இந்தியாவின் முதல் தங்க நிறம் கொண்ட ஸ்கார்பியோ!.. இந்த கலரும் அதுக்கு செம்ம எடுப்பா இருக்கு!

இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ (Mahindra Scorpio) இருக்கின்றது. இந்த எஸ்யூவி (SUV) காருக்கு இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுதவிர நடுத்தர மக்களின் பிரியமான கார் மாடலாகவும் ஸ்கார்பியோ-க் காட்சியளிக்கின்றது.

இத்தகைய பிரபலமான மற்றும் பலரின் பிரியமான கார் மாடலையே அதன் உரிமையாளர் தங்க நிறத்திற்கு மாற்றி, அந்த காருக்கு தனி சிறப்பு சேர்த்திருக்கின்றார். இந்தியாவில் தங்க நிறத்தால் அலங்கரிக்கப்படும் முதல் ஸ்கார்பியோ கார் மாடல் இதுவே ஆகும். இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஸ்கார்பியோ இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Chrome gold color

ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) மற்றும் ஸ்கார்பியோ என் (Scorpio-N) ஆகியவையே அவை ஆகும். இதில், ஸ்கார்பியோ என் கார் மாடலே தங்க நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த தங்க முலாம் பூசப்பட்ட ஸ்கார்பியோ என் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான சன்னி வாச்சோர் மற்றும் சஞ்சய் குஜ்ஜார்-க்கு சொந்தமானது என கூறப்படுகின்றது.

இவர்கள் 'இந்தியாவின் தங்க நபர்கள்' (Golden Guys of India) என்கிற பெயரிலும் அறியப்படுகின்றனர். தங்கத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர்கள் தங்களிடம் இருக்கும் சில கார்களை ஏற்கனவே அவர்கள் தங்க நிறத்திற்கு அப்கிரேட் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Chrome gold mahindra scorpio n

இந்த நிலையிலேயே புதிதாக ஸ்கார்பியோ என் கார் மாடலையும் அவர்கள் தங்க நிறத்திற்கு மாற்றி இருக்கின்றனர். புதிய ஸ்கார்பியோ என் முழுவதுமாக தங்க நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. வீல், பம்பர், பான்னெட், கிரில், கதவுகள் மற்றும் ரூஃப் என அனைத்தும் தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.

ஏன் மஹிந்திரா சின்னம் மற்றும் கருப்பு நிற பாகங்கள் சிலவற்றையும் தங்க நிறத்தால் அவர்கள் அலங்கரித்திருக்கின்றனர். மேலும், பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடியையும் அவர்கள் விட்டு வைக்காமல் அதற்கும் தங்க நிறத்தை பூசியிருக்கின்றனர். இதை வைத்து பார்க்கையில் தங்கத்தின் மீது பற்றற்ற காதலை இந்தியாவின் தங்க நபர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

Chrome gold scorpio n rear

இதற்கு சான்றாக அவர்களிடத்தில் இன்னும் சில கார்களும் உள்ளன. இந்த நபர்கள் தங்களுக்கு சொந்தமாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்650 (Mercedes Maybach S650), ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் (Jaguar XJL), இரண்டு ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் ஹம்மர் எச்2 (Hummer H2) உள்ளிட்ட கார் மாடல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், ஆடி மற்றும் மெர்சிடிஸ் போன்ற சில கார் மாடல்களையும் அவர்கள் தங்க நிறத்திற்கு மாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இந்த நபர்களிடத்தில் ஃபோர்டு என்டீயோவர் (Ford Endeavour) கார் மாடலும் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், ஃபோர்டு என்டீயோவர் இப்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது.

விரைவில் இந்த காரை இறக்குமதி செய்து ஃபோர்டு நிறுவனம் எவரெஸ்ட் எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஸ்கார்பியோ கிளாசிக் ரூ. 11.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், ஸ்கார்பியோ என் ரூ. 16.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனத்தை உருவம் தெரியாத வண்ணம் மாடிஃபை செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய செயல் ஆகும். இந்த நபர்கள் ஸ்கார்பியோ என் காருக்கு செய்யப்பட்ட மாற்றம் பற்றிய ஆர்டிஓ-விடம் தெரிவித்து, ஆர்சி மாற்றம் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு செய்தால் மட்டுமே அந்த காரை சாலையில் வைத்து இயக்குவது அதிகாரப்பூர்வமானது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 14, 2024, 6:00 [IST]
English summary
India s first gold colored mahindra scorpio
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X