மும்பையை தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு விரைவில் அறிமுகமாகும் ஏசி ரயில்கள்..!!
மும்பையை தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு விரைவில் அறிமுகமாகும் ஏசி ரயில்கள்..!!
இந்தியாவின் முதல் ஏ.சி புறநகர் ரயில் சேவை மும்பையில் இன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து இது சென்னைக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக தலைநகரான சென்னை உட்பட மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்ல மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் சேவையை மேலும் மேம்படுத்தும் விதமாக, மும்பையின் சர்ச்கேட் - பொரிவ்லி இடையே ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் போல தானியங்கி கதவு மற்று குளிர்சாதன வசதி கொண்ட 12 பெட்டிகளுடன் இந்த புறநகர் ஏசி ரயில் இயக்கப்பட்டுகிறது.

சர்ச்கேட் - பொரிவ்லி பாதையை தொடர்ந்து மும்பையின் பிற புறநகர் வழிகளிலும் ஏசி ரயில் சேவை மேம்படுத்தவுள்ளது.
இருந்தாலும் சாதரண ரயில் மற்றும் ஏசி ரயில்களுக்கு பயணச்சீட்டு விலையில் மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video


முதற்கட்டமாக மும்பையில் அறிமுகமாகியுள்ள புறநகர் ஏசி ரயில் சேவை தொடர்ந்து சென்னை, கொல்கத்தா, செகந்திரபாத் நகரங்களிலும் அறிமுகமாகவுள்ளது.

2019 முதல் 2020ம் ஆண்டிற்குள் நாட்டில் இயங்கும் அனைத்து மின்சார ரயில் சேவைகளும் ஏசி வசதி மற்றும் தானியங்கி கதவுகளுடன் தயாரிக்கப்படவுள்ளது.

அது சென்னை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களுக்கும் அறிமுகப்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு பேருந்து, வாகன தேவைகளை விட மின்சார ரயில் சேவை பேரூதவியாக இருந்து வருகிறது.

குறிப்பாக தரை வழி மார்க்கம் மட்டுமின்றி, பாலத்தின் வழியாகவும் சென்னையில் மின்சார ரயில் சேவை பறக்கும் ரயில் என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது மெட்ரோ இருந்தாலும், சென்னையை பொருத்தவரை புறநகர் ரயில் போக்குவரத்து தான் பெரிய கட்டுபடியாக உள்ளது.

தொடர்ந்து தற்போது புறநகர் ரயில் சேவை ஏசி வசதிக்கொண்டு அறிமுகமானலும், பழைய ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ள புறநகர் ஏசி ரயில் பெட்டிகள் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








