மக்களை வாய் பிளக்க வைத்த குஜராத் தொழிலதிபர்! இவர் வாங்கிய காரின் விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மிகவும் விலை உயர்ந்த காரை, இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த திரைப்பட நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கோடிகளில் சம்பளம் பெறுவதால், விலை உயர்ந்த கார்கள் எல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணமாக இருக்கிறது. சினிமா நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது, தொழில் அதிபர்களும் கூட விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிக்கின்றனர்.

இந்த வரிசையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். இந்த காரின் விலை நமக்கு தலை சுற்றலை ஏற்படுத்துகிறது. இதனால் மட்டும் அவர் கவனம் பெறவில்லை. இந்தியாவில் இந்த காரை முதல் இந்தியர் அவர்தான். இந்த இரண்டு காரணங்களாலும்தான் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் மெவாடா. 2020 பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் (2020 Bentley Flying Spur) கார், தீபக் மெவாடாவிற்கு தற்போது டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை தொழில் அதிபர் தீபக் மெவாடா பெற்றுள்ளார்.

மூன்றாம் தலைமுறை பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் அல்ட்ரா-லக்ஸரி சலூன், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அப்போதே இந்த கார் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிற தொடங்கியது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை குறி வைத்து, புதிய அவதாரத்தில் பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் கார் களமிறக்கப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ் மற்றும் டெக்னாலஜி என அனைத்து அம்சங்களிலும் புதிய பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. ப்ளையிங் ஸ்பர் காரின் 2020 வெர்ஷனானது, அதன் முன்னோடியுடன் பெயரை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளதாக பென்ட்லீ நிறுவனம் கூறியுள்ளது. ஏனெனில் இந்த காரில் சேஸிஸ் முற்றிலும் புதியது.

2020 ப்ளையிங் ஸ்பர் காருக்கு பென்ட்லீ நிறுவனம் முன்பதிவுகளை ஏற்று கொள்ள தொடங்கிய உடனேயே, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் இதன் முன்னோடியை காட்டிலும் அனைத்து விதங்களிலும் புதிய ப்ளையிங் ஸ்பர் கார் சிறப்பாக உள்ளது. இந்த சூழலில்தான், தீபக் மெவாடாவிற்கு 2020 ப்ளையிங் ஸ்பர் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் அரை ஆண்டு காத்திருந்து தீபக் மெவாடா இந்த காரை டெலிவரி பெற்றுள்ளார். 2020 ப்ளையிங் ஸ்பர் காரை, தொழில் அதிபர் தீபக் மெவாடாக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்டர் செய்தார். ஏறத்தாழ 6 மாதங்களுக்கு பின் அவருக்கு தற்போது கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 2020 பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் காரில், 6.0 லிட்டர், ட்வின்-டர்போ டபிள்யூ12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

Image Courtesy: Hrishi Raj Photography/Instagram
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 635 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. 8 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் மூலமாக நான்கு சக்கரங்களுக்கும் பவர் செலுத்தப்படுகிறது. இந்த காரின் எடை தோராயமாக 2.5 டன்கள் என்ற போதிலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டி விடும்.

Image Courtesy: Supercars in Gujarat
இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 333 கிலோ மீட்டர்கள். டபிள்யூ12 பவர் ட்ரெயின் மட்டுமல்லாது, 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 மற்றும் 3.0 லிட்டர் ட்வின்-டர்போ ஹைப்ரிட் வி6 வேரியண்ட்களையும் வருங்காலத்தில் வழங்க பென்ட்லீ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தொழில் அதிபர் தீபக் மெவாடா வாங்கியுள்ள 2020 பென்ட்லீ ப்ளையிங் ஸ்பர் காரின் விலை எவ்வளவு தெரியுமா? 5.60 கோடி ரூபாய்.

Image Courtesy: Supercars in Gujarat
இது ஆன் ரோடு விலையாகும். இந்த காரில் ஏற்கனவே ஏராளமான வசதிகள் உள்ளன. அதனுடன் கூடுதலாக ஒரு சில வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சாலையில் சீறிப்பாயும் இந்த சொகுசு கார், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் என்பதில் சந்தேகமில்லை. இந்த காரில் தீபக் மெவாடா பாதுகாப்பாக பயணிக்க வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications








