இந்தியாவின் முதல் ஆல் வீல் டிரைவ் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய மாணவர்!
இந்தியாவின் முதல் ஆல் வீல் டிரைவ் மோட்டார்சைக்கிளை குஜராத்தை சேர்ந்த பொறியியல் துறை மாணவர் உருவாக்கி இருக்கிறார்.
புதிய வாகன தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான வாகனங்களை உருவாக்குவதில் இப்போது மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், குஜராத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் பழைய மாருதி 800 காரை இருசக்கர வாகனமாக மாற்றி அசத்தி இருக்கிறார்.

குஜராத்தை சேர்ந்த ரஸ்பெக்கிற்கு [வயது 20] சிறு வயதிலிருந்தே வாகனங்கள் மீது தீராத ஆர்வம் இருந்துள்ளது. தனது தந்தையின் டீசல் மோட்டார்சைக்கிள் மற்றும் 100சிசி மோட்டார்சைக்கிள்களில் கஸ்டமைஸ் செய்வதையும் பொழுதுபோக்காக வைத்திருந்தார்.

மேலும், வாகன உலகில் தனது பெயர் பேசப்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு புதுமையான விஷயங்களிலும் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில், காயலாங்கடைக்கு செல்லும் நிலையில் இருந்த ஒரு மாருதி 800 காரை பிரித்து அதனை புதிய வாகனமாக உருமாற்ற முடிவு செய்தார்.

அதன்படி, அந்த பழைய மாருதி 800 கார் எஞ்சினுடன் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறார். பார்ப்பதற்கு க்வாட் பைக் போன்று இருக்கிறது. மோட்டார்சைக்கிள் போன்று கைப்பிடிகள், இரண்டு கார் டயர்களை கொடுத்து பிரம்மாண்டமான இருசக்கர வாகனமாக மாற்றி இருக்கிறார்.

இதற்கு ஹாமர்ஹெட் 800 என்று பெயரிட்டு அழைக்கிறார். இந்த மோட்டார்சைக்கிள் எஞ்சின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஒரு ரிவர்ஸ் கியர் கொண்டதாக இருக்கிறது. இந்த கியர்பாக்ஸின் ரேஷியோவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் ஹப்- ஸ்டீயரிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், முன்புறம் மற்றும் பின்புறத்தில் டபுள் ஸ்விங் ஆர்ம் அமைப்பு இடம்பெற்று இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் மோட்டார்சைக்கிள் என்பதற்கான அடையாளமான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்ககிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளுடூத் வசதியும் இருக்கிறது. மொத்தத்தில் இது இருசக்கரத்தில் ஓடும் கார் போலவே தோன்றுகிறது.

இந்த மோட்டார்சைக்கிளுக்கு 2017 இந்திய பைக் வீக் திருவிழாவில்சிறந்த மேக்கோ பைக் என்ற விருதை வென்றதும் நினைவிருக்கலாம். இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்க ஓர் ஆண்டு பிடித்ததாக ரஸ்பெஹ் தெரிவித்துள்ளார்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த மோட்டார்சைக்கிளுக்கு சர்வதேச புவிசார் குறியீட்டு கழகத்திடமிருந்து காப்புரிமை பெறப்பட்டு இருக்கிறது. இந்திய சாதனை புத்தகத்திலும் இவரது மோட்டார்சைக்கிள் இடம்பிடித்துவிட்டது.

தற்போது மூன்றாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பு டித்து வரும் ரஸ்பெஹ் இந்த அங்கீகாரங்களால், இதுபோன்ற பல புதிய வாகனங்களை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார். பல புதுமையான வாகன தொழில்நுட்பங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications