அண்டை நாடுகள் எல்லார் கூடயும் நமக்கு சண்டை கிடையாது... இதுதான் இந்தியாவின் தாராள மனசு!! இலவசமாக கார்கள்

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) உலகம் முழுக்கவே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், எலக்ட்ரிக் வாகனங்களில் இருந்து முற்றிலுமாக எந்தவொரு காற்று மாசுவும் ஏற்படாதது ஆகும். உலக வெப்பமயமாதலுக்கு காற்று மாசுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். உலக வெப்பமயமாதல் ஆனது நாளுக்கு நாள் பல நாட்டு அரசாங்கங்களுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. ஏனெனில், இந்த விஷயத்தில் பல்வேறு நாடுகள் தீவிரமாக உள்ளன. இதற்காக பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் இருந்து பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. இதன் எதிரொலியாகவே எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன என்பது தனி கதை.

இந்த நிலையில், இந்திய அரசாங்கம் நேபாளம் நாட்டுக்கு 15 எலக்ட்ரிக் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளது. உலக வெப்பமயமாதல் ஆனது தீவு நாடுகளுக்கு தான் பெரிய பிரச்சனை என கூறுகின்றனர். ஆனால், அதேநேரம் நேபாளம் போன்ற பூமியின் மேற்கூரையில் அமைந்துள்ள பனிப்பிரதேச நாட்டிற்கும் உலக வெப்பமயமாதல் பிரச்சனைகளை தரக்கூடியது ஆகும்.

tndia gifts cars to nepal

இதனாலேயே, உலக வெப்பமயமாதல் தொடர்பான தனது புரிந்துணர்வு நடவடிக்கையாக வருகிற மே 16ஆம் தேதியில் இருந்து மே 18 வரையில் மூன்று நாட்களுக்கு 'சாகர்மாதா சம்பட்' (Sagarmatha Sambad) என்கிற சர்வதேச உச்சி மாநாட்டை நடத்த நேபாளம் நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த உச்சி மாநாட்டில் நேபாளம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த காலநிலை நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், ஊடக துறையினர் மற்றும் பங்குதாரர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tndia gifts cars to nepal

இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு தனது உதவியாக, இந்திய அரசாங்கம் 15 எலக்ட்ரிக் வாகனங்களை நேபாளத்துக்கு பரிசாக வழங்கி உள்ளது. நேபாளம் நாட்டிற்கான இந்திய தூதரான நவீன் ஸ்ரீவஸ்தாவா இந்த 15 எலக்ட்ரிக் வாகனங்களை நேபாளம் அரசாங்கத்திடம் வழங்கியுள்ளார். நேபாளம் நாட்டு அரசாங்கம் சார்பில் நேபாளத்தின் வெளியுறவு துறை அமைச்சர் அர்சு ரானா டேவுபா இந்தியாவின் இந்த பரிசை பெற்றுக் கொண்டார்.

இந்திய அரசு வழங்கியுள்ள இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் சாகர்மாதா சம்பட் நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை வழங்கியதுடன், இவ்வாறான நிகழ்ச்சியை நடத்தும் நேபாள அரசாங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ள இந்திய அரசு, நேபாளத்தின் மேம்பாடுகளுக்கு துணை நிற்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள படத்தில், டாடா கர்வ் இவி (Tata Curvv EV) என்கிற மாடர்ன் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கும் இந்த கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் இந்தியா மற்றும் நேபாளம் நாட்டின் கொடி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருப்பதை காணலாம்.

சில்வர், வெள்ளை, கருப்பு என பல்வேறு விதமான நிறங்களில் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார்கள் நேபாளம் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் கார்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டவை ஆகும். டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காராக கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் கர்வ் இவி அறிமுகம் செய்யப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் ஒன்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.22.24 லட்சம் வரையில் உள்ளன. இத்தகைய பல இலட்ச ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் கார்களை தான் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 15 கார்களை நேபாளத்துக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. இருப்பினும், நேபாளம் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 15 எலக்ட்ரிக் கார்களும் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார்கள் மட்டும்தானா? என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 14, 2025, 15:47 [IST]
English summary
India gifts 15 tata curvv ev electric cars to nepal check all details here
மேலும்... #electric car #Tata Curvv EV #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+