வால்வோ பேருந்துகளில் பயன்படுத்தப்படும் சஸ்பென்ஷனை ஆல்டோ காரில் பொருத்தியிருக்காங்களா.. இதுவே முதல் கார்!
சொகுசான டிராவலுக்கு பெயர்போனதாக வால்வோ பேருந்துகள் அறியப்படுகின்றன. இதில் பயணிக்கும்போது கப்பலில் மிதக்கின்ற மாதிரியான அனுபவம் கிடைக்கும். இதனால்தான் பலர் வெளியூர் பயணங்களுக்கு வால்வோ பேருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். வால்வோ பேருந்துகளில் இத்தகைய சொகுசான டிராவல் அனுபவம் கிடைப்பதற்கு அதன் சிறந்த சஸ்பென்ஷன் சிஸ்டமே காரணமாக உள்ளது. ஏர் சஸ்பென்ஷன் (Air Suspension)-னே அதில் பயன்படுத்தப்படுகின்றன. இது வால்வோ பேருந்துகளில் மட்டுமல்ல சில உயரிய ஆடம்பர வகை கார்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சஸ்பென்ஷனையே மாருதி ஆல்டோ 800 (Maruti Alto 800) கார் உரிமையாளர் ஒருவர் தன்னுடைய காரில் பொருத்தி இருக்கின்றார்.
கோவாவிலேயே இந்த சிறப்பான சம்பவம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இதன் உயரம் மற்றும் கிரவுண்டு கிளியரன்ஸை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஏர் சஸ்பென்ஷன் கேரளாவில் உள்ள நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏர் 1 கஸ்டம்ஸ் (Air 1 Customs) எனும் நிறுவனமே இதனைத் தயார் செய்து கோவாவில் உள்ள நபருக்கு வழங்கி இருக்கின்றது.

இதன் மதிப்பு மட்டுமே 1.5 லட்சம் என கூறப்படுகின்றது. ஆகையால், ஆல்டோ 800 பலமடங்கு காஸ்ட்லியான காராக மாறி உள்ளது. இந்த காரில் சஸ்பென்ஷன் அமைப்பு மட்டுமே மாற்றப்படவில்லை. அதன் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார்களில் பயன்படுத்தப்படும் 15 அங்குல அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இதற்கு முன்பு இந்த காரில் 12 அங்குல வீலே பயன்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது பயன்படுத்தப்பட்டு இருக்கும் 15 அங்குல அலாய் ஆல்டோ காருக்கு மிகுந்த அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்துடனேயே டிராவல் அனுபவத்தை வேற லெவலுக்கு மேம்படுத்தும் விதமாக உயர் வகை காற்றோட்டம் கொண்ட ஏர் ஃபில்டர் மற்றும் சிறந்த எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இது எஞ்சின் சத்தத்தை ரம்மியமானதாக மாற்றி இருக்கின்றது என்றே கூறலாம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் ரேஸ் காரை போன்ற எக்சாஸ்ட் சத்தம் ஆல்டோவில் வர தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் இத்தகைய தரமான மாற்றத்தைப் பெறும் முதல் ஆல்டோ கார் மாடல் இதுவே ஆகும். குறிப்பாக, ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பெரும் முதல் ஆல்டோ 800 இதுவே ஆகும்.
இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாக மாருதி ஆல்டோ 800 உள்ளது. ஆனால், இந்த கார் மாடல் இப்போது விற்பனையில் இல்லை. 1980 மற்றும் 1990-களில் விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருந்த ஓர் கார் மாடலே இதுவாகும். சொல்லப்போனால் இந்தியாவில் பலருக்கு இதுவே முதல் கார் மாடல் ஆகும்.
ஏன் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் மாடலே ஆல்டோ 800தான். இத்தகைய ஓர் கார் மாடலையே கோவாவைச் சேர்ந்த ஓர் நபர் ஆடம்பர கார்களுக்கு இணையான சொகுசு டிராவலை வழங்கக் கூடியதாக மாற்றியிருக்கின்றார். குறிப்பாக, கேரளாவில் இந்த கார் பயன்பாட்டாளர்கள் மிக அதிக அளவில் தென்படுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆல்டோ 800, குட்டியான உருவம் மற்றும் அதிகம் மைலைஜ் தருவதற்கு பெயர்போன வாகனமாக அறியப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, இதை பராமரிக்கவும் மிகவும் குறைவான செலவே ஆகும். இதனால்தான் இந்திய நான்கு சக்கர வாகன உலகின் சூப்பர் ஸ்டார் கார் மாடலாக ஆல்டோ 800 அறியப்பட்டது. இப்போது இந்த கார் மாடலுக்கு பதிலாக ஆல்டோ கே10 விற்பனையில் உள்ளது. இதன் விலை ரூ. 3.98 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.


Click it and Unblock the Notifications








