ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பேருந்தை கஸ்டமைஸ் செய்து அசத்தி உள்ளது ரெட்டி கஸ்டம்ஸ் நிறுவனம். இந்த பஸ்சின் உட்புறத்தின் சிறப்பம்சங்கள், சொகுசு அம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை படங்களுடன் பார்க்கலாம்.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

வால்வோ,மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கானியா ஆகிய நிறுவனங்களின் உலகத் தரம் வாய்ந்த சொகுசு பஸ்களால், இந்தியாவின் போக்குவரத்து வசதிகள் மிக மேம்பட்ட தரத்தை எட்டி இருக்கின்றன. பல்வேறு வசதிகளுடன் சொகுசு பஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அதேபோன்று, சொகுசு பஸ் மாடல்களின் அடிப்படையில் தனிநபர் விருப்பங்களுக்கு தக்கவாறு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படும் கஸ்டமைஸ் பஸ் மாடல்களுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

அந்த வகையில், இந்தியாவின் மிக மிக சொகுசான பேருந்து ஒன்றை ரெட்டி கஸ்டமைஸ் நிறுவனம் உருவாக்கி அசத்தி இருக்கிறது. பெரும் கோடீஸ்வர வாடிக்கையாளர் ஒருவருக்காக இந்த சொகுசு பஸ்சை ரெட்டி கஸ்டம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

பாரத் பென்ஸ் பஸ்சின் அடிப்படையில் இந்த புதிய சொகுசு வாகனம் ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் க்ரீம் வண்ணத்திலான இன்டீரியர் பஸ்சின் உட்புறத்தை ஒரு ஆடம்பர ஓட்டலின் அறையை நினைவூட்டும் வகையில் இருக்கிறது.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

இந்த பஸ்சின் ஓட்டுனர் பகுதி தனியாக பிரித்து தடுக்கப்பட்டுள்ளது. உட்புறமானது இரண்டு பிரிவுகளாக தடுக்கப்பட்டுள்ளது. முன்புற அறையில் நான்கு சொகுசு இருக்கைகள் ஒருபுறமும், விவிஐபி அமர்வதற்கான இருக்கை மறுபுறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

விவிஐபி அமர்வதற்கான இருக்கையின் முன்னாள் டேபிள் ஒன்றும், போன் வசதியும் உள்ளன. இந்த அறையில் மிகப்பெரிய டிவி திரை மற்றும் ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

அதைத்தொடர்ந்து, பஸ்சின் பின்புறத்தில் கதவுடன் கூடிய இரண்டாவது பிரிவாக தடுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் பக்கத்திற்கு தலா 3 இருக்கைகள் என 6 இருக்கைகள் உள்ளன. இருக்கைகள் அனைத்தும் முழுமையான சாய்மான வசதியை அளிப்பதால், ஓய்வான பயணத்தை பெற முடியும்.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

இந்த அறையில் இரண்டு டிவி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் முன்னோக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்சில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் செயல்படும் இன்டர்நெட் இணைப்பு வசதியும் உள்ளது.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

லேப்டாப், மொபைல்போன்களுக்கு போதுமான அளவு சார்ஜர் பாயிண்டுகள் உள்ளன. முழுவதுமான குளிர்சாதன வசதி, திரை மறைப்புகள், எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வீடியோ கான்பிரன்ஸ் வசதி என அசத்துகிறது.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

குளிர்சாதனப் பெட்டி, உணவு தயாரிக்கும் வசதிகள் உள்ளன. தரைப்பகுதி முழுவதும் மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மிக பிரிமீயமாக இருக்கிறது. உட்புறத்தில் கூரையில் அலங்கார விளக்குகள் கண்களை கவர்கின்றன. பஸ்சின் பின்புறத்தில் ரெஸ்ட்ரூம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்டியின் கைவண்ணத்தில் சொகுசு விமானத்தை தோற்கடிக்கும் அம்சங்களுடன் பாரத் பென்ஸ் பஸ்!!

இந்த பஸ்சின் உரிமையாளர் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சை உருவாக்கியதற்கான செலவீனம் குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. இதேபோன்ற பஸ்சை உருவாக்க விரும்புவோர் ரெட்டி கஸ்டம்ஸ் நிறுவனத்தை நேரடியாக அணுகலாம். தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விபரங்களையும் தருவதற்கு ரெட்டி கஸ்டம்ஸ் தயாராக உள்ளது.

Image Courtesy: Reddy Customs/Facebook

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2019, 14:01 [IST]
English summary
India’s most luxurious bus customised by very skilful team of Reddy Customs.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+