அப்பாடா... ஒருவழியாக இந்தியாவின் புல்லட் ரயில் திட்ட கனவு நனவாகிறது

Written By:

கடும் போட்டிகளுக்கு மத்தியில், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பான் கைப்பற்றுகிறது. இதற்காக, இரு நாடுகளுக்கு இடையில் நாளை மறுதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

நாளை இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாளை மறுதினம் [11ந் தேதி] பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார். அப்போது, இந்திய மக்களின் நீண்ட கால கனவுகளில் ஒன்றான புல்லட் ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாக உள்ளது. ஜப்பான் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தியாவின் கனவு திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் புல்லட் ரயில்...

முதல் புல்லட் ரயில்...

மும்பை- ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே முதல் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நிதி உதவி

நிதி உதவி

இந்த திட்டத்தை ரூ.95,530 கோடி முதலீட்டில் நிறைநேற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில், ரூ.53,440 கோடி முதலீட்டுக்கான நிதியை ஜப்பான் கடனாக வழங்க இருக்கிறது.

ஜப்பான் பங்களிப்பு

ஜப்பான் பங்களிப்பு

புல்லட் ரயில் பாதை கட்டுமானம், ரயில் பெட்டிகள், கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் ஜப்பான் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

தூரம்

தூரம்

இரு நகரங்களுக்கு இடையிலான 505 கிமீ தூரத்திற்கு முதலாவது புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

வேகம்

வேகம்

மணிக்கு 320 கிமீ வேகத்தில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும்.

பயண நேரம்

பயண நேரம்

தற்போது இருந நகரங்களுக்கு இடையில் ரயில் பயணம் 8 மணிநேரமாக இருக்கிறது. ஆனால், புல்லட் ரயில் மூலம் 2 மணிநேரமாக குறையும்.

திட்ட காலம்

திட்ட காலம்

2017ம் ஆண்டில் முதல் புல்லட் ரயில் திட்டம் துவங்கப்பட்டு, 2023ம் ஆண்டில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஜப்பானுக்கு ஜாக்பாட்

ஜப்பானுக்கு ஜாக்பாட்

கடந்த 2007ம் ஆண்டு தைவான் நாட்டு புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பான் கைப்பற்றியது. அதற்கடுத்து, தற்போது இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்தை ஜப்பான் கைப்பற்றி இருக்கிறது. சீனா, பிரான்ஸ் நாடுகளின் போட்டிக்கு மத்தியில் ஜப்பானுக்கு இந்திய புல்லட் ரயில் திட்டம் கிடைத்திருக்கிறது.

10 புல்லட் ரயில்கள்

10 புல்லட் ரயில்கள்

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை தவிர்த்து மேலும் 10 புல்லட் ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.

English summary
If reports by Japanese media are precise, India could soon have bullet trains, ferrying passengers from Ahmedabad to Mumbai at very high speeds. Prime Minister Narendra Modi and his Japanese counterpart, Shinzo Abe will sign the deal soon.
Story first published: Wednesday, December 9, 2015, 18:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark