சீனாவையே மிஞ்சும் வகையில் கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை... இந்திய அரசு அதிரடி..

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சீனாவில் பத்து நாட்களில் தனி மருத்துவமனைக் கட்டியதைப் போன்று இந்தியாவிலும் விநோதமான முறையில் தற்காலிக மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

தற்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வைரஸின் தீவிரத்தைப் பற்றி முழுமையாக உணராத சீனா, பின்னாளில் அதன் கொடிய தன்மையைப் பற்றி அறிந்ததும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, நகரத்தின் ஒதுக்கு புறத்தில் கொரோனா சிகிச்சைக்கென தனி மருத்துவமனையை அது கட்டியெழுப்பியது.

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

அந்த மருத்துவமனையை வெறும் பத்தே நாட்களில் அந்நாட்டு அரசு கட்டி முடித்தது. இந்த மருத்துவமனையில், ஒரே நேரத்தில் 1600க்கும் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது இதே மாதிரியான ஓர் மருத்துவமனையை உருவாக்கும் முயற்ச்சியில் இந்திய அரசு இறங்கியிருக்கின்றது.

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

ஆனால், சீனாவைப் போன்று அல்லாமல் இந்திய அரசு ரயில் பெட்டிகளை தனி வார்டு சிகிச்சை அறையாக பயன்படுத்த திட்டமிட்டிருக்கின்றது. அதன்படி, உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

அந்த புகைப்படத்தில் நோயாளிக்கு என தனி படுக்கை மற்றும் கழிவறை என தனித் தனியாக நிறுவப்பட்டிருக்கின்றன. இதேபோன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காகவும் தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

இவையனைத்தும் ரயில் பெட்டிகளில் ஏற்கனவே இருந்த தனியறைகளிலேயே ரயில்வே நிர்வாகம் தயார் செய்திருக்கின்றது. இதற்காக, குளிர்பான அறை அல்லாத ரயில் பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

அந்த அறைகளில் ஒரு பக்கத்தின் மேல் மற்றும் கீழ் இருக்கைகள் மட்டுமே அப்படியே விடப்பட்டிருக்கின்றன. மற்ற நான்கு இருக்கைகளும் நீக்கப்பட்டு மருத்துவம் அளிப்பதற்கு ஏதுவான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

MOST READ: 1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட தொழிலாளிகள்! போலீசுக்கே இது செம்ம ஷாக்

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

இதுதவிர இந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்கின்ற வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, தனிமைப் படுத்துதலை உறுதிச் செய்கின்ற வகையில் திரை உள்ளிட்டவை நிறுவப்பட்டிருக்கின்றன.

தற்போது, நாடு முழுவதும் இயக்கமற்ற நிலையில் இருக்கின்ற காரணத்தால் அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

MOST READ: விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு! முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

ஆகையால், அவற்றை இந்த இக்கட்டான சூழலில் பயன்படுத்திக் கொள்ளும்விதமாக இந்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கின்றது. இப்போது இந்த ரயில் பெட்டி மருத்துவமனை புது டெல்லியில் உள்ள ரயில் டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இது விரைவில் கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க பயன்பாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

MOST READ: கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடும் நிலையில் இவர் செய்த காரியத்தை பாருங்க... ஷாக் வீடியோ...

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

இதேபோன்று, சீனாவில் அமைக்கப்பட்ட தனி மருத்துவமனைப் போன்று இந்தியாவிலும் அமைப்பதற்காக சீனாவின் ரயில்வோ கட்டுமானம் முன் வந்திருக்கின்றது. இதுகுறித்த தகவல் அந்நாட்டு அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸில் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆனால், இதனை இந்திய அரசு தரப்பில் இருந்து கோரப்பட்டால் மட்டுமே அந்நிறுவனம் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருக்கின்றது.

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

சீனாவின் இந்த ரயில்வே கட்டுமான கழகம் உலக அளவில் புகழ்வாய்ந்த, மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஆகும். இது வருடம் ஒன்றிற்கு ரூ. 6 லட்சம் கோடியை வருமானமாக ஈட்டி வருகின்றது. மேலும், இந்நிறுவனம், உலக நாடுகள் பலவற்றில் கட்டுமான பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு இந்நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி உலக வங்கி 9 மாதங்களுக்கு தடை விதித்தது.

உலகில் எங்குமே பார்க்க முடியாத வகையில் புதிய மருத்துவமனை.. சீனா போல் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிலும் அதிரடி..

இந்த நிறுவனம்தான் தற்போது கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு தனி மருத்துவமனைகளை கட்டிதருவதற்கு முன் வந்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு தகவலும் இந்தியார தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. அதேசமயம், சீனாவில் வெண்டிலேட்டர் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை வாங்க இந்தியா முடிவு செய்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India Railways Converted Train Coaches Into Corona Virus Isolation Ward. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X