இந்தியாவின் முதல் ஆர்ஆர்டிஎஸ் ரயிலுக்கான பயண கட்டணம் இவ்ளோ கம்மியா! லோக்கல் ரயில்ல போறமாதிரி எல்லாரும் போகலாம்

ஆர்ஆர்டிஎஸ் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் நிலையில், அந்த ரயிலில் பயணிப்பதற்கு எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட இருக்கின்றது என்கிற விபரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் காணலாம், வாங்க.

இந்தியாவின் முதல் ஆர்ஆர்டிஎஸ் (RRTS) வகை ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. பிரதமர் மோடியே இந்த ரயிலைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றார். நாளைய (அக்டோபர் 20) தினமே அதனை நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக அவர் அர்பணிப்பு செய்ய இருக்கின்றார்.

Rrts ticket prices

ஆனால், இந்த புதிய ரயில் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று முதலே பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இந்த ரயிலுக்கு பயண கட்டணமாக எவ்வளவு ரூபாய் வசூலிக்கப்பட இருக்கின்றது என்கிற விபரமே தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வட்டார விரைவு போக்குவரத்து சிஸ்டம் (Regional Rapid Transit System) என்பதன் சுருக்கமே ஆர்ஆர்டிஎஸ் ஆகும். இந்த வகை ரயில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். டெல்லி - மீரட் ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலேயே இந்த ரயில் இயக்கப்பட இருக்கின்றது.

Rrts rapidx

தற்போது பயன்பாட்டில் இருக்கும் வழக்கமான ரயில்களைக் காட்டிலும் அதிக வேகத்தில் பயணிக்கும் ரயிலாக இதனை உருவாக்கி இருக்கின்றனர். அதேவேளையில், சொகுசான மற்றும் நவீன டிராவல் அனுபவத்தையும் இந்த ரயில் அதன் பயணிகளுக்கும் வழங்கும். இத்தகைய ரயிலுக்கே மிகவும் குறையான கட்டணத்தை இந்தியன் ரயில்வேஸ் தற்போது நிர்ணயம் செய்திருக்கின்றது.

ரூ. 20 ஆரம்ப கட்டணம் ஆகும். இதன் அதிகபட்ச கட்டணமே ரூ. 100தான் என கூறப்படுகின்றது. வெவ்வேறு வகையான வகுப்புகளின் கீழ் பயண டிக்கெட்டுகள் இந்த ரயிலுக்கு வழங்கப்பட இருக்கின்றன. ஸ்டாண்டர்டு கிளாஸ், பிரீமியம் கிளாஸ் ஆகிய வகுப்புகளின் கீழே டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதில் ஸ்டாண்டர்டு கிளாஸ்க்கான கட்டணமாக ரூ. 20 முதல் ரூ. 50 வரை மட்டுமே வசூலிக்கப்பட இருக்கின்றது. அதுவே, பிரீமியம் கிளாஸ்க்கு கட்டணம் ரூ. 100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்டாண்டர்டு கிளாஸ் அனைத்து தரப்பு மக்களும் ஆர்ஆர்டிஎஸ் ரயிலை பயன்படுத்தும் நோக்கிலேயே அரசு அறிமுகம் செய்திருக்கின்றது.

அதிக சொகுசான ரைடு பயணத்தை அனுபவிக்க விரும்புபவர்கள் ரூ. 100 கட்டணம் கொண்ட பிரீமியம் கிளாஸைப் பயன்படுத்தலாம். அதேவேளையில், சிலரால் இந்த ரயில் இலவசமாக பயணிக்கவும் முடியும். குறிப்பாக, 90 செமீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட சிறியவர்கள் மற்றும் குழைந்தைகளால் மட்டுமே இந்த ரயில் கட்டணம் இன்றி பயணிக்க முடியும்.

பிரீமியம் கிளாஸ்க்கான கட்டணம் ரூ. 40 முதல் ரூ. 100 ஆக பயண தூரத்தைப் பொருத்து வசூல் செய்யப்படும். இந்த ரயிலுக்கான டிக்கெட்டை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளும் வசதியையும் என்சிஆர்டிசி அறிவித்து உள்ளது. டிக்கெட் விற்கும் மெஷின்களில் யுபிஐ வாயிலாக பணத்தைச் செலுத்தி டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதியைகூட அறிவித்து இருக்கின்றனர்.

இதுதவிர, என்சிஎம்சி (National Common Mobility Card) கார்டு வாயிலாகவும் இந்த ரயிலில் பணத்தைச் செலுத்தி பயணிக்க முடியும். இந்த ஆர்ஆர்டிஎஸ் திட்டம் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் கூட்டு முயற்சியாகும். இந்த ரயிலை மேற்பார்வை செய்யும் பொருப்பு தற்போது என்ஆர்சிடிசி இடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.

முற்றிலும் மாறுபட்ட டிசைனிலேயே இந்த ரயில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. முதலில் ஆறு பெட்டிகளுடனேயே இந்த ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் ஒன்பது பெட்டிகளாக அதிகரிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதா என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஒய்-ஃபை போன்ற பன்முக அம்சங்கள் இந்த ரயிலில் இடம் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலின் ஆறு பெட்டிகளில் மொத்தம் 407 இருக்கைகள் இருக்கும். இதன் வாயிலாக சுமார் 1,500 பேர் வரை பயணிக்க முடியுமாம். மேலும், மெட்ரோ ரயிலைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் இது இயங்கும் என தெரிகின்றது. சராசரியாக மணிக்கு 100கிமீ முதல் 160கி.மீட்டர் வரையிலான வேகத்திலேயே அது இயங்க இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதி-நவீன ரயில்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கி இருக்கின்றது. இந்த முயற்சியின் ஓர் பகுதியாகவே விரைவில் டெல்லி - மீரட் இடையில் ஆர்ஆர்டிஎஸ் ரயில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த ரயிலில் எளிய மக்கள்களாலும் பயன்படுத்த முடியும் என தெரிகின்றது.

Article Published On: Thursday, October 19, 2023, 19:59 [IST]
English summary
India s first delhi meerut rrts ticket prices
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+