2026ல் புல்லட் ரயில் நிச்சயம்... வந்தே பாரத் விபத்து எல்லாம் ஒரு மேட்டரே இல்ல... அமைச்சர் சொன்ன அதிரடி விஷயம்
இந்தியாவில் கடந்த 2026ம் ஆண்டு முதல் புல்லட் ரயில் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். இது குறித்த விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் பல நேரம் நாம் ஜப்பானைப் போல இந்தியா முன்னேற வேண்டும் எனப் பேசுவோம். அதற்கு முக்கியமான ஜப்பான் இந்தியாவை விடச் சிறிய நாடாக இருந்தாலும் அந்நாடு தொழிற்நுட்பத்தில் நம்மை விடப் பல மடங்கு வளர்ந்துவிட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானில் புல்லட் ரயில்கள் வந்துவிட்டன. இந்தியாவில் புல்லட் ரயில்கள் என்பது பெரும் கனவாகவே இன்றும் இருக்கிறது. இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டம் ஆமதாபாத்- மும்பை இடையே செயல்படுத்த வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் ஆமதாபாத் சென்றிருந்தார். அங்கு அவர் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் இந்தியாவில் 199 ரயில் நிலையங்களை உலகத்தரத்திற்கு மாற்றும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே பல ரயில் நிலையங்கள் இப்படியாக மாற்றப்பட்டு விட்டன. ஆமதாபாத் ரயில் நிலையமும் விரைவில் உலகத்தர ரயில் நிலையமாக மாறவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவிலேயே முதன் முறையாக ஆமதாபாத் முதல் மும்பை வரையில் புல்லட் ரயில் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 320 கி.மீ தூரம் ஹை ஸ்பீடு ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் மொத்தம் 508 கி.மீ தூரத்திற்குச் செயல்படவுள்ளது. இந்த ரயில் மும்பை- ஆமதாபாத் செல்லும் போது 12 இடங்களில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழித் தடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கிறது. இந்த ரயில் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்கிறது. இந்த பயண நேரம் புல்லட் ரயில் வருவதால் பாதியாகக் குறையும் அதாவது 3 மணி நேரத்திற்குள் மும்பை டூ ஆமதாபாத் பயணம் சாத்தியமாகும். எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கா 81 சதவீத பணிகளுக்கான செலவுகள் மட்டுமே தற்போது திட்டமிட்டுள்ளது. இதுவரை ரூ1.1 லட்சம் கோடி செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஜப்பான் அரசு உதவி செய்கிறது. இந்த பணத்தை ஜப்பான் அரசுக்குச் சொந்தமான இன்டர்நேசனல் கோஆப்ரேஷன் ஏஜென்ஸி வழங்குகிறது. இந்த திட்டம் வரும் 2026ம் ஆண்டிற்கும் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் கூறியுள்ளார். அதாவது இன்னும் 4 ஆண்டுகளில் இந்தியா ஜப்பானைப் போல மாறும் என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியின் போது வந்தேபாரத் ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது இது குறித்து அவர் கூறும் போது : "இந்தியாவில் தற்போது ரயில் தண்டவாளங்கள் பெரும்பாலும் கிரவுண்டிலேயே இருக்கிறது. இதனால் கால்நடைகள் விபத்தில் சிக்குவது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்துப் பல முறை எச்சரிக்கை விடுத்தும் கால் நடை வளர்ப்பவர்கள் இதில் உஷாராக இருப்பதில்லை. இருந்தாலும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப் பல வழிகளை யோசித்து வருகிறோம். " எனக் கூறினார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வியாழக்கிழமை மும்பை - ஆமதாபாத் இடையே செல்லும் போது மணி நகர் பாத்வா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் போது எருமை மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதில் எருமை மாடுகள் உயரிழிந்தன. ரயிலுக்குப் பெரிய பாதிப்பு ஏதுவும் இல்லை. முன்புறம் இருந்த FRP மெட்டிரியல் உடைந்து சேதமடைந்தது. இந்த மெட்டிரியலும் தற்போது மாற்றப்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications