இந்தியாவின் முதல் புல்லட் ரயிலில் உள்ள ஆச்சர்யப்படுத்தும் சிறப்பம்சங்கள்..!!

Written By:

ரயில் பயணிகளின் வசதிக்காக முற்றிலும் புதிய கட்டமைப்புகளுடன் கூடிய கழிவறை அமைப்பு இந்தியாவின் புல்லட் ரயில் சேவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

இதுவரை இந்திய கண்டிராத ஆடம்பர வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பயணிகளுக்கான அடிப்படை தேவைகள் பலவும் புல்லட் இரயில் சேவையில் இடம்பெறவுள்ளன.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிவேக பயணங்களை தரும் புல்லட் ரயில் போக்குவரத்து சேவை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

இந்தியாவில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த புல்லட் இரயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

ஜப்பானிடம் இருந்து சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பில், 25 ஈ5 ஷிங்காசென் வகை புல்லட் ரயில்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை மும்பை முதல் அகமெதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் இந்தாண்டு செப்டம்பரில் தொடங்குகிறது.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

மொத்தம் 10 பெட்டிகள் கொண்ட 25 ஈ5 ஷிங்காசென் வகை புல்லட் ரயிலில் மொத்தம் 731 இருக்கைகள் இருக்கும்.

இதில் 698 இருக்கைகள் சாதரண வகுப்புகளுக்கும், 55 இருக்கைகள் பிசினஸ் கிளாஸ் வகுப்புகளுக்கும் இருக்கும்.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

மேலும், ஆண்கள், பெண்களுக்கான தனி கழிவறைகளும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த அதிக இடவசதியுடன் கூடிய கழிவறைகளும் இந்த ரயிலில் இருக்கும்.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவும், குழந்தைகளுக்கான நேம்கின் மாற்றவும், அதை அப்புறப்படுத்தவும் தனி தனி அறைகள் புல்லட் இரயிலில் இடம்பெறும்.

இதுபோன்ற அடிப்படை தேவைகளுடன் பெண்களுக்கான பிரத்யேக ஒப்பனை அறைகளும் புல்லட் ரயில் கட்டமைப்பில் இடம்பெறுகின்றன.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

மேலும் ஆண்கள் பெண்கள் என இரு பாலினத்தவர்களும் தனித்தனியே பயன்படுத்த வாஷ்பேஷின் அறைகளும் புல்லட் ரயில் சேவையில் உருவாக்கப்பட உள்ளது.

இவை தவிர குழந்தைகள் தங்கள் கைகளை கழுவிக்கொள்ள அவர்கள் அளவிற்கு ஏற்றவாறான வாஷ் பேஷின்களும் அமைக்கப்படுகின்றன.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

இதுபோன்ற நவீன கழிவறைகள் வசதிக்காக மட்டும் சுமார் பல கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, புல்லட் ரயில் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள மூத்த ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

மும்பை அகமெதாபாத் நகரங்கள் இடையே புல்லட் ரயில் சேவை அறிமுகமானால், இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள 508 கி.மீ தூரத்தை வெறும் 2 மணி நேரம் 7 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும்.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

இந்த வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள புல்லட் ரயில் பணிகளுக்காக இந்தியன் இரயில்வே சுமார் ரூ.9,800 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

மேலும் கட்டுமானத்திற்கு தேவைப்படும் நிதியை மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

புல்லட் இரயில் சேவையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் நாட்டி பிரதமர் ஷின்ஜோ அபே இணைந்து செப்டம்பரில் இந்தியாவின் முதல் புல்லட் இரயில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India's First Bullet Train Comes With Make Up Mirror and Breastfeeding Rooms. Click For More...
Story first published: Thursday, June 15, 2017, 11:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark