள்

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான சிக்னல் சிஸ்டம், மின்சார கருவிகள், ரயில் பெட்டிகள் முதலியவை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.

 பயண நேரம்

பயண நேரம்

தற்போது இரு நகரங்களுக்கு இடையிலான 508 கிமீ தூரத்தை துரந்தோ ரயில் 7 மணிநேரத்தில் கடக்கிறது. ஆனால், புல்லட் ரயில் வெறும் 2 மணிநேரத்தில் கடந்து விடும்.

சர்ச்சை

சர்ச்சை

இதனிடையே, மும்பை- ஆமதாபாத இடையே நாள் ஒன்றுக்கு 100 முறை புல்லட் ரயிலை இயக்கினால் மட்டுமே, அது லாபகரமானதாக இருக்கும் என்று ஆமதாபாத ஐஐஎம் ஆய்வறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இல்லையென்றால், பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மணிக்கு 603 கிமீ வேகத்தில் பயணித்த உலகின் அதிவேக ரயில்!

மணிக்கு 603 கிமீ வேகத்தில் பயணித்த உலகின் அதிவேக ரயில்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India's First Bullet Train Will Travel Under The Sea Near Thane.
Story first published: Thursday, April 21, 2016, 12:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark