80 கோடி ரூபா செலவில் தயார் செய்யப்பட்ட ரயிலா இது!.. சென்னையில் தயாராகி வரும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்!

சிமெண்ட் கலவை பூசின மாதிரி இருக்கும் இந்த ரயிலை, என்ன ரயில் என உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா?.. இதுதான் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில். இந்தியாவில் சீக்கிரமே பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. பார்க்க இன்னும் நிறை வேலைகள் பெண்டிங் இருப்பதைப் போல தெரியலாம். ஆனால், இன்னும் ஒரு சில வேலைகள் மட்டுமே நிலுவையில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக பெயிண்ட்டிங் வேலை, ஹைட்ரஜன் சிலிண்டர்களை இணைக்கும் பணி மற்றும் டெக்னிக்கல் சார்ந்த சில வேலைகள் மட்டுமே இன்னும் நிறைவேறாமல் இருக்கின்றன.

சீக்கிரமே இந்த பணிகளும் நிறைவுற்றுவிடும் என கூறப்படுகின்றது. எனவே விரைவில் இதன் சோதனையோட்டம் நாட்டில் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. பெயிண்ட் வேலை செய்யப்படாத காரணத்தினாலேயே ரயில் பார்க்க சிமெண்ட் கலவை பூசப்பட்டதைப் போல தெரிகின்றது. இந்தியாவின் இந்த முதல் ஹைட்ரஜன் ரயில் உற்பத்தி பணிகள் சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி-யிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

India s first hydrogen train

Source: DTnext அங்கு ரயில் முழுமையாக தயாராகி நிற்கும் படமே தற்போது வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த ரயில் சோதனையோட்டத்திற்கு தயாராகிவிடும் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. ஹரியானாவிலேயே இந்த ரயில் சோதனையோட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதற்காக ஜிந்த் - சோனாபேட் வழித்தடம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

மணிக்கு 89 கிமீ வேகத்தில் இயக்கி இந்த ஹைட்ரஜன் ரயில் சோதனையோட்டம் செய்யப்பட்ட இருக்கின்றது. இந்த சோதனை ஓட்ட பணிகளும் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதே இந்த ஹைட்ரஜன் ரயில் ஆகும். இதற்காக 1,200 எச்பி திறன் கொண்ட மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. அங்கு மொத்தமாக ஐந்து பெட்டிகளுடன் மட்டுமே அவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் 10 கோச்களுடன் அது இயங்கும் என கூறப்படுகின்றது. இந்த பத்து பெட்டிகளும் பிரீமியம் டிராவல் அனுபவத்தை வாரி வழங்கக் கூடியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, உலக தரத்திற்கு ஏற்பவே இந்த ரயிலை இந்தியன் ரயில்வேஸ் தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்த ரயிலை இந்தியாவின் மலைப் பகுதியில் பயன்படுத்த அரசு திட்டமிட்டு இருக்கின்றது. சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டே இந்த ரயிலை அங்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக இந்த ஹைட்ரஜன் ரயில் இருக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், முதல் ஹைட்ரஜன் தெற்கு ரயில்வேவிலேயே பயன்படுத்தப்பட இருக்கின்றது. நாடு முழுக்க பயன்பாட்டிற்குக் கொண்டு வர மொத்தமாக 35 ஹைட்ரஜன் ரயில்கள் உற்பத்தி செய்ய ரயில்வே துறை அமைச்சகம் முடிவெடுத்திருக்கின்றது.

சுமார் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அவை உருவாக்கப்பட இருக்கின்றன. இதற்கான அறிவிப்புகள் சென்ற ஆண்டே அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது தயார் செய்யப்பட்டு இருக்கும் சோதனையோட்ட மாடல் சில முக்கிய ஆய்வுகளில் வெற்றிப் பெற்ற பின்னர் முழுமையாக திட்டமிடப்பட்ட அனைத்து யூனிட்டுகளையும் உற்பத்தி செய்ய ஐசிஎஃப் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது.

Take a Poll

இந்த பணிகள் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியர்களின் ஃபேவரிட் ரயிலாக வந்தே பாரத் ரயில் மாறி இருக்கின்றது. இதற்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே புதிய ஹைட்ரஜன் ரயிலுக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹைட்ரஜன் ரயிலுக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஆகையால், மலை பாதைகளில் மட்டுமின்றி வழக்கமான ரயில் தடங்களிலும் இந்த ரயில் சேவை எதிர்காலத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வந்தே பாரத் ரயிலைவிட மிக அதிக பிரீமியமானதாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

FAQs
தமிழகத்தில் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்படுமா?

இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி தமிழகத்திலும் இந்த ரயில் சேவைத் தொடங்கப்படும் என்பது தெரிகின்றது. நீலகிரியிலேயே அது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், டார்ஜிலிங், கல்கா-சிம்லா, கங்கரா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த ஹைட்ரஜன் ரயில் சேவைத் தொடங்கப்பட இருக்கின்றது.

எந்தெந்த நாட்டில் ஹைட்ரஜன் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது?

இங்கிலாந்து, சீனா மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளிலேயே ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நாடுகளின் வரிசையிலேயே இந்தியா விரைவில் இணைய இருக்கின்றது.

ஒரே நேரத்தில் எத்தனை பேரால் இந்த ரயிலில் பயணிக்க முடியும்?

ஒரே நேரத்தில் 2,500 பேர் வரை ஹைட்ரஜன் ரயிலில் பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. ஆனால், பயன்பாட்டிற்கு வந்த பின்னரே அது துள்ளியமாக தெரிய வரும். ஆனால், மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய இந்தியாவின் ஹைட்ரஜன் ரயில் இருக்கும் என கூறப்படுகின்றது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 14:44 [IST]
English summary
India s first hydrogen train set to launch by march 2025 with eco friendly features
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+