இனி இந்தியா கிட்ட கடல் வழியா வால் ஆட்ட நினைச்சா சீனாவும் ஜல சமாதி தான்! செம நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க போறாங்க
ஜெர்மன் நாட்டை சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிலேயே நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தியக் கடற்படைக்குத் தேவையான நீர் மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவைச் சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனம் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் இவர்கள் இந்தியாவிலேயே கப்பல்களைக் கட்டுமானம் செய்து கடலில் இறக்கி வருகின்றனர். இது போக எல்&டி நிறுவனமும் இந்தியாவில் கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் மசாகான் நிறுவனத்துடன் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தைசன் குரூப் என்ற நிறுவனம் தற்போது கப்பல் கட்டுமானத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே அனைத்து விதமான இந்தியத் தேவைகளுக்குக் காணப் பொருட்களையும் தயாரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக இருக்கிறது. இதன்படி இந்திய ராணுவத்திற்குத் தேவையான பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கப் பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதன் ஒரு பாகமாகத் தான் இந்தியாவில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்தியக் கடற்படையில் போதுமான நீர்மூழ்கிக் கப்பல்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. எதிரி நாடான சீனாவை விட இந்தியாவில் குறைவான நீர்மூழ்கிக் கப்பல்கள் தான் பயன்பாட்டில் உள்ளது. சீனாவில் 76 நீர் மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் வெறும் 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் தான் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவத்திற்குத் தேவையான கப்பல்களை இந்தியாவிலேயே உருவாக்க இந்தியாவில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுமானம் செய்யும் ஆலைகளை நிறுவியுள்ளது. அதன்படி மசாகான் டாக் சிப் பில்டர்ஸ் என்ற நிறுவனம் மும்பையில் கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. நீர் மூழ்கி கப்பல்களை கட்டமைத்து வருகிறது.
தற்போது இந்த நிறுவனத்துடன் தான் தைசன் குரூப் மேரைன் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. தைசன் குரூப் மேரைன் சிஸ்டம்ஸ் நிறுவனம் உலக அளவில் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தொழில்நுட்பம் வடிவமைப்பு போன்ற விஷயங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள நீர் மூழ்கிக் கப்பல்களுக்காகப் பயன்படுத்தப்படும் 70% உதிரிப்பாகங்களை இந்த தைசன் குரூப் நிறுவனம்தான் உருவாக்கி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க ப்ராஜெக்ட் 75 என்ற திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது அந்தத் திட்டத்தின் கீழ் தான் இந்த நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் பணியும் நடைபெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் 24 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் எல்லாம் ஏஐபி என்ற ஏர் இன்டிபென்டன்ட் புரோபெல்சன் தொழில்நுட்பத்தில் இயங்கும் கப்பல்களாக வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இயங்க மொத்தமே மூன்று தொழில்நுட்பம் தான் இருக்கிறது. முதல் தொழில்நுட்பம் டீசல் எலெக்ட்ரிக் இன்ஜின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், இரண்டாவது அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், கடைசியில் ஏர் இண்டிபெண்டன தொழில்நுட்பத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்.
இதில் டீசல் இன்ஜின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது போதுமான எரிபொருளை எடுத்துச் செல்ல முடியாது இதனால் குறைவான தூரத்திற்கு மட்டுமே இது பயன்படுத்த முடியும். இரண்டாவது அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் இதை நீண்ட தூரம் எடுத்துச் செல்லலாம் ஆனால் தொடர்ந்து 48 மணி நேரத்துக்கு மேல் நீரில் மூழ்கிய நிலையில் இந்த கப்பலால் இருக்க முடியாது.
அணுசக்தி மூலம் கிடைக்கும் வெப்பம் மூலம் இந்த கப்பல் இயங்குவதால் அவ்வப்போது இந்த கப்பல் கடலின் மேல் மட்டத்திற்கோ அல்லது கரைக்கோ கட்டாயம் வர வேண்டும் அப்பொழுது தான் தொடர்ந்து இயங்க முடியும். ஆனால் இந்த ஏஐபி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் என்பது தொடர்ந்து பத்து முதல் 14 நாட்கள் கூட கடலுக்கு அடியிலேயே இருக்கும் திறன் கொண்டது.
இது கிட்டத்தட்ட டீசல் எலெக்ட்ரிக் இன்ஜின் தொழில்நுட்பம் தான் என்றாலும் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தாமல் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தைக் கொண்டது. இந்த ஹைட்ரஜனுக்கு ஆக்ஸிஜன் தேவை ஆனால் கடலுக்கு அடியில் இருக்கும் போது ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் இவர்கள் உள்ளே செல்லும்போது ஆக்சிஜனை எடுத்துச் செல்ல தனியாக சிலிண்டர் இருக்கும் அதில் ஆக்சிஜனை நிரப்பிச் செல்வார்கள் அந்த ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் வைத்து இந்த கப்பலை இயக்க முடியும்.
இது எளிமையான நடைமுறை என்பதால் அதிக வெப்பம் வெளியேறாது இதனால் கடலுக்கு மேலே வரவேண்டிய அவசியமும் பெரிய அளவில் இருக்காது உணவு தேவைக்காகவும் மற்ற பொருட்களை மாற்றுவதற்காகவும் மட்டுமே கரைக்கு வந்தால் போதுமானது. இதனால் இந்தியக் கப்பல் படையில் இந்த ரக நீர் மூழ்கிக் கப்பலைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அடுத்த ஆண்டு முதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரத்துவங்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் கடற்படை தொடர்ந்து பலமடைந்து கொண்டே வருகிறது என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது. ஜெர்மன் நிறுவனத்துடன் ஆன இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய ராணுவ பலத்தை ஊர் பங்கு மேலே அழைத்துச் சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications









