ஒரு டைம்ல பெங்களூருல 100 ரூபாக்கு முடி வெட்டினவர்.. இப்ப கோடி ரூபா கார கால் டாக்சிக்கு வாங்கி விட்டிருக்காரு!
டாக்சி சேவையில் டாடா கார்கள், மாருதி கார்களை பயன்படுத்தி நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒருவர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 (Land Rover Defender 130) காரை பயன்படுத்தி வருகின்றார். இந்தியாவில் விற்கப்படும் மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஓர் விலை உயர்ந்த சொகுசு கார் மாடல் மட்டுமல்ல அதீத திறனை வெளியேற்றக் கூடிய எஞ்சினைக் கொண்ட கார் மாடலும்கூட. இந்த காரில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இது அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் உருவாக்கும். இது ஓர் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் நான்கு சக்கர இயக்கி அமைப்புக் கொண்ட காரும்கூட. இந்த காருக்கு இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஏன் நம் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட இந்த கார் மாடலின் 5 கதவுகள் கொண்ட பதிப்பையே பயன்படுத்தி வருகின்றார். துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) தேர்வை அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இந்த அளவிற்கே இந்தியாவில் பலரின் பேராதரவைப் பெற்ற சொகுசு கார் மாடலாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் உள்ளது. இத்தகைய ஓர் காரையே கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் டாக்சியாக மாற்றி இருக்கின்றார். அவர் வேறு யாருமில்ல தொழிலதிபர் ரமேஷ் பாபு-தான் அவர் ஆவார்.
சிகை அலங்கார தொழிலில் கொடி கட்டி பறக்கும் நபர்களில் இவரும் ஒருவர் ஆவார். சமீபத்தில்கூட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை வாங்கியதன் வாயிலாக இந்த அளவில் இவர் டிரெண்ட் ஆகினார். இந்த நிலையிலேயே இந்தியாவின் விலை உயர்ந்த காரை டாக்சியாக மாற்றி மீண்டும் அவர் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
ரமேஷ் பாபு முடி வெட்டும் தொழிலை முக்கிய தொழிலாக மேற்கொண்டு வந்தாலும் அவர் அவருடைய பெயரில் ஓர் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் கம்பெனியையும் நடத்தி வருகின்றார். முன்னதாக இந்த தொழிலில் அவர் ஆம்னி காரையே ஈடுபடுத்தி வந்தார். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.
இதன் விளைவாக 2004 ஆம் ஆண்டில் அவர் சுமார் 7 கார்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தியிருக்கின்றார். தற்போது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 காரையே டாக்சி சேவையில் ஈடுபடுத்தும் அளவிற்கு அவர் வளர்ந்திருக்கின்றார். மேலும், இப்போதைய நிலவரப்படி சுமார் 200 கார்களை அவர் தன்னுடை வாடகை வாகன தொழிலில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றார்.
சிகை அலங்கார தொழிலில் மட்டுமின்றி அவர் வாடகை வாகன தொழிலிலும் மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றார் என்பது இதன் வாயிலாக தெளிவாக தெரிகின்றது. இதனால்தான் தற்போது தன்னுடைய வாடகை வாகன சேவையில் அதிகளவில் சொகுசு வாகனங்களை அவர் ஈடுபடுத்தத் தொடங்கி இருக்கின்றார்.
கால் டாக்சியாக இருந்தாலும் அதற்கு அவர் ஃபேன்சி எண்ணையே பயன்படுத்தி இருக்கின்றார். '0006' எனும் பதிவெண்ணே அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 கார் டாக்சியாக பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இதனால்தான் பலரும் ரமேஷ் பாபு-வை தற்போது மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ரமேஷ் பாபு தன்னுடை டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாயிலாக ரூ. 3 ஆயிரம் எனும் தொடக்க விலையில் இருந்து வாகனங்களை வாடகைக்கு விட்டுக் கொண்டிருப்பதாக தெரிகின்றது. ஆனால், இந்த சொகுசு காருக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது என்கிற விபரங்கள் தெரியவில்லை.
அதேவேளையில், இது இந்த காரின் மதிப்பை பார்த்தோமேயானால் ரூ. 1.50 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றது. இத்தகைய விலை உயர்ந்த ஆடம்பர காரையே அவர் வாடகை வாகன சேவையில் களமிறக்கி இருக்கின்றார். இந்க காரை மட்டுமில்லைங்க ரமேஷ் பாபு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), மெர்சிடிஸ் மேபேக் (Mercedes Maybach) போன்ற கார்களையும் தன்னுடைய வாடகை வாகன சேவையில் இணைத்துள்ளார்.
மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் (Mercedes Benz G-Wagen), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் (Mercedes Maybach S-Class), டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Land Cruiser LX200), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7-series) மற்றும் பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) போன்ற கார்களையும் வாடகைக்கு வழங்கி வருகின்றார்.
இதுதவிர, மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் (Mercedes S-Class), இ-கிளாஸ் (E-Class), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் வால்வோ கார்களையும் (Volvo cars) அவர் வாடகைக்கு வழங்கி வருகின்றார். இதேபோல், டொயோட்டா கேம்ரி (Toyota Camry), ஹோண்டா அக்கார்டு (Honda Accord) மற்றும் ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) உள்ளிட்ட கார்களும் அவரிடத்தில் வாடகைக்குக் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முடி வெட்டும் தொழில் மற்றும் வாடகை வாகன தொழில் என இரண்டிலும் ரமேஷ் பாபு கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றார். இவர் சில விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கே மிகவும் குறைவான கட்டணமே வசூலிப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே பலரும் இவரை இப்போதும் தேடி செல்வதாகக் கூறப்படுகின்றது. இதனால்தான் சமீபத்தில்கூட ஒரே நேரத்தில் மூன்று பென்ஸ் இ-கிளாஸ் கார்களையும் அவர் வாங்கினார்.


Click it and Unblock the Notifications








