இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் இந்த ஊருக்குதானாம்! வெளியானது ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த தகவல்!
வந்தே பாரத் (Vande Bharat) எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இந்திய ரயில் பயணிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மினி வெர்ஷனாக வந்தே மெட்ரோ (Vande Metro) ரயிலையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது, இந்தியன் ரயில்வேஸ். இந்த பணியிலேயே அது மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. எனவே, வந்தே மெட்ரோ ரயில் வெகு விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே வந்தே மெட்ரோ ரயில் எங்கு முதன் முதலில் சேவைக்கு வர இருக்கின்றது என்கிற விபரம் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில் குஜராத் மாநிலத்திற்கே ஒதுக்கப்பட்டு இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கும் இடிநவ் தளம், "இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில், மேற்கு ரயில்வே வசம் ஒப்படைக்கப்படி இருப்பதாகவும், அவர்களே அதை பராமரிப்பார்கள் என்றும் அதில் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து, அஹமதாபாத் - புஜ் இடையே இந்த ரயில் இயக்கப்படும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இந்தியாவில் மற்ற ரயில்களில் பயணிப்பதைக் காட்டிலும் பலர் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கவே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்தியன் ரயில்வேஸ், அதிக அளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக, ஸ்லீப்பர் வெர்ஷன் வந்தே பாரத் ரயிலையும் இந்தியன் ரயில்வேஸ் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. சமீபத்திலேயே இந்த ரயிலை பிரதமர் மோடி நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் காட்டிலும் அதிக ஆடம்பர மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அதன் உள்பக்கம் உள்ளது. இந்த நிலையிலேயே தற்போது வந்தே மெட்ரோ ரயிலையும் வெளியீடு செய்வதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் வாரங்களில் இந்த ரயிலை பிரதமர் மோட்டிற்கு நாட்டிற்கு அறிமுகப்படுத்துவார் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே ரயில்வே துறை அதிகாரி ஒருவர் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் குஜராத்திற்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டு இருப்பதைப் போல, வந்தே மெட்ரோ ரயில்கள் லோக்கல் இஎம்யூ ரயில்களுக்கு மாற்றாக பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.
அதேவேளையில், வந்தே பாரத்தின் மினி வெர்ஷனாக இருக்கும் என்பதால் பல அட்வான்ஸ்டு அம்சங்களை அது தாங்கியிருக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, முழுக்க முழுக்க ஏசி கோச்சுகளையே அதுக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. மேலும், முதலில் இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் 12 கோச்சுகளுடனேயே பயன்பாட்டிற்கும் வருமாம்.
பின்னர், தேவைக்கேற்ப 16 பெட்டிகள் வரை அதில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது. மிக அதிக வேகத்தை எட்டவும், உடனடி நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் வகையிலும் பல்வேறு தொழில்நுட்பங்களை இந்த ரயிலில் சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அதிக ரயில் நிலையங்களில் நின்றும், அதேவேளையில் விரைவாக அடுத்த முனையையும் இந்த ரயில் அடையும் என தெரிகின்றது.
இதுதவிர, ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும் விதமாக ஆட்டோமேட்டிக் டோர்கள் இந்த ரயிலில் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகின்றது. இத்துடன், மிகவும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் இருக்கைகளையும் இந்த ரயில் இடம் பெற்றிருக்கும். ஆகையால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிடைப்பதை போல வந்தே மெட்ரோ ரயில்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே குஜராத் மாநிலமே முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை பெற இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








