அமெரிக்காவிற்கு எதிராக பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த இந்தியா! மொத்த உலகத்தையும் அண்ணாந்து பாக்க வெச்சுட்டாங்க
உலகின் பல்வேறு நாடுகள் தற்போது செல்வ செழிப்பில் மிதந்து கொண்டிருப்பதற்கு, அவற்றின் கச்சா எண்ணெய் (Crude Oil) வளம்தான் மிகவும் முக்கியமான காரணம். சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) போன்ற நாடுகளை இதற்கு உதாரணமாக கூற முடியும்.
ஆனால் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் வளம் பெரிதாக கிடையாது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலமாக மட்டும்தான் பூர்த்தி செய்து கொள்கிறது. ரஷ்யா (Russia), ஈராக் (Iraq), சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா (United States) போன்ற நாடுகளிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

அத்துடன் குவைத் (Kuwait), அங்கோலா (Angola), நைஜீரியா (Nigeria), கொலம்பியா (Colombia) மற்றும் மெக்ஸிகோ (Mexico) போன்ற நாடுகளிடம் இருந்தும், கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. இறக்குமதி என்பதால், கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக மிகப்பெரிய தொகையை இந்தியா செலவு செய்ய நேரிடுகிறது.
கடந்த 2024-25ம் நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா 242.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஒரு சில சமயங்களில் ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய கூடாது என அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) போன்ற அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கிறது.

இந்த எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், வரி அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா மற்றும் நேட்டோ போன்றவை அச்சுறுத்தி வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், ஒட்டுமொத்தமாகவே வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.
கச்சா எண்ணெய் தேவைக்காக மற்ற நாடுகளை சார்ந்து இருப்பதை குறைப்பதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரம் வலிமை அடையும். இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் (Petrol) உடன் 20 சதவீத எத்தனால் (Ethanol) கலந்து பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
இந்த வரிசையில் பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை 27 சதவீதமாக அதிகரிக்க இந்தியாவின் மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய எரிபொருள் இ27 (E27) என்ற பெயரில் அழைக்கப்படும். இது குறித்து இடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
27 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்த வேண்டும் என்றால், தற்போது உள்ள வாகனங்களின் இன்ஜின்களில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? என்ற ஆராய்ச்சியை தொடங்குமாறு அராய் அமைப்புக்கு (ARAI - Automotive Research Association Of India), மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவு அதிகரிக்கப்பட்டால், 2 நன்மைகள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்க முடியும் என்பது இதன் முதல் நன்மை ஆகும். மற்றொரு நன்மை, உள்நாட்டில் எத்தனால் உற்பத்தி அதிகரிக்கும் என்பதாகும். இந்தியாவின் இந்த முடிவு, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யை அதிகளவில் சப்ளை செய்து கொண்டுள்ள உலக நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








