போட்றா வெடிய! இவிகளுக்கு இ-வவுச்சர் மூலம் மானியம்! பிஎம் இ-டிரைவ் திட்டத்தால் இவ்வளவு பணம் மிச்சமாகுமா?
கனரகத் தொழில்துறை அமைச்சகம் பிஎம் இ-டிரைவ் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 10,900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முயற்சி இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்க விற்பனையை ஊக்குவிக்கிறது. இதனால் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எதிர்காலத்தில் மக்கள் மீது நம்பிக்கை வருவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் கீழ், அரசு 24.79 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், 3.16 லட்சம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 எலெக்ட்ரிக் பேருந்துகளை சலுகை விலையில் விற்க முடியும். கனரகத் தொழில்துறை அமைச்சகம் எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகைகளை எளிதாக்க இ-வவுச்சர் மூலமாக வழங்குகிறது.

ஒரு EVஐ வாங்கும் போது, ஆதார் சான்றளிக்கப்பட்ட இ-வவுச்சர் ஒரு பிரத்யேக போர்ட்டல் மூலம் உருவாக்கப்பட்டு வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.இந்த நன்மைகளைப் பெற, வாடிக்கையாளர்கள் இ-வவுச்சரில் கையெழுத்திட்டு டீலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். டீலர்கள் பின்னர் பிரதமர் இ-டிரைவ் போர்ட்டலில் கையெழுத்திட்டு பதிவேற்றுவார்கள். இரண்டு தரப்பினருக்கும் SMS மூலம் கையெழுத்திட்ட வவுச்சர் கிடைக்கும். இந்த கையெழுத்திட்ட வவுச்சர் கிளைம் கோர வாகன உற்பத்தியாளர்களுக்கு (OEM) மிக முக்கியமானது.
இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் ஆம்புலன்ஸ்களை ஊக்குவிப்பதற்காக குறிப்பாக ரூ. 500 கோடி ஒதுக்குகிறது. கூடுதலாக, 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 9 நகரங்களில் மாநில பொது போக்குவரத்து நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பஸ்களை வாங்குவதற்கு ரூ. 4391 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், சூரத், பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் இந்த பஸ்கள் இயங்கும்.

இந்த முயற்சியின் கீழ் எலெக்ட்ரிக் டிரக் விற்பனையை ஊக்குவிப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் அதே வேளையில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பையும், எமர்ஜென்ஸி சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டவை. இதனால் இந்த செக்மெண்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகரிக்கும்.
பிரதமர் இ-டிரைவ் திட்டம் இந்தியாவில் நிலையான போக்குவரத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கி பல்வேறு வகையான எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகப்படுத்தவதன் மூலம், அரசு கிளீன் டிரைவ் தீர்வுகளுக்கு மாறுவதை துரிதப்படுத்த முயற்சி செய்கிறது. இது நிச்சயம் இந்தியாவில் மாசு அளவை குறைக்க நிச்சயம் உதவும்.

இந்த விரிவான அணுகுமுறை தனிப்பட்ட வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, பெரிய நகரங்களில் பொது போக்குவரத்து அமைப்புகளையும் வலுப்படுத்துகிறது. எலெக்ட்ரிக் ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசர சேவைகள் உள்ளிட்ட இந்த மாற்றத்தில் முக்கியமான துறைகள் பின்தங்கி இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வந்தால் நிச்சயம் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக, பிரதமர் இ-டிரைவ் திட்ட முயற்சி இந்தியாவின் கார்பன் தடயத்தைக் குறைத்து நாடு முழுவதும் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து தேர்வுகளை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமான அளவு குறையும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட நிபந்தனையில் தயாரித்தால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு சலுகை வழங்கப்படும் இ-வவுச்சரில் எவ்வளவு பணம் வரவு வைக்கப்படும் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த விபரம் வெளியாகும் போது தற்போது விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை எவ்வளவு குறையும் என்ற விபரம் நமக்கு தெளிவாக தெரியவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஃபேம் மானியம் வழங்கப்பட்டது. இந்த ஃபேம் மானியத்தின் 2ம் கட்டம் முடிவடைந்த நிலையில் தற்காலிகமாக ஒரு மானியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஃபேம் மானியம் 3ம் கட்டம் அறிவிப்பிற்கு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த பிஎம் இ-டிரைவ் அறிவிப்பு பலரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications









