யாருமே எதிர்பாராத உதவியை இலங்கைக்கு செய்த இந்தியா! இனி தினமும் இலங்கை மக்கள் இந்தியாவை நினைச்சு பாப்பாங்க!
இந்திய அரசு இலங்கையில் பொது போக்குவரத்திற்காக 75 பஸ்களை வழங்கி உதவி செய்துள்ளது. இலங்கையில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்ட நிலையில் இந்தியா இலங்கைக்கு இந்த உதவியைச் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் அண்டை நாடான தற்போது பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்த விஷயம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்நிலையில் இலங்கை தற்போது அதன் நட்பு நாடுகளின் உதவியைப் பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கிறது.

125 ஸ்கார்பியோ!
இந்நிலையில் இந்தியா இலங்கைக்கு உதவும் வகையில் அதன் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.கடந்த டிசம்பர் மாதம் இந்தியா இலங்கை போலீசாருக்கு 125 ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களை வழங்கியது. இந்த கார்களை லைன் ஆஃப் கிரெடிட் அடிப்படையில் வழங்கியுள்ளது. ரோந்து பணிக்காக வாகனங்கள் இல்லாமல் இலங்கை போலீசார் திணறிய நிலையில் இந்தியா இந்த உதவியைச் செய்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது இந்தியா இலங்கையின் பொது போக்குவரத்திற்காக 75 பயணிகள் பஸ்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது இலங்கையில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியா 500 பொது போக்குவரத்திற்காகப் பயணிகள் பஸ்களை இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்தியா உதவி
இலங்கை கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 51 பில்லியன் டாலர் அளவிலான பணம் வெளிநாட்டுக் கடனில் சிக்கியுள்ளதாக அறிவித்தது. இது அந்நாடு சுதந்திரம் அடைந்தது பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார பின்னடைவாகும். இதனால் அந்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. அடிப்படை பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. இதையடுத்து இந்தியா அந்நாட்டிற்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவிகளைச் செய்தது.
எரிபொருள்
இந்நிலையில் இந்த ஜனவரி மாதம் 900 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான உதவியை இந்தியா வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை படிப்படியாகப் பொருளாதார பின்னடைவிலிருந்து மீண்டு வரத் துவங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்தாண்டு இந்நாட்டிற்கு இந்தியா 5000 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு எரிபொருள் வாங்குவதற்கான கடன் உச்ச வரம்பை நிர்ணயம் செய்திருந்தது. தற்போது அதை இந்தியா 700 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது.
இலங்கையின் பொது போக்குவரத்திற்காக இந்தியா வழங்கியுள்ளதைப் பலர் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் ஓடும் சில பொது போக்குவரத்து பஸ்களை சீரமைக்காமல் பாடாதி பஸ்களை இயக்கி வருவது குறித்தும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications