இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்கள் தான் ஓடப்போகுது! தனியார் டிராவல்ஸ் நடத்துபவர்களுக்கு ஜாக்பாட்!
எலெக்ட்ரிக் பஸ்களை அதிகரிக்க, உலகளாவிய பொதுவான பேட்டரி மாற்றும் தொழிற்நுட்பத்தை கொண்டு வர இந்தியா முயற்சிக்கிறது. இந்த முயற்சியானது பேட்டரி மாற்றங்களில் இயங்கக்கூடிய தன்மை மற்றும் வசதியை பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது, இதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் இது உதவுகிறது. இந்த நடவடிக்கை இ-பஸ் துறையில் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 2024 தொடக்கத்தில், இந்தியாவில் 8,583 எலெக்டரிக் பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதுள்ள 8,00,000 டீசல் பஸ்களை 2030 ஆம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் பஸ்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கு இந்திய சாலைகளில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும்.

PM இ-பஸ் சேவா, FAME மற்றும் தேசிய எலெக்ட்ரிக் பஸ் திட்டம் போன்ற தேசிய திட்டங்கள் இருந்தபோதிலும், தனியார் துறை, எலெக்ட்ரிக் பஸ்களை ஏற்றுக்கொள்வது குறைவாகவே உள்ளது. மாநில போக்குவரத்து நிறுவனங்கள் (STUs) இந்த முயற்சிகளால் பயனடைந்துள்ளன, GCC கீழ் மத்திய அரசின் மானியங்களுடன் எலெக்ட்ரிக் பஸ்களை அதிகரித்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் பேருந்து வழங்கல், இயக்கம், கட்டணம் வசூலிக்கும் உள்கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் செலவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
நிதி ஆயோக்கின் வரைவு பேட்டரி மாற்றும் கொள்கையை முதன்மையாக எலெக்ட்ரிக் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் கொண்டு வர முனைப்பை காட்டுகிறது.. இருப்பினும், உலகளாவிய பேட்டரி தரநிலைகளை இ-பேருந்துகளுக்கு விரிவுபடுத்துவது, இந்த சந்தைப் பிரிவில் இயங்கும் திறனை மேம்படுத்துவதையும், பேட்டரியை மாற்றுவதை ஊக்குவிப்பதையும் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வைக்கும் வழிகளாக உள்ளன.

இந்தியாவில், அனைத்து எலெக்டரிக் பஸ்களும் பிளக்-இன் முறையில் சார்ஜ் ஏற்றப்படுகின்றன. DC ஃபாஸ்ட் சார்ஜிங் முழு சார்ஜிங்கிற்கு 20-40 நிமிடங்கள் ஆகும், மெதுவாக சார்ஜ் செய்ய 6-8 மணிநேரம் ஆகும். 2030ம் ஆண்டளவில் எலெக்டரிக் பஸ்களாக மாறுவதை ஊக்குவிக்க, 1.5 டிரில்லியன் ($18 பில்லியன்) முதலீடு தேவைப்படும். இதில் இரு நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் பெரிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்க செலவு செய்யவேண்டும்.
கிளீனான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சில் (ICCT), நிதி ஆயோக் உடன் இணைந்து, எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாறுதலை ஆராய்ந்து, மொத்த உரிமைச் செலவை (TCO) பாதிக்கும் காரணங்களை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வானது தனியார் பேருந்து துறையில் எலெக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு வழிகளை உருவாக்கும் கட்டமைப்பை வழங்குகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 2023 யூனியன் பட்ஜெட்டில் இயங்கக்கூடிய ஸ்டாண்டர்களுடன் தேசிய பேட்டரி மாற்றும் யுத்தியை முன்மொழிந்தார். இந்த முன்மொழிவு இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிக்க நிலையான பேட்டரி தேவைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எலெக்ட்ரிக் பஸ்களுக்கான பொதுவான பேட்டரி மாற்று நிலையங்கள், மாற்றக்கூடிய மின்-பஸ் பேட்டரிகளுக்கான ஸ்டாண்டர்களை இந்தியா உருவாக்கி வருவதால், இதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அணுகுமுறை பயனர்களிடையே ரேஞ்ச் மீதான கவலையை நிவர்த்தி செய்யும், அதே நேரம் இயங்கும் தன்மை மற்றும் வசதியை உறுதிப்படுத்தவும் உதவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளாவிய பேட்டரி தரநிலைகளை நிறுவி, தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம் இ-பஸ் மார்கெட்டில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசின் முயற்சிகள் உதவுகின்றன. இந்த நடவடிக்கைகள் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொது போக்குவரத்து நிலைமையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









