புல்லட் ரயில் சேவை 2026ல் தொடங்கிரும்னு சொன்னது பொய்யா!.. நாள் கணக்கில் அல்ல வருஷ கணக்குல தள்ளி போட்டுட்டாங்க!

ஒட்டுமொத்த இந்தியாவும் புல்லட் ரயில் சேவையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. இந்தமாதிரியான சூழலில், புல்லட் ரயில் சேவை குறிப்பிட்ட நேரத்தில் பயன்பாட்டிற்கு வராது என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை - அஹமதாபாத் ஆகிய வழித்தடத்திலேயே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. வருகின்ற 2026 ஆம் ஆண்டில் இங்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டது. முதல் கட்டமாக மும்பை - அஹமதாபாத் இடையிலான புல்லட் சேவை ரூட்டில் சூரத் - பிலிமோரா இதற்கிடையிலேயே அந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தமாதிரியான சூழலிலேயே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் 2026 ஆம் ஆண்டில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படாது என்று தெரிவிக்கின்றன. தொடர்ந்து, அது பயன்பாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டு காலம் எடுக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது புல்லட் ரயில் சேவையை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

India s bullet train plans delayed

புல்லட் ரயில் சேவை கால தாமதமாகினாலும் சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக ரயில்வேத்துறை அமைச்சகம் வந்தே பாரத் ரயில் சேவையை அட்வான்ஸ்டானதாக மாற்றும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக வந்தே பாரத் ரயில்களுக்காக அட்வான்ஸ்டு சிக்னல் தொழில்நுட்பங்களை அமைச்சகம் வாங்க இருக்கின்றது.

இந்த புதிய அட்வான்ஸ்டு சிக்னல்கள் மூலம் வந்தே பாரத் ரயில்களை மணிக்கு 280 கிமீ வேகத்தில் இயக்க முடியும். ஆகையால், புல்லட் ரயில் சேவைக்கு இணையானதாக வந்தே பாரத் ரயில் சேவை மாற இருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. ஜப்பானில் இருந்தே இந்தியாவிற்கான புல்லட் ரயில்கள் வாங்கப்பட இருக்கின்றன.

India s bullet train mumbai-ahamadabad

இந்த ரயில்களின் சேவையை 2030 ஆம் ஆண்டிலேயே தொடங்கும் என்று இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையான இயக்கம் 2033 ஆம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என கூறப்படுகின்றது. அதாவது, மும்பை - அஹமதாபாத் இடையிலான முழு நீள புல்லட் ரயில் சேவை 2033 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட இருக்கின்றது.

இந்த நிலையிலேயே நேஷனல் ஹை ஸ்பீடு ரயில் கார்பரேஷன் (National High Speed Rail Corporation), ஐரோப்பிய ரயில் கன்ட்ரோல் சிஸ்டம் லெவல் 2 (European Train Control System Level-2)-க்கான டெண்டரை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த சிக்னலிங் கருவியே வந்தே பாரத் ரயிலை மணிக்கு 280 கிமீ எனும் அதீத வேகத்தில் இயங்க வைக்க உதவியாக இருக்கப் போகின்றது.

இந்த சிக்னல் சிஸ்டம் ஜப்பானிய டிஎஸ்-ஏடிசி (DS-ATC) இடமிருந்து வேறுபட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. 2027 ஆம் ஆண்டிற்குள் அதி வேக வந்தே பாரத் ரயில் சேவை இந்தியாவில் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இந்தியர்கள் மத்தியில் வந்தே பாரத் ரயில் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வரவேற்பை புதிய சிக்னலிங் சிஸ்டம் இரட்டிப்பாக்க பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றது. இதையே பலர் வியந்து பார்த்துக்கொண்டிருக்கின்ற சூழலில் மேலும் 100 கிமீ வேகத்தை ரயில்வே துறை அமைச்சகம் கூட்ட இருப்பது இந்திய தயாரிப்பான வந்தே பாரத் ரயிலுக்கு அதிகம் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கு ஏற்றதாக புல்லட் ரயில்கள் மாற்றப்பட்ட பின்னரே அவை பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகின்றது. இதற்கான பணிகளே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இ-10 சீரிஸ் ஷிங்கன்சன் (E-10 series Shinkansen) ரயில்கள் இந்தியன் புல்லட் ரயில் சேவையில் இயக்கப்பட இருக்கின்றன. இவற்றின் வருகை காலதாமதம் ஆகியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2025, 12:09 [IST]
English summary
India s bullet train plans delayed until 2030 vande bharat trains to serve interim needs
மேலும்... #bullet train #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+