ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 2.5 தானா இந்த நாட்டில்? இந்தியாவில் மட்டும் ஏன் ஜாஸ்தியா விக்குறாங்க தெரியுமா?
இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ101 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியர்கள் பெட்ரோலுக்காக மிக அதிகமான தொகையை செலவு செய்வதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஏன் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சர்வதேச மார்கெட்டில் பெட்ரோலின் மூலப்பொருளான கச்சா எண்ணெயின் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நீண்ட காலமாக இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ101 என்ற விலையிலேயேவிற்பனையாகி வருகிறது. இந்தியாவின் அருகில் உள்ள நாடுகளை விட ஏன் பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளை விட இந்தியாவில் லிட்டருக்கு ரூ21 அதிகம் கொடுத்து தான் பெட்ரோலை வாங்குகின்றனர்.

சமீபத்தில் டைம்ஸ்ஆஃப் இந்தியா நிறுவனம், globalpetrolprices.com தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை இன்ஃபோகிராஃபிக்ஸாக தங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருந்தது. அதில் இந்திய விலை மதிப்பில் மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை எவ்வளவு என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவில் லிட்டருக்கு ரூ101க்கு விற்பனையாகும் அதே பெட்ரோல் அமெரிக்காவில் ரூ79.1 என்ற விலையிலும், பாகிஸ்தானில் ரூ80.4 என்ற விலையிலும், சீனாவில் ரூ94.5 என்ற விலையிலும், பங்களாதேஷஸில் ரூ85 என்ற விலையிலும் பூட்டானில் ரூ58.8 என்ற விலையிலும், லிபியா, ஈரான் போன்ற நாடுகளில் ரூ2.5 என்ற விலையிலும் விற்பனையாகிறது
இது பலருக்கு பல விதமான கேள்விகளை உருவாக்கியுள்ளது. ஈரான், லிபியா போன்ற நாடுகள் மிக குறைவான விலையில் பெட்ரோலை விற்பனை செய்கின்றன. அதேநேரம் பூட்டான் அமெரிக்காவில் இருந்து தான் ெபட்ரோலை இறக்குமதி செய்கிறது. ஆனால் அமெரிக்காவில் ரூ79க்கு விற்பனையாகும் பெட்ரால் பூட்டானில் மட்டும் எப்படி ரூ58க்கு விற்பனவையாகிறது என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம் அதிக வரி விதிப்பு தான். பெட்ரோல் மீது மத்திய கலால் வரி, மாநில அரசுகள் விதிக்கும் வாட் மற்றம் விற்பனை வரி, டீலர் கமிஷன் எல்லாம் சேர்த்து அதிக விலையில் விற்பனையாகிறது. அதேநேரம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் விரியை ஏற்றி விலையை குறைக்காமல் இருக்கின்றனர்.
தற்போது பெட்ரோலின் விலை அதை தயாரிக்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பே முடிவு செய்யும் வகையில் உள்ளது. அரசின் கட்டுப்பாடு இதில் குறைவு தான். அதே நேரம் அரசு இதை கண்காணித்து தேவையான நேரத்தில் வரியை ஏற்றியும் இறக்கியும் பெட்ரோல் விலையை மேலும் அதிகரிக்க செய்யாமல் தடுக்கிறது. அதே நேரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போதும் இப்படியான விலையேற்றம் வவருகிறது.

ஈரான், லிபியா போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது என்றால் அந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் எடுக்கப்படுவது தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி வரி விதிப்புகள் மற்றும் பிற செலவுகள் இல்லை என்பதால் அந்த நாடுகளில் மிக குறைவான விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் மிக அதிகமான தேவையாக இருக்கிறது. இதனால் அதன் மீது அதிகமான வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் எல்லாம் ஜிஎஸ்டிக்குள் வந்தால் மிகப்பெரிய அளவில் விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் பெட்ரோல் தேவை குறைந்தாலும் விலை குறையும். மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகரநகர பெட்ரோல், டீசல் விலை குறையும்.


Click it and Unblock the Notifications









