இந்தியா ஏழை நாடு என்று இனி சொல்லவே முடியாது!! எதிர்காலத்தின் பெரிய சாம்ராஜ்ஜியம்! ஓ... இவரே சொல்லிட்டாரா...

மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா, இந்தியா அளவிற்கு தற்சமயம் எந்த நாடும் எதிர்கால வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கவில்லை என நாட்டின் வளர்ச்சி குறித்து பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார்கள் உற்பத்தி & விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். இந்தியாவின் மாருதி மற்றும் ஜப்பானின் சுஸுகி நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் இந்தியாவிற்கான தலைவராக இருப்பவர் ஆர்சி பார்கவா. இவர் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

rc bhargavas perspectives about india

அப்போது பேசிய ஆர்சி பார்கவா, இந்தியா அளவிற்கு உலகின் எந்த நாடும் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை கொண்டிருக்கவில்லை என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய ஆர்சி பார்கவா, செயல்படாத சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் பயிற்சிகள் போன்ற பல்வேறு பழைய விஷயங்களை நம் நாடு களையெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் வளர்ச்சி ஆனது கணிக்க முடியாததாக இருக்கும் சூழலில், மேற்கத்திய நாடுகள் வளர்ச்சியில் குறிப்பிட்ட நிலையை அடைந்துள்ளன. அவை இனி வளர்ந்தாலும் சரி அல்லது மந்தநிலைக்கு சென்றாலும் சரி, அங்குள்ள மக்கள் உழைக்கும் பண்பை இழந்துவிட்டனர். மக்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறார்கள். உழைக்காமல் நல்லவை வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் எனவும் ஆர்சி பார்கவா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மறுபக்கம், இந்தியாவில் மக்கள் தங்கள் சொந்த எதிர்காலத்தை மட்டுமல்ல, தங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பெரிதும் மேம்படுத்த விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ள மாருதி சுஸுகியின் தலைவர், இந்த பசி இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல போகிறது, இது மிக சில நாடுகளால் மட்டுமே முடியும் என்றார்.

2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட வேண்டுமென்றால், கடந்த 60 வருடங்களாக இருக்கும் நிறைய விஷயங்களை நாடு களையெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ள ஆர்சி பார்க்கவா, "இது நேரம் எடுக்கும். அந்த பழைய விஷயங்கள் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் முழு அமைப்பையும் மட்டுமல்லாமல், நமது அதிகாரத்துவத்தை செயல்பட பயிற்சியளித்த விதத்திலும் உள்ளது" என்கிறார்.

rc bhargavas perspectives about india

விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவிடம் அனைத்து விஷயங்களும் உள்ளன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த விரைவான பொருளாதார வளர்ச்சி நீண்ட வருடங்களாக நடைபெறவில்லை என்றொரு குற்றச்சாட்டை முன் வைக்கும் ஆர்சி பார்கவா, "ஆனால், உலகம் இப்போது மிகவும் நேர்மறையாக மாறியதற்கு காரணம், கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அமைப்பே மாறிவிட்டது.

இப்போது மக்கள் தங்கள் முழு திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்று கண்டறிந்துள்ளனர்" என்றார். மாருதி சுஸுகி நிறுவனம் குறித்து பேசிய ஆர்சி பார்கவா, மாருதி சுஸுகி எப்போதும் சிக்கன மேலாண்மை பாணியை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி போன்ற மிக பெரிய நிறுவனத்துக்கு தலைவராக இருப்பதால் ஆர்சி பார்கவாவின் இந்த கருத்துகளை நம்மால் முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது. இவர் கூறுவதுபோல், எதிர்காலத்தில் உலகின் மிக பெரும் அரசாங்கமாக இந்தியா விளங்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. உலகின் பெரிய அரசாட்சி இந்தியாவா அல்லது சீனாவா என்று வந்து நிற்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆனால், இதற்கு ஆர்சி பார்கவா கூறுவதை போல், தேவையில்லாத பழைய சட்டங்களையும், செயல்பாடுகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 27, 2024, 12:56 [IST]
English summary
India has all ingredients for rapid economic growth says maruti suzuki india chairman
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+