திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

மஹாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் ரிலையன்ஸ் ரீடெயில் (Reliance Retail) நிறுவனம், புதுமையான திரையரங்கத்தை திறக்க இருக்கின்றது. அது என்ன தியேட்டர் என்பது பற்றிய முக்கிய விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

நாட்டின் முதல் ரூஃப்டாப், திறன் காற்று வசதிக் கொண்ட வசதிக்கொண்ட டிரைவ்-இன் தியேட்டரை ரிலையனஸ் ரீடெயில் நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் நாட்டின் முதல் மேற்கூரையில்லா திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்கத்தை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்திற்கு சொந்தமாக 'ஜியோ வேர்ல்ட் டிரைவ்' எனும் பிரீமியம் தர ஷாப்பிங் மால் மும்பையில் உள்ளது.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

இந்த ஷாப்பிங் மாலிலேயே புதிய திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்கம் திறக்கப்பட இருக்கின்றது. வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 5) அன்று இத்திரையரங்கம் திறக்கப்பட இருப்பதாக ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கின்றது. இந்த திரையரங்கத்தை பிவிஆர் சினிமாஸ் ஆபரேட் செய்ய இருக்கின்றது.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

காருக்குள் இருந்தபடியே திரைப்படங்களை ரசிக்கும் வசதியை வழங்கும் ஓர் திரையரங்கமே டிரைவ்-இன் தியேட்டர் ஆகும். இத்தகைய ஓர் திரையரங்கத்தையே ரிலையன்ஸ் ரீடெயில் இந்தியாவில் மிக விரைவில் திறக்க இருக்கின்றது. இந்த திரையரங்கத்தில் ஒரே நேரத்தில் 290 கார்கள் பங்கேற்கும் வகையில் இட வசதியைக் கொண்டிருக்கின்றது.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

இத்தனை கார்களைக் கருத்தில் கொண்டு மிக பெரிய திரை இந்த தியேட்டரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. ஆகையால், மிகப்பெரிய திரையைக் கொண்ட தியேட்டராகவும் இது விளங்கும். தொடர்ந்து, பிவிஆர் சினிமாஸ் தனது கான்செப்ட் திட்டமான மைசன் பிவிஆர் (Maison PVR) இங்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

மல்டிப்ளக்ஸ் தியேட்டர், பிரிவியூ தியேட்டர் மற்றும் விஐபி விருந்தாளிகளுக்கான தனி நுழைவு வாயில் என பல்வேறு வசதிகளை பிவிஆர் ஏற்படுத்தித் தர இருக்கின்றது. ஜியோ வேர்ல்டு டிரைவ் மாலானது சுமார் 17.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மும்பையின் மிகப் பெரிய வர்த்தக வளாகங்களில் இதுவும் ஒன்று. இங்கு சர்வதேச மற்றும் இந்தியாவின் பிரீமியம் தர தயாரிப்புகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

நவீன கால வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு ஜியோ வேர்ல்டு டிரைவ் உருவாக்கப்பட்டிருப்பதாக ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் இயக்குநர் இஷா அம்பானி தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி மற்றும் அலாதியான அனுபவத்திற்கு இந்த மாலில் சற்றும் குறைச்சல் இருக்காது என்பதையும் அவர் தெரிவித்தார்.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், இந்தியாவில் திறந்தவெளி ரூஃப்-டாப் டிரைவ் இன் தியேட்டர் பயன்பாட்டிற்கு வருவது இதுவும் ஓர் காரணமாக உள்ளது. உணவகம் தொடங்கி மருத்துவ பரிசோதனைகள் வரை பல டிரைவ்-இன் நடைமுறைக்கு அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றன.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

வாகனங்களை விட்டு கீழே இறங்கமாலே பயன்பெற இவை உதவுகின்றன. அதாவது, வாகனத்தில் இருந்தபடியே தேவைப் பூர்த்தி செய்துகொள்ள இவை உதவுகின்றன. இந்த மாதிரியான ஓர் திரையரங்கமாகவே ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் இந்த டிரைவ்-இன் திரையரங்கம் செயல்பட இருக்கின்றது.

திரைப்பட பிரியர்களுக்காக விநோதமான தியேட்டரை திறக்கும் ரிலையன்ஸ்... இதுவே நாட்டின் முதல் தியேட்டர்!

திரையரங்கங்கத்திற்கும் வரும் விருந்தாளிகளுக்கு தேவையான தின்பண்டங்கள் மற்றும் பிற சேவைகள் அனைத்தும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், பார்வையாளர்கள் காரை விட்டு இறங்க வேண்டிய அவசியமே இருக்காது என்பது தெளிவாக தெரிகின்றது. வாடிக்கையாளர்களுக்கான உணவு மற்றும் பாணங்களை வழங்குவதற்காக ரிது டால்மியா உடன் கூட்டணியைத் தொடங்கியுள்ளது. இத்தாலியன் போன்ற பல்வேறு ரக உணவுகளை இது வழங்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India s first open air roof top drive in theatre set to open in mumbai
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X