இந்தியாவில் முதல்முறையாக விபத்தில் சிக்கிய அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டருக்கு ஏற்பட்ட கதி இதுதான்..

Written By:
Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

சமீபத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒன்றில், காருடன் மோதிய ஸ்போர்ட்டி திறன் பெற்ற அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர் மிகுந்த சேதாரத்தை சந்தித்துள்ளது.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

விபத்தில் சேதமடைந்த கார் மற்றும் ஸ்கூட்டரை பார்க்கும் போது பகீர் என்றாலும், அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டரை ஒட்டி சென்ற கணவன் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த மனைவி இருவரும் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினர்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

இந்த விபத்தில் அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டருடன் மோதிய கார் டாடா டியாகோ மாடலாகும். ஸ்கூட்டர் மோதிய வேகத்தில் டியாகோ கார் அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

இதில் அந்த காரின் முன்பகுதி வளைர்ந்து நெளிந்து முற்றிலும் சிதைந்துவிட்டது. மோதிய வேகத்தில் ஏர் பேகுகள் திறந்ததுக்கொண்டதால் டியாகோ காரிலிருந்தவர்கள் உயிர் தப்பினர்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

தொடர்ந்து விபத்து காரணமாக வின்ட்ஸ்கீரினில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால், காரிலிருந்தவர்கள் சீட் பெல்டு அணியாமல் பயணித்தது தெரிய வந்தது. இருந்தாலும் சில ஆதாரங்கள் சீட் பெல்டு குறித்த கருத்தை மறுக்கின்றன.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

அதேபோல அப்ரிலியாஎஸ்.ஆர் 150 ஸ்கூட்டரில் வந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

ஆனால் விபத்தில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் பயணிகள் உயிர் தப்பிய நிலையை பார்க்கும் போது, ஸ்கூட்டரில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

பொதுவாகவே இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகம், உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த நடைமுறையை போக்குவரத்து போலீசார் கட்டாயமாக்கி வருகின்றனர்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

தற்போது கர்நாடகா அரசு, ஐஎஸ்ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்டுகளை மட்டுமே வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

இதன்மூலம் தொப்பி வடிவிலான ஹெல்மெட்டுகள் போன்ற தரமற்ற தயாரிப்புகள் குறைந்த விலை தயாரிப்புகளுக்கு அம்மாநில அரசு முடிவு கட்டியுள்ளது.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

நாட்டில் உள்ள அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், ஹெல்மெட் அணிந்து பைக் மற்றும் ஸ்கூட்டர்களை இயக்குவதை தங்களுக்குள் கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

இருசக்கர வாகன ஓட்டிகளில் பலர் ஹெல்மெட் பயன்படுத்தாமல் சாலையில் செல்வதை விட, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

கொஞ்சம் கேட்பதற்கு சந்தேகமாக இருந்தாலும் இது தான் நிதர்சனம். காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்டு அணிந்துதான் பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வே பெரும்பாலனவர்களிடம் இருப்பதில்லை.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

தற்போது கார் வைத்திருக்கும் பலருக்கு அவசர காலத்தில் கார்களில் ஏர்பேகுகளில் செயல்பாடு சரியாக இருந்தாலே போதும், அதை தாண்டி முக்கிய அம்சங்கள் மீது கவனமிருப்பதில்லை.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

விபத்திற்கான சூழ்நிலை அமைந்தால், காரில் நீங்கள் சீட் பெல்டு அணிந்திருந்தால் மட்டுமே ஏர்பேகுகளின் செயல்பாடு பயன் தரும்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

கார் எதாவது மீது விபத்து நடந்தால், அதனால் உருவாகும் விசை காரினுள் இருப்பவர்களை முன்நோக்கி அழுத்தும். அந்த அழுத்தத்தை கடத்தும் விதமான இன்னும் அதிக விசை கொண்டு ஏர்பேகுகள் திறக்கும்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

அப்போது காரினுள் இருப்பவர்கள் பின்னோக்கி படுவேகமாக தள்ளப்படுவார்கள். இதனால் கட்டாயம் சீட் பெல்டு அணிந்திருக்க வேண்டும்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

இல்லையென்றால் ஏற்கனவே உருவான விசையுடன், ஏர் பேகுகள் திறந்த பிறகு உருவாகும் அழுத்தம் காரினுள் இருக்கும் பயணிகளுக்கு பெரிய பாதிப்பை தரும்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

இதை கருத்தில் கொண்டு தான், சில கார் மாடல்களில் அவசர நிலை ஏற்படும் போது, கார் பயணிகள் சீட் பெல்டு அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேகுகள் செயல்படும்.

சாலை விபத்தில் சிதைந்து போன அப்ரிலியா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டர்

இன்றைய சாலை போக்குவரத்து நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்ட வருகிறது. அதை உணர்ந்து உங்களுக்கும், உங்களை சாந்தவர்களின் மத்தியிலும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்லது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: India's First Aprilla Scooter Accident Collides With Tata Tiago. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark